Press "Enter" to skip to content

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஆற்றங்கரைச் சந்திப்புகள் (மாயக் காட்சிகள் மீது மர்மச் சிந்தனைகள்) (கவிதை -36 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

நள்ளிரவுப் பொழுதில்
துள்ளி அலறினேன் :
“நான் கொண்டுள்ள காதலில்
வசித்து வருவது யார் ?”
நீ சொல்வாய் :
“நான் அறிவேன். அதனில்
நான் மட்டு மில்லை.
மற்றுள்ள காட்சிப் படங்கள் ஏன்
பற்றி யுள்ளன என்னை ?”
நான் உரைத்தேன் :
உனது பிரதி பலிப்புகள்
அவை எல்லாம் !
ஒருவரை ஒருவர் ஒத்திருக்கும்
துருக்கிய எழிலவர் அவர்.”

++++++++++++

நீ கேட்டாய் :
“காதலில் அடுத்துள்ள
அந்தக் குடிவாசி யாரெனச் சொல் ?”
“காயப் பட்ட
எந்தன் ஆத்மா அது,
அந்தச் ஆத்மாவைச் சிறைப்பிடித்து
வந்துள்ளேன் உன்னிடம் !
ஆபத் தானது ஆத்மா !
அதற்கு விடுதலை கொடுக்காதே
எளிதாய் !” என்று
அளித்தேன் பதில் நான் !
கண் சிமிட்டிக்
கையில் ஒரு நூல் முனைக்
கயிற்றைக் கொடுத்தாய் !
இறுக்கிப் பிடி நாணை, ஆனால்
அறுந்து போகாமல் !

++++++++++++

உனைத் தொட நான்
முனைந் திட்ட போது
வெடுக்கெனத் தடுத்தாய்
எனது கையை !
வெஞ்சினம் கொள்வதும் ஏன் ?”
“நல்ல காரணம்
உள்ளது அதற்கு !
ஒதுக்க வில்லை உன்னை !
இங்கு வருவோரில்
‘நான் நான்’ என்று
கர்வம் கொண்டவன்
கன்னத்தில் அறைய வேண்டும்.”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 16, 2011)

Series Navigation37 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 37 >>

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கண்ணுக்கு இரு நோக்குகள் ! (கவிதை -35)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

உலகு முழுதும் சுற்றித் தேடி
ஓடாதே
ஒரு குகையைக் கண்டு
ஒளிந்து கொள்ள !
ஒளிந்திருக்கும் கடும் விலங்கு
ஒவ்வோர் குகையிலும் !
எலிப் பொந்தில் நீ வசித்தால்
ஒரு பூனைக் கால் நகம்
உனைப் பிறாண்டி விடலாம் !
உண்மை யான ஓய்வு
உனக்கு வருவது நீ இறையுடன்
தனியாய் உள்ள போது !

++++++++++++

உனக்கொரு முகவரி இங்கே
இருப்பினும்
உதித்து நீ வசித்த இடம்
ஒருவருக் கும் தெரியாது !
இரு தோற்ற மாய்த் தெரியுது
அதனால் நீ
எதை நோக்கினும் !
ஒரு சமயம்
உனக்குத் தெரியுது
ஒருவனை நீ நோக்கும் போது
சீறிப் பாய்ந்திடும் ஓர்
அரவம் என்று !
வேறு ஒருவன்
அருமைக் காதலன் என்று
கருதுவான் அவனை !
இருவர் நினைப்பதும் சரியே !

+++++++++++

ஒவ்வொரு மனிதனும்
நிறுத்துப் பார்ப்பதில் பாதி ! பாதி !
கருப்பு வெளுப்பு போல் !
ஆதாமைக் கண்டு
அழகீனன் என்பார் சோதரர் !
ஒப்பிலா அழகன் என்று
அப்பன் அழுத்திச் சொல்வான் !
கண்களை நம்பாதே
தூரத்தை நோக்கும் போது !
காரணம் உனது
கணிப்பு மிகையோ, குறைவோ ?

