தமிழவன் கவிதைகள்-ஆறு

தமிழவன்


ஒரு ரோஜாத்தோட்டம்.
விழுகிறது,
மஞ்சளளவு இளம்வெயில்.

பறக்கும் வண்ணத்துப் பூச்சியின்
மெலிதான நிழல் பட்டு
ஆடுகிறது புல்லின் பச்சைநிறம்.

ஆழத்திலிருந்து பீறிடுகிறது
அழைப்பு.

மெதுவாய் நடைபயில்கிறது
அழுக்காடையுடன்
நேற்று அமர்ந்து அழுத
தீண்டத்தகாதவனின் ஆறாவது
குழந்தை.

மகம்மட்டும் தெரிவதே இல்லை
அவனை நான் உணர்ந்திடினும்
பாத நிழல் தொடர்ந்திடினும்.
—-
carlossa253@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 46 in the series 20040520_Issue

தமிழவன்

தமிழவன்

You may also like...