ஊடுருவல்.

எஸ். வைதேஹி.


காற்றின் வீசல்
ஜன்னல் தாண்டி
என்
முகம் அறைந்து
சாயல் ஈர்த்துக்
கொண்டது.

உருவமற்ற
முகத்தினூடே
விடைபெற்றுக்
கொண்டது,
இடுக்குகளில்
தொங்கிய
உணர்ச்சியற்ற
எண்ணங்கள்.

கடிகாரம் உருட்டிடும்
காலைப் பொழுதுக்கான
மற்றைய
மன அழுத்தங்களை.

அப்பால் விரிந்திடும்
மனங்களும், பறவைகளும்.

***
svaidehi@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 27 in the series 20020629_Issue

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

You may also like...