+++++++++++

இரு நோக்கு உள்ளது விழிக்கு !
இங்கும் அங்கும்
தாவி அலையும் அதற்கு !
பாய்ந்திட முயல்வாய் ஈர்த்திடும்
பயங்கர வலைக்குள் !
வற்றிடும் சிறிது சிறிதாய் !
சதுரங்கக் கட்டத்தில் ராஜாவை
இப்படி அடைப்பதா ?
அப்படி அடைப்பதா ?
நெஞ்சித் திறந்து வைத்திடு !
தூண்டில் விற்கப் போக
வேண்டாம் இனி !
சுதந்திர மாய் நீந்தும்
சுறாமீன் நீ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 9 , 2011)

Series Navigation36 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 36 >>

This entry is part [part not set] of 50 in the series 20110515_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -5)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“உன் ஆத்மாவிலிருந்து நீ வினைகள் புரியும் போது ஓர் ஆறோட்டம் உன்னுள்ளே எழுகிறது. அப்போது புது மலர்ச்சியும், ஆழ்ந்த பூரிப்பும் அந்த ஆறோட்டத்தின் சின்னங்களாய் வெளிப்படும்.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

“உன் உடம்பு முழுத் தோற்றம்
ஓர் முகம் பார்க்கும்
கண்ணாடி ஆகும் !
அதனுள்ளே கண்களும்,
ஆன்மீக மூச்செடுப்பும்
காணலாம் !
உன் செவி
இழுத்துச் செல்லட்டும்
உன்னை
உனது காதலியிடம் !”

++++++++++++++

காலி•பின் கல் மனதைக்
கலக்கி விட்டாள் அந்த கன்னி !
மறைந்திடும் மின்னல் போலவன்
மாபெரும் பேரரசு !
உன் காதல்
உறைந்து போனால்
என் அறிவுரை இதுதான் :
உனக்குரியவை மறையும் வேளை
கனவாய்ப் போகும் !
கர்வம் தணியும் !
மீசை வழியே நீங்கும் மூச்சு !
கொன்று விடும்
உன்னை அந்த இழப்புகள் !

+++++++++++++

“எதுவும் நிலைப்ப தில்லை”,
என்று உரைப்போர்
சிலர் உள்ளார் !
அது தவறான கருத்து
“வேறோர் உண்மை இருக்கு மானால்”
நானதைக் கேட்டி ருப்பேன்,
எனக்குத் தெரியாமல்
எதுவும்
இருக்க முடியாது !

++++++++++++++

சங்கிலித் தொடர் விளைவு
சிறுமிக்குப்
புலப்படாது போனால்
விலக்கத் தேவை யில்லை
வாலிபர்
மூல காரணங் களை !
காதல் நிலவி இருப்பதைக்
காரணக் கர்த்தாக்கள்
தாரணியில்
காண வில்லை யென்றால்
காதல் இல்லை யெனப்
போதிக் காதே !

+++++++++++++

ஜோசப்பின் சகோதரர் காணார்
ஜோசப்பின் எழிலை !
ஆனால் ஜேகப்
அதைக் காணத் தவறிலார் !
மோசஸ் போதகர்
முதலில் தனது
மரப்பாச்சிச் சீடரைக் கண்டார் !
அடுத்துச் சிலநாள் கண்ணோக்கில்
கடிக்கும் விரியன் கண்டார் !
கலவரப் பீதியின்
காரணம் அறிந்தார் !
கண்ணுக்குத் தெரிவது
இதய உணர்வுக்கு முரணாகும் !
மோசஸின் கரம்
முறுக் கேறிய கரம் !
ஒளிவீசும் நித்திய விளக்கு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 15, 2011)

Series Navigation28 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 28 >>

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -4)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

************************************
எது பொய் ? எது மெய் ?
************************************

“நான் இறப்பதால் எனக்கு நேரும் இழப்பென்ன ? ஓர் உடலிலிருந்து வேறோர் உடலுக்கு உயிர் மாறுகிறது ! காமத் தாகத் தணிப்பு வேறோர் வீட்டு விருந்துக் கதையாகிறது. சூரிய வெளிச்சத்தில் புகழ்ச்சி அணுக்கள் மின்னுகின்றன ! நீ பற்றிக் கொள்ளும் நதிக்கரை நீரோட்டத்தில் உடைந்து போகிறது !”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

தளபத்திக் கேதும் புரியவில்லை !
மோர்க் குடத்தில்
வீழ்ந்த கொசுப் போல்
மூழ்கியது உள்ளம்
மோக த்தில் சிக்கிக் கொண்டு !
வேகமாய்ச் சொல்வான்
தளபதி :
“எழில் பெண்ணே !
என்னைப் பற்றி
எதுவும் சொல்லி விடாதே
காலி•ப் மன்னரிடம்.”
கன்னியின் கவர்ச்சி பட்டதும்
காலி•ப் இதயம்
மேலும் கீழும் ஆடியது !
நினைத்தை விடப்
பாவை எழில் மேனி
முதன்முதல்
பார்வை யில் தெரிந்தது
நூறு மடங்காய் !

