தேவையென்ன ?

பவளமணி பிரகாசம்


மலருக்கு மலர் தாவும் வண்டு
பலவித தேன் உண்டு கொண்டு
அதிலே நல்ல பொருள் உண்டு
பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு
அதுதான் மகரந்த வினியோகம்
மலர்கள் பெருகும் உபயோகம்.

மலர் தாவும் வண்டைப் போல்
மனிதர் செய்ய தேவையென்ன ?
ஆணோ பெண்ணோ மலரில்லை
சுவைத்து விட்டு வேறிடம் செல்ல
நல்லறத்தில் ஒருவனுக்கு ஒருத்தி
நிலைத்திருப்பதே திடமான புத்தி.

——
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்

You may also like...