மதம்

ராமசிங் சாகல்


எத்தனையோ முறை அறைகூவிச் சொல்லிவிட்டான்

எனக்கு எந்த மதமும் கிடையாதென்று

கிராமத்து மக்கள் யாவரும்

நியமம் தவறாதவன் அவன் என்றனர்

ஆனால் எப்பொழுது அவன்

தலைப்பாகை கட்டிக்கொண்டு சென்றாலும்

அதை அவிழ்த்துவிட்டுப் போனாலும்

அவன் ஏதாவது ஒரு மதத்துடன்

இணைக்கப்பட்டுவிடுகிறான்

அக்கணமே அவன் நினைக்கிறான்

இனித் தலையே இல்லாமல் செல்வதுதான் சரி

**

இந்தியிலிருந்து மொழிபெயர்ப்பு: சரஸ்வதி ராம்நாத்

Series Navigation

This entry is part [part not set] of 9 in the series 20001022_Issue

ராமசிங் சாகல்

ராமசிங் சாகல்

You may also like...