++++++++++++++

குருநாதர் ஒருவரிடம்
கேள்வி கேட்டான்
ஒரு மனிதன் :
“எது மெய் ? எது பொய் ?
என்றெனக்கு உரைப்பீர் குருவே !”
குருநாதர் சொல்வார் :
“பொய் இதுதான் !
பரிதி யிடமிருந்து வௌவால்
பதுங்கிக் கொள்ளும் !
கதிரோன் என்னும் வடிவக்
கருத்தி லிருந்து அல்ல !
காலி•ப் என்னும் சொல்தான்
பயத்தைப் புகுத்தி
பாதாளக் குகைக்குள்
பதுங்க வைக்கும் தளபதியை !
பகைவர் சிக்கிட எழிற்
பாவையை
பணையம் வைப்பார் சதிகாரர்
தூண்டி முள்ளில் !

+++++++++++++

உள்ளொளி வீசிடும்
உன்னதப் போதகர் மோசஸ்
சினாய் மலை உச்சியில்
ஒளி எழச் செய்தார் !
ஆயினும் குன்றின் மீது
ஒளி விளக்கு
நிலைத்து எரிய
இயலாமல் போனது !
ஏமாற்றிக் கொள்ளாதே
உன்னை !
வெறும் சிந்திப்பு
மெய் வாழ்க்கை ஆகாது !
போர் எண்ணம் உனது
வீரம் ஆகாது !
சிந்தனை
செவியி லிருந்து
செங்கண்ணில் பொங்கி எழ
செயற்பட வேண்டும் நீ !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 8, 2011)

Series Navigation27 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 27 >>

This entry is part [part not set] of 35 in the series 20110213_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

************************************
ஆண் பெண் காதல் உறவு
************************************

“காமத் தாகத்தை எப்படித் தீர்த்துக் கொல்வது ? காம சக்தியே நில்லாமல் நம்மை நடத்தியும் இயக்கியும் வருகிறது. இறைவனுடன் ஐக்கியமாகத் தொடர்ந்து மலர்கிறது. நம்மைக் கவரும் அழகுத்துவம் நம்மை முடுக்கிச் செயற்படுத்த இயக்குகிறது.”

கவிஞானி ரூமி (On the Desire – Body)

+++++++++++++

ஈருடல்கள் ஒன்றாக
இணைந் திடும் போது
வேறொன்று காணா உலகிலிருந்து
புதிதாய்ப் பிறக்கிறது
சிசு கலையா திருந்தால் !
இரண்டு மானிடம்
காதல் உறவிலோ
வெறுப்பிலோ கலந்து ஐக்கியம்
மூன்றா வது ஒன்றை
ஈன்று விடும் !
அப்படித் தோன்றிய அத்தீவிர
ஐக்கிய உடல் உணர்ச்சி
ஆன்மீக உலகிலே
தோன்றிடும் அற்புதம் !

++++++++++++++

போகுப் போது ஆங்கொரு
புதுமையைக் கண்டு பிடிப்பாய் !
உனது கூடுறவுகள்
உண்டாக்கும் பின் வாரிசுகளை !
கவனமாய் இரு ஆதலால் !
காத்திரு !
சுய உணர்வோடு
எவரையும்
காணச் செல்லும் முன்பு
நீ குழந்தைகளை
நினைவில்
வைத்துக் கொள் !

+++++++++++++

குழந்தைகளை நீதான்
வளர்க்க வேண்டும்
உன் உறவில்,
உன் உணர்வில் பிறந்ததால் !
உருவோடு,
உரையாடத் தேவை
ஓரிடம் !
உன்னை நோக்கி
அழுகின் றன உனது
குழந்தைகள் :
“மறந்து விட்டாய்
நீ எம்மைக் காண
திரும்பி வா.”
கவனம் வை இப்புகாருக்கு !
ஆடவனும் மங்கையும்
கூடுவது
ஆன்மீக நியதி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 1, 2011)

Series Navigation26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26 >>

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?
************************************

“அப்படிச் செய்வது அவனுக்குச் சிறகுகள் முளைத்து வளர்வதைப் போன்றது. ஒழுக்கமற்ற செயலைச் செய்யாமல் இருக்கிறான் ஒரு சிறுவன் என்பது ஆபத்தானது. அதாவது அச்சிறுவன் சிறகுகளின்றிக் கூட்டை விட்டு வெளியே ஏகுகிறான் ! ஒரே பாய்ச்சலில் விலங்கு ஒன்றுக்குப் பிறகு இரையாகிறான்.”

