எதிரும் நானும்…

சு.மு.அகமது


வலி விழுங்கும் தருணங்கள்

மென்மையாய் நழுவுகிற இளமை

குளிர் போர்த்தின சூட்டுடல்

ஆடை இறக்கின அம்மணத்தில்

அதிர்ச்சியின் அதிர்வலைகள்

உதிரும் இலைகளின் ஊடாய்

மெல்லப் பறக்கும் பறவையின் சிறகாய்

நேர்த்தியின் சூத்திரம் மனதில்

கலங்கடிக்கும் கனவின் மிச்சமாய்

புரட்டிப் போடும் பயச்சாயலில்

பதுங் பம்மும் சுயம்

நிர்வாணத்தின் தழும்புகள்

சுட்டளித்தவையாய் தீர்ப்புப் பெற

கொடுங்கைகளின் வன் செயல்கள்

மரணமாய் நீட்சியுறும்

துளி ஒழுகலின் ஸ்பரிசம்

சில்லென்ற சிலிர்ப்பில் மூழ்கடிக்க

ஏதுமற்ற கானகத்தில் தனியனாய்

நானும் எனது எதிர்பார்ப்புக்களும்

சர்ச்சித்து நீர்த்துப்போன சுய தம்பட்டம்

சோரம் போன எமது கையாலாகாத்தனம்

இப்பவும்

குளியலறைக் குழந்தைகளின் தகப்பனாய்

நான்…

-சு.மு.அகமது

Series Navigation28 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28 >>

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

சு.மு.அகமது

சு.மு.அகமது