ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணைக் குழு

தேவமைந்தன்


‘சாறாயக் ‘கடையின் கவாப்புக்கு
மூலப்பொருள்களை வழங்கி
(ஆகக்குறைந்த விலையில்தான்)
வாழாமல் வாழும்
குருவிக்காரன் இஞ்ஞாசி
போன ஞாயிற்றுக்கிழமை
காலைக் கருக்கலிலேயே வந்து
வேலாயி குடிசைச் சூழலில்
மெளனமாய் நின்றிருக்கும்
கொடுக்காய்ப் புளிமரத்தின்
உச்சிக்கொம்பின் நுனியில்
ஏதோ நினைவாய்க்
குந்தியிருந்த காக்கை ஒன்றை
மல்லாக்கத் தரைமீது
உயிர்விட்டு வீழப்பண்ண;
எங்கெங்கிருந்தோ
எந்தெந்த மரக்கொப்புகளிலிருந்தோ
பறந்துவந்த காக்கைகள் சூழ்ந்து
ஒவ்வொரு மரத்துப் பாதுகாப்புயரங்களிலும்
குந்திக் கொண்டு
ஓயாமல் கரைந்து தீர்த்தன.
காக்கைக் கூச்சல் தாங்காமல்
வெளியே வந்த வேலாயி
கீழே கிடந்த காக்கையைத்
தாள்சுற்றி எடுத்துக் கொள்ளச் சொல்லி,
‘ ‘இனிமேல் இங்கேநீ வராதே இஞ்ஞாசி
பார்மேலே சுற்றுமுற்றும் காக்கைகள் படுவதை
போ வராதே போ ‘ ‘என விரட்டினாள்.
தாள்சுருட்டலில் – வீழ்ந்த காக்கை
பொட்டலமானபின், அங்கங்கு
குந்திக் கதறிய காக்கைகள்
‘தத்தம் இடம் சார்ந்தன. ‘
ஞாபகம் வந்தது, நேற்றைக்கு இங்கு
ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தலைமையில்
விசாரணைக் கமி ?ன் நடந்தது.
****
pasu2tamil@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 43 in the series 20051028_Issue

தேவமைந்தன்

தேவமைந்தன்

You may also like...