கவிஞானி ரூமி (ஒழுக்கமற்ற செய்கை புரிந்தவனைப் பற்றி)

+++++++++++++

வயல் நிலம் செழிப்பாக
உயரு தென்று
பயிரை வித்திடுவான்
அந்தத் தளபதி ! அன்றிரவு
கண்ட கனவில்
காதலி தோன்றினாள் !
காம மயக்கத்தில்
போலிப் பெண் காட்சியைப்
புணர்ந்தான் !
விந்தணுக்கள் வெளியேறும் !

++++++++++++++

சிறிது நேரம் கழித்து
விழித் தெழுந்தான் தளபதி !
காதலி
கண்முன் இல்லை யெனக்
கவலை யுற்றான் !
வித்துக்கள்
வீணாகி விட்டதாய்
வேதனை யுற்றான் :
“சோதனை செய்வேன்
சூழ்ச்சி மாதினை” என்று
சூளுரைத்தான் !

+++++++++++++

உடல் இச்சையை
அடக்கு முடியாத
ஒரு தளபதி
தலைவனாய் இருக்கச் சிறிதும்
தகுதி யற்றவன்
நிலத்தில்
வீணாய் விதைத் தவன் !
காலி•புக்கு அஞ்சாது
கட்டுப் பாடும் இல்லாது
சாவ தற்குத் துணிந்து
காதல் வயப் பட்டான்
மோகத் தளபதி !

++++++++++++++

ஆத்திரப் பட்டுச் செய்தலும்
அவசரப் பட்டுச் செய்தலும்
ஒருபோதும் கூடாது !
குருநாதர் ஒருவரிடம்
அறிவு பெறச்
சரண் அடைவாய் !
ஆனால் தளபதி யானவன்
ஏதும் செய்ய
இயலாத நிலை !

++++++++++++++

எழில் பெண்ணிடம்
இதயம் இழந்த
இந்த ஈடுபாட்டு மையல்
சரியில்லை !
உடன் படாத காதலியின்
உருவம் மறுபடியும்
வந்து வந்து தவிக்க வைக்கும் !
இருட் டுருவாய்
எதிர்ப்படும் கிணற்றில் !
சிங்கத் தையும் ஏமாற்றி
குதிக்க வைக்கும் குழியில்
போலிப் பிம்பம் !

++++++++++++++++

மேலும் ஓர் அறிவுரை
உனக்கு !
உன்னரும் காதல் மாதுடன்
உறவு கொள்ள
அடுத்தவர்
ஆழ்ந்து நோக்குவது
ஆபத்தானது !
பஞ்சும் நெருப்பும்
பற்றி எரியும்
பக்கத்தில் இருந்தால் !
எரியும் தீயை அணைப்பது
எளிதன்று !
இயலாத ஒன்று !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 25, 2011)

Series Navigation

This entry is part [part not set] of 45 in the series 20110130_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

************************************
பெண்ணின் புன்னகை என்ன செய்யும் ?

************************************

காதலர் விரைவாய் ஒருவரை ஒருவர் நாடுவது, முனிவர்கள் உலக மெய்ப்பாடைத் தேடுவது எல்லாம் இறைவனால் வழிகாட்டப் படுபவை. ஒவ்வோர் மனித ஈர்ப்பும் நம்மை அறிவுக் கடலுக்கு இழுத்துச் செல்கிறது. எவ்விதம் வாழ்வு அமைந்து வருகிறதோ அப்பாதையிலே செல்ல வேண்டும். அப்படி முயலாது சிக்கிக் கொண்டு முடங்கிப் போவது இயற்கை நியதி ஆகாது !

கவிஞானி ரூமி

+++++++++++++

எகிப்து நாட்டின் காலி•ப்*
மெய்க் காப்பாளன் கூறுவான் :
“மோசுல் வேந்தருக்கு
மேனி எழிலான
மோகக் கிழத்தி ஒருத்தி
இருக்கிறாள்.
என்னால் எழிலை வர்ணிக்க
இயலாது !
இப்படி இருப்பாள்,” என்றவன்
ஒரு தாளில்
ஓவியம் வரைந்து காட்டினான் !

++++++++++++++

காலி•பின் கைதவறிக் கீழ்விழும்
ஒயின் கிண்ணம் !
தன் தளபதியை மோசுலுக்கு
உடனே அனுப்பினான்
படைவீரர்
பல்லாயிரம் சூழந்து செல்ல !
முற்றுகை இட்டார் ஒருவாரம்
செத்தனர் படைவீரர்
கோட்டைச் சுவர் இடிந்தது !
கோபுரங்கள் சாய்ந்தன !
“ஏனிந்த சாவுகள்,” என்று அலறி
தூதனை அனுப்பினார்
மோசுல் வேந்தர்.
“நகரம் வேண்டு மெனின்
நான் தருவேன்
எடுத்துக் கொள்வீர் !
ஆபரணம் வேண்டு மெனின்
அதுவும் அளிப்பேன் ! போர்
அவசிய மில்லை !”

+++++++++++++

தாளில் வரைந்த எழில்
மாதின் ஓவியத்தைத்
தளபதி காட்டினான்
மோசுல் வேந்தருக்கு !
தயங்க லின்றிக்
“கூட்டிச் செல் அவளை”
என்று உடனே
அனுமதி கொடுத்தார் !
“எழில் மாதை வழிபடுவோன்
தழுவிக் கொள்ளட்டும் !”
மோகினி
மாதைக் கண்டதும்
மயங்கி வீழ்ந்தான் தளபதி !
காதல் வயப் பட்டான்
காலி•பைப் போல் !

++++++++++++++

திடீர்க் கவர்ச்சியும்
முடிவிலாக் காதல் உணர்வின்
ஓர் ஆரம்பக் காட்சியே !
உலகம் வளர்ந்து வாராது இந்த
உணர்ச்சி யின்றி ?
ரசாயன மாற்றம் அடைந்திடும்
அண்டப் பொருட்கள்,
காய்கறிப்
பயிர்களி லிருந்து !
உயிர் பிணையும் உடலோடு
ஒவ்வோர் காதல் உணர்விலும்
மானிடம்
முழுமை அடையத் தான்
விழையும் போது !

+++++++++++++++
*காலி•ப் –> Caliph
+++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 19, 2011)

Series Navigation25 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 25 >>

This entry is part [part not set] of 39 in the series 20110123_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -2)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

பயம் உன் தொண்டையை
இறுக்கும் படி
விட்டு விடாதே !
இடையே
இராப் பகலாய்
மூச்சை இழுத்து வா
மரணம் உன் வாயை
மூடுவ தற்குள் !

++++++++++++++

சர்க்கரை கரைவதைப் போல்
உருக்கி விடு என்னை
தருணம் அது வென்றால் !
மிருதுவாய்ச் செய்
கையால் தடவியோ அல்லது
கண்ணோக் கிலோ !
காலைப் பொழுதில் அனுதினமும்
காத்தி ருப்பேன்
இதற்கு முன்பு அவ்விதம்
நேர்ந்தது போல் !
தீர்த்துக் கட்டுவது போல்
திடீரெனக் கொல் !
இல்லா விடில்
எப்படி நான்
இறக்கத் தயாராய் இருப்பது ?

+++++++++++++

உடலின்றி மூச்செடுக் கிறாய்
தீப்பொறி போல் !
ஏங்கி வேதனை அடைகிறாய்
நீங்குதென் மனப் பாரம் !
கை அசைத்து என்னைக்
காத தூரம் தள்ளி
நிறுத்து கிறாய் !
தூரத்தில் என்னை வைப்பதால்
ஈர்க்கப் படுகிறேன் !

++++++++++++

வெளுத்த பகல் வேளை !
வெள்ளை மதில் சுவர் !
காதல் தேயுது !
வெளிச்சம் மாறுது !
எண்ணத்தை விடவும்
எனக்கு மிகவும் தேவை
நளினம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 10, 2011)

Series Navigation24 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 24 >>

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) எனது தீய பழக்கம் (கவிதை -29 பாகம் -1)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எனது தீய பழக்கம் :
கூதற் காலத்தில் பொறுமை இழந்து
பாதகம் செய்வேன்
என்னோடு இருப்போ ருக்கு !
நானில்லா விட்டால்
நகலாது எதுவும் இங்கே !
தெளிவான சிந்தனை எனக்கில்லை !
மொழிகளில் முரண்பாடு
அவிழ்க்க இயலாத
முடிச் சாகப் போகும் !
மாசுற்ற நீரை
தூய தாக்குவ தெப்படி ?
ஆற்றில் மீண்டும் ஊற்றி விடுவதா ?
தீய பழக்கத்தை
நல்லதாய் மாற்றுவ தெப்படி ?
என்னைத் திரும்பவும்
உன்னிடம் அனுப்பி விடுவதா ?

