கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) அறிவும், காரணமும் (Knowledge & Reasoning) (கவிதை -43 பாகம் -3)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“நான் படுக்கை அறைச் சாளரத்தின் அருகிலிருந்து கண்ணிமைக் கதவுகளைத் திறந்து என் துருக்கி காபியை அருந்தும் போது, திருவாளர் பிதற்றுவாய் என் முன்னே துள்ளி வந்து தோன்றி அழுவார், முணுமுணுத்துப் புகார் செய்வார். பீடத்திலிருந்து இறங்கி வந்து எனது காபியைக் குடிப்பார். எனது சிகரெட்டைப் புகைப்பார்.”

கலில் கிப்ரான். (Mister Gabber)

++++++++++++
காரணம் (Reasoning)
++++++++++++

கல்வி அடிப்படை யற்ற காரணம்
உழப் படாத வயல் !
சத்துணவு இல்லாத மனித
உடம்பு !
கடையில் விற்பப் படாத
கடைச் சரக்கு !
அளவு பெருகி
மலிந்து போனால் மனிதருக்குச்
சலித்து போவது !
மிகுத்துப் போயின் காரணம்
மதிப்பு இழக்கும் !
கடையில் விற்கப் பட்டால் அதன்
நன்மதிப்பை அறிபவர்
உன்னத ஞானிகள் மட்டும்.
காரணத்தை மூடன் ஏற்று
ஆதரிப்ப தில்லை !
பைத்தியம் என்பான்
பித்தன் !
மூடன் ஒருவனை நேற்று
“எத்தனை மூடர் உள்ளார்
நம்மிடையே ?”
என்று கேட்டேன்.
“கண்டுபிடிக்க நேரம் ஆகும் !
முடியா தென்னால் ! என்பான்
கடின மான செயலா ?
ஞானியை மட்டும்
மானிடர்
எண்ணினால் போதுமே !

(தொடரும்)

****************

தகவல் :

1. The Prophet By : Kahlil Gibran, Published By : Senate (2003)

2. The Prophet By : Kahlil Gibran Published, By Wordsworth Editions Ltd. (1996)

3. Tears & Lauhgter By : Kahlil Gibran, Published, By : Castle Books (1993)

4. The Voice of The Master By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1967)

5. Thoughts & Meditations By : Kahlil Gibran Translated from Arabic By : Anthony Ferris (1968)

For further information:
The Prophet By Kahlil Gibran :

http://www.katsandogz.com/gibran.html
http://en.wikipedia.org/wiki/Khalil_Gibran

http://www.inner-growth.info/khalil_gibran_prophet/main.htm

Kahlil Gibran Art Gallery :
http://www.inner-growth.info/khalil_gibran_prophet/html/galleries/gibran_gallery1.htm

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 26, 2011)

Series Navigation<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33)2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2 (ஜூலை 17, 2007) >>

This entry is part 3 of 47 in the series 20110430_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

You may also like...