காரைக்குடி கம்பன் கழகத்தின் புதுமையான முயற்சி

சேதுபதி சேதுகபிலன்


காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பாக சென்ற ஆண்டு முதல் மாதக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மாதக் கூட்டங்களில் கம்பன் பற்றிய ஆய்வுரைகள் பல அறிஞர்களால் வழங்கப் பெற்று வருகின்றன.

மாதக் கூட்டம் ஆரம்பிக்கப் பெற்று ஓராண்டு நிறைவு பெற்றதைக் கொண்டாடும் வகையில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்படுகிறது. சென்னை நந்தனம்கல்லூரியின் தமிழ்த்துறை இணைப்பேராசிரியர் முனைவர் ந. சேஷாத்திரி அவர்கள் தன் தாயார் ஸ்ரீ பெரும் புதூர் கோ. வேதவல்லி அவர்கள் நினைவாக இந்த அறக்கட்டளையை நிறுவியுள்ளார்.

இதுவரை கம்பன் ஆய்வு நிகழாத துறையில் சிறந்த அறிஞரைக் கொண்டு செய்யப்படும் இப்பொழிவு நூலகவும் அன்றே வெளிவருகிறது. வரும் ஜூன் மாதம் 4 ஆம் தேதி சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு முனைவர் சொ. சேதுபதி அவர்கள் கம்பனைச் சுற்றுச் சூழல் நோக்கில் ஆராய்ந்து கம்பன் காக்கும் உலகு என்ற தலைப்பில் உரையாற்றுகிறார். அந்த உரை நூல் வடிவில் அன்றே வெளியிடப் படுகிறது. சென்னை பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிடும் கம்பன் காக்கும் உலகு என்ற ஆய்வு நூலை வெளியிட்டு இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் பேசுகிறார். ஆழ்வார் அடியார் பரகாலன் தலைமை ஏற்க கம்பன் அடிசூடி வரவேற்று விழாவை நெறிப்படுத்துகிறார்.. பலர் இவ்விழாவில் கலந்து கொள்ள உள்ளனர்
காரைக்குடி கம்பன் மணிமண்டப அரங்கில் நடைபெறவுள்ள இந்நிகழ்விற்கு வருகை தர வேண்டுகிறோம்.
அழைப்பு இத்துடன் இணைக்கப்பெற்றுளது.


Series Navigation<< இவர்களது எழுத்துமுறை – 40 பி.எஸ்.ராமையா.பிறப்பிடம் >>

This entry is part 76 of 43 in the series 20110529_Issue

சேதுபதி சேதுகபிலன்

சேதுபதி சேதுகபிலன்