++++++++++++++

நீர்ச்சுழிலில் சிக்கும் போது
நீரை
ஈர்த்திடும் கடலடி மட்டம் !
நம்பிக்கை யற்றுக்
காயப் படுத்துவோர்
நலமடைய
ஓர் இரகசிய மருந்துள்ளது !
நீ நேசிக்கும் நண்பனை
நெடுங்காலம் நினைத்துக் கொள்
உன்னை விட்டு அவன்
நீங்கி னாலும் சரி இல்லை
உன்னை அவன்
நெருங்கி னாலும் சரி !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (January 4, 2011)

Series Navigation23 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் >>

This entry is part [part not set] of 44 in the series 20110109_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) முத்தெடுப்போன் உடை காலியானது (கவிதை -28)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எம்மோடு அமர்ந்துள்ளாய்
இப்போது.
பொழுது புலர்ந்ததும் நீ
நிலத்தில் நடமாடுவாய் !
நீ நீயாக இருக்கிறாய் ! நாம்
விரட்டிச் செல்லும்
வேட்டை விலங்குகள்
வேட்டை யாடப் படும்
வேட்டைக்கு நீ எம்மோடு
விரையும் போது !
உடம்பிற்குள் உள்ளாய் நீ
நிலத்தில் நிற்கும்
திட மான செடிபோல் !
ஆயினும் நீயொரு
வாயு !
கடற்கரையில்
காலியாய்க் கிடக்கும்
நீ முத்தெடுப் போன் உடம்பு !
நீயொரு மீன் !

++++++++++++++

கடலுக்குள் கிடக்கின்றன
கதிர்வீசும்
கணக்கற்ற நாண்கள் !
கரிய நாண்களும் உள்ளன
ஏராளமாய் !
இரத்தக் குழல்கள் போல்
தெரியும் அவை
ஒருபுறம் திறக்கும் போது !
கடலிசை எழுப்பும்
இசைக் கருவியின் நாண்கள்
ஒளிந்திருக்கும்
உனது இரத்தக் குழாய்கள் !
கடல்நுரை நோகும் விளிம்பல்ல
காணாத
கடற்கரையின் ஓலம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 28, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

கண்ணில் படாமல் போனது
தோட்டம் உனக்கு !
காரணம்
அத்திப்பழம் வேண்டும் என்கிறாய்
எந்த மரமாய் இருப்பினும் !
எழிற் பெண்ணை நீயும்
சந்திக்க மாட்டாய் !
நகை யாடி வருகிறாய்
நரைத்துப் போன கிழவியுடன் !
பல்லாயிரம் பறவை இனம்
உள்ளது !
அழுகை உண்டாகும் எனக்கு
புழுத்த வாயோடு
மாடி மதில் மேல்
தலை வைத்துக் கீழ் நோக்கும்
கிழவி உன்னை
அழைத்து நிறுத்தி வைத்தது !
மடிப்பு மேல் மடிப்பு
படிந்த அத்திப் பழத்தில்
சுவை யில்லை !
காய்ந்து அழுகிக் கூடான
வெள்ளைப் பூடு !

++++++++++++++

இறுக்கிப் பிடிக்கிறாள் தோல்
இடுப்பணியில்* !
பூவும் இல்லை, பாலும் இல்லை
மூதாட்டி உடலில் !
முகத் தோற்றம் எப்படி
இருக்கும் என்று அறிந்திடத்
திறக்கும் உன் கண்களை
மரணம் !
கரிய முதலை ஒன்றின்
முதுகுக் தோல் அது !
இதற்கு மேல் இல்லை
என் புத்திமதி !
மௌனமாய்
உன்னை இழுத்து செல்லட்டும்
உறுதியாய் நீ
காதலிக்கும் ஒன்று !

***************
*தோல் இடுப்பணி — Leather Belt

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 21, 2010)

Series Navigation22 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22 >>

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

++++++++++++++++++
கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++

வறுமையே எனக்குப்
பெருமகிழ்ச்சி
தருவது பெண்ணே !
எளிய வாழ்வே நேர்மையும்
எழிலும் உள்ளது.
எளிய வாழ்வில் எதையும்
ஒளிக்க வேண்டம் !
அகந்தை பேராசை பிடித்தவன்
என் றென்னை
விளித்தாய் நீ !
பாம்பு, பாம்பாட்டி என்றும்
பழித்தாய் நீ !
அனைத்து அவப் பெயரும்
உனைத்தான் சாரும் !

