பேராசை

மலிக்கா


இன்னொரு முறை
இருளுக்குள்
இருந்து பார்க்க ஆசை

இம்சைகளில்லா
இன்பங்களுக்குள்
இருந்து பார்க்க ஆசை

இறுக்க மூடியிருந்தும்
இருவிழிகளின் இடுக்கில்
ஒளிகளின்
ஊடுருவளிருந்ததே!

அவ்விருளை
அனுபவித்து ரசிக்க
அன்னையின் கருவறையில்

”மீண்டும்”

இன்னொரு முறை
இருந்து பார்க்க ஆசை
இமைகளைமூடி
இவ்வுலம் மறக்க ஆசை…

Series Navigation29 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 29 >>

This entry is part [part not set] of 37 in the series 20110306_Issue

பேராசை

ராம்ப்ரசாத்


சேமிப்பு என்பதாய்
ஒரு முகமூடியிட்டு
மெல்ல நுழைகிறது
பேராசை ஒரு சமயம்…

போட்டி என்பதாய்
திரைமறைவில் வளர்கிறது
பிரிதொருசமயம்…

ஓர் ஒழுங்கற்று
தாறுமாறாய்க்
கலைந்து கிடக்கும்
விருப்பங்களின் மேல்
நடை பழகுகிறது
அனேகந்தரம்…

பாராமுகமாகவே
கடந்து போகின்றன‌
பேராசையும் தன்னிரைவும்
எப்போது சந்தித்தாலும்…

போதுமென்கிற‌ கேட‌ய‌ங்க‌ளை
பேராசை ஈட்டிக‌ளால்
என்றுமே துளைக்க‌
முடிந்த‌தில்லை….

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

Series Navigation

This entry is part [part not set] of 24 in the series 20100326_Issue

பேராசை

கோமதி கிருஷ்ணன்


1. ஆசை எனக்கு பெரிய ஆசை,
பேராசையா தெரியவில்லை.

2. பெண்ணென்ற காரணத்தால், கருவிலேயே கருகச்செய்து,
பேணும் வயிறதனை, பற்றிஎரிய வைக்கும்
பேய்குணம் போகவேண்டுமென்ற ஆசை,
எனக்கு பேராசையா தெரியவில்லை.

3-பிஞ்சான மொட்டுக்களை, iஇடுப்பொடிய வேலை வாங்கி,
கஞ்சிக்கும் எட்டாத கூலியில் மக்கச்செய்யும்,
பாவிகளின் மனம், மாறவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.

4. கட்டாயக் கல்விக்கென்று, கோடிகளை சிலவழித்து,
எட்டவேண்டியவர்க்கு எட்டாமல், தட்டிச்செல்லும்
கெட்டவர்களின் மனம், மாறவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.

5. அறிவுக்கண்ணைத் திறக்கச்செய்ய, ஆத்மார்த்த ஆசான்கள்,
நாடெல்லாம் நிறைய வேண்டும் அவர்கள் வயிறும், உள்ளமும், வாடாமலிருக்கவேண்டும்.
சிறாற்களுக்கு, அறிவுடன் ஆசியும், கிட்டவேண்டுமென ஆசை,
பேராசையா தெரியவில்லை.

6. எழுத்தறிவில்லா ஏழைகளின், உழைப்பதனை, தனதாக்கி
கொழுக்கும் கயவர்தன் மனம் மாறி (அவர்கள்)
கொழுகொம்பாய், மாற வேண்டுமென ஆசை,
பேராசையா தெரிய வில்லை.

7. ஸரஸ்வதி ஆலயத்திலிஇiடம், கிடைத்த கண்மணிகள்,
‘சரச் ‘ஸிலும் ‘டிரக் ‘க்கதிலும், தடுமாறாமல்
‘ராகிங் ‘லும், பொலிந்திடாமல், பெற்றவர்கள் மனம் குளிர படித்துத்தேறி,
சொந்த நாட்டிர்க்கும் வீட்டிற்க்கும், உழைக்க வேண்டுமென்ற ஆசை,

பேராசையா தெரியவில்லை.

8. நாகரீகம், என்ற பேரில், நாணமின்றி திரியும் குணம்,
நஞ்சாக பரவ விட்டு, நாள்கடந்து நினைந்துருகி,
நடுக்கடலில், தத்தலிக்கும் நிலைமாறி, நாமெல்லாம், நிம்மதியாய் நிலையாய்
குடும்பவாழ்வு, வாழவேண்டுமென்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.

9. ஸ்ரீதேவியாய், மறுமகளை, ஆரத்தியுடன் அழைத்தபின்,
ஸ்ரீதனம் என்ற பேரில், சித்ரவதைசெய்ய்யாமல்
பெற்ற பெண்ணாய் பேணும் குணம், பெற்றவள்க்கு தொற்ற வேண்டுமென்ற ஆசை
பேராசையா தெரியவில்லை.

10- அளவாக பெற்றெடுத்து, வளமாக வாழ்வதர்க்கு,
அளவான ஆசையுடன் அஞ்சாமல் உழைத்த்திட்டால்
நன்மை பல பெறுவதுடன், நானிலத்தில் நம்பர் ‘ஒண் ‘ஆகிடலாம்
அறிவுமிகுந்த இiந்தியனால் என்ற ஆசை,
பேராசையா தெரியவில்லை.

11. வாக்குறிதிகளை வாரிவிட்டு, ஓட்டுவாங்கி, பதவிஏர்க்கும் எத்தர்கள்,
கொடுத்தவாக்கை பறக்க விட்டு, மனசாட்ச்சியை புதைக்காமல்,
நல்லவர்களாய் உழைக்க புத்தி, வரவேண்டுமென்றா ஆசை,
பேராசையா தெரியவில்லை.

12. நாட்டுப்பற்று, வீட்டுப்பற்று, நன்னடத்தை,
நாவடக்கம், நன்னெறி, நல்லுழைப்பும் சேர்ந்து விட்டால்,
நம் நாட்டை உலகமெல்லாம் புகழுமென்று ஆசை
பேராசையா தெரியவில்லை.
tpsmani@hotmail.com

Series Navigation

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

கோமதி கிருஷ்ணன்

கோமதி கிருஷ்ணன்

You may also like...