++++++++++++++

உனது தேவைகள் மீதுள்ள
சினத்தால் நீ
என்னைப் பழிக்கிறாய் !
எதுவும் வேண்டேன்
இந்த உலகில் !
சுற்றிச் சுற்றி
மறுபடி ஓடி வரும்
சிறு பிள்ளை போன்றள் நீ !
இப்போது நீ நினைப்பது
இந்த இல்லம்
சுற்று கிறது என்று !
குற்றம் காண்பவை
உனது கண்களே !
பொறுமையாய் எண்ணிப் பார் :
இறைவன் நம் இல்லத்தில்
ஏற்றி யுள்ள ஒளியை !
கிடைத் துள்ள உனது
கொடைகளை !

++++++++++++++

இரவு பூராவும்
இப்படி நடக்கும் தர்க்கம்
இருவரை யும் புண் படுத்தும் !
மறைத்து வைத்த ரகசியங்கள்
உறுத்தும் என்னை !
எல்லாம் தம்பதிக ளுக்குள்
உள்ளதா அன்பு
இல்லையா
என்பதைப் பொருத்தது !
இந்த இரவு
இப்படிக் கழியும் !
இருக்குது நிரம்ப வேலை
எமக்கு !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 13 2010)

Series Navigation21 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21 >>

This entry is part [part not set] of 35 in the series 20101219_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவி கூறிய பதில் :
++++++++++++++++++

என்னிடம் பேசாதீர்
உன்னத நிலையைப் பற்றி !
எப்படி நடிக்கிறாய்
என்று பார் !
அனைத்திலும் ஈனத்தனம்
ஆன்மீகத் திமிர் !
ஆடைத் துணி ஈரமாகிப்
பனிப் பொழிவாகிக்
குளிரில் நடுங்கும்
நாளைப் போன்றது இது !

++++++++++++++

என்னால் பொறுக்க இயலாது
இதனை !
நானுனக்கு
இணையானவள் என்று நீ
அழைத்திடாய் !
நீ யொரு ஏய்ப்பாளி !
நாய்க ளுடன்
எலுப்புத் துண்டுக்குச் சண்டை
இடுவோன் நீ !

++++++++++++++

பாவனை செய்வது போல்
நீ திருப்தி அடைய வில்லை !
நீ ஒரு பாம்பாட்டி !
அதே சமயத்தில்
நீதான் பாம்பும் ! ஆனால்
நீ அதை
அறியா தவன் !
பாம்பிடம் மகுடம் ஊதுவாய்
பணத்துக் காக !
பாம்பும்
மகுடம் ஊதும் உனக்கு !

+++++++++++++

இறைவனைப் பற்றி நீ
ஏராளமாய்ப் பேசி
குற்ற உணர்வை எனக்கு
உண்டாக் குவாய் !
எச்சரிக்கை செய்வேன் !
இறைவன் எனும் சொல்லைச்
சொல்லிச் சொல்லி
நெஞ்சை நஞ்சாக்கும்
நீ என்னை
ஆட்டிப் படைக்க
நினைத்தால் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 6 2010)

Series Navigation20 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 20 >>

This entry is part [part not set] of 39 in the series 20101212_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273)கவிதை -26 பாகம் -2 என்னருகில் வராதே

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++

++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

கணவன் கூறிய பதில் :
++++++++++++++++++++++

எத்தனை நாட்கள் பணமின்மை பற்றி
இப்படிப் புகார் செய்வாய் ?
வக்கில்லாத போக்கைச் சொல்லி
வசை பாடுவாய் ?
வாடிய நாட்கள் பெரும்பாலும்
ஓடிப் போயின !
ஓயப் போகும் இந்த
மாறும் நிலை எண்ணிச்
சீறுவது ஏன் ?
விலங்கினம் எப்படி வாழுதென்று
சிந்தித்துப் பார் !
கிளையில் அமர்ந்து
களிப்போ டுள்ளது புறா !
கான மழை பொழியுது
கருங்குயில் !
மின்மினியும் யானையும்
படைத்தவன் மீது
நம்பிக்கை வைக்கும்
தம் உணவுக்கு !

++++++++++++++

நீ படும் இடர்களே உனக்கு
நெறி கூறும் போதகர் !
கேள் அவற்றைக் கவனமாய் !
இனிமை யாக்கு துயர்களை எல்லாம் !
ஏறக் குறைய
காரிருள் நீங்கி விட்டது !
ஒருமுறை வரும் இளமையின் போது
திருப்தியாய் இருந்தாய் !
அதிருப்தியில் இப்போது
அவதிப் படுகிறாய்
எல்லா வேளையும் !
செல்வத்தில் புரண்டாய்
ஒரு காலத்தில் !
செழித்த முந்திரிப் பழமாய்
மிளிர்ந்தாய் !
அழுகிப் போன பழம் நீ
இப்போது !
இனிமை படிப் படியாய் உயர
வளர வேண்டும் நீ !
தீயவளாய்
நீ மாறி விட்டாய் !
மனைவி யான நீ
இணை யானவள் எனக்கு !
இரட்டைச் செருப்பில்
ஒரு செருப்பு
இறுக்கமாய் இருந்தால் பயனின்றி
இரண்டும் வீணாகும் !
இணையாய்ப் பொருந் தாத
இரு கதவுகள் நாம் !
ஓநாயுடன் புணராது
ஒரு சிங்கம் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 30 2010)

Series Navigation19 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 19 >>

This entry is part [part not set] of 34 in the series 20101205_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதீர் கவிதை -26 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++
என்னருகில் வராதீர்
++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++
கணவன் மனைவிக்குள் தர்க்கம்
+++++++++++++++++++++++++

மனைவியின் புகார் :
++++++++++++++++++++

பாலைவன நாடோடி களின்
குடிசை ஒன்றில்
பதியிடம் கேட்பாள் பத்தினி :
“எல்லோரும்
வளமொடு வாழ்கிறார்
களிப்புடன் நம்மைத் தவிர !
உண்ண உணவில்லை !
உப்பு மிளகாய் ஒன்று மில்லை !
குடிலில் நீர்க்குடம் இல்லை
தேவைக்கு உடுப்பில்லை
போர்த்திக் கொள்ளப்
போர்வை இல்லை இரவில் !
முழு நிலவே அப்பம் என்று
கற்பனை
செய்து கொள்வோம் !
தேடிச் செல்வோம் நாம்
ஓடிப் பெற்றிட !
பிச்சைக் காரரும் திகைப்புறுவார்
நம்மைத்
துச்சமாய் எண்ணி !
நம்மை விட் டெல்லோரும்
விலகிச் செல்வார் !
பரிவு நிரம்பிய போராளியாய்
அறியப் படுவர்
அரேபியர்.
பார் உன்னை நீயே
படி தடுமாறி விழுகிறாய் !
வீட்டுக்கு விருந்தாளி வந்தால்
கிழிந்த அவனது
வேட்டியைத் திருடுவோம்
தூக்கத்தில் அவன்
விழுந்து கிடக்கையில் !
இந்த வழியில் உம்மைத் தள்ளும்
விந்தை வழிகாட்டி யார் ?
கைப்பிடி அளவுப் பருப்பும்
கைவச மில்லை !
பத்தாண்டு தாம்பத்திய வாழ்வின்
மெத்த விளைவுகள் இவை !
கடவுள் எங்கு மிருந்தால் போலிக்
கயவரை நாம் ஏன்
கண்மூடிப் பின்செல வேண்டும் ?
நமக்கு யார்
நல் வாழ்வுக்கு வழி காட்டுவது ?
நாளை ஒளிமய மாகி
வாழ்வில் செல்வம் குவியும்
என்று ஏமாற்றும்
போலிக் குருவா ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 23 2010)

Series Navigation18 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 18 >>

This entry is part [part not set] of 34 in the series 20101128_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
என்னருகில் வராதீர் !
++++++++++++++

+++++++++++++
பிரிவின் நிழல் !
++++++++++++++

பிரிவென்றால் நன்றாகத்
தெரியும் நமக்கு
பிணைப்பு உறவை நாம்
சுவைத்தி ருப்பதால் !
புல்லிலைப் புல்லாங் குழல்
பொங்கிடும் இசை வெள்ளம் !
ஏனெனில் ஏற்கனவே அது
அனுபவித் துள்ளது
மண்ணும், மழையும், ஒளியும்
கரும்பாய்
உருவாகி இருப்பதை !
இடைவெளி நமக்குள் தூரமானால்
காதல் தாகம்
கசந்து போகும்
காதலி திரும்பி வருவாளா
அல்லது
காணாமல் ஓடி விட்டாளா
என்றோர்
காரணம் அறியாத தால் !
உள்ளிழுக்கப் படுவாய்
புறத்தே நீ
தள்ளி விடும் போது !

+++++++++++++++++++++
சில சமயம் ஏற்படும் மறதி
+++++++++++++++++++++

நினை வின்றிப் போகும்
சில வேளை எனக்கு
துணைவியின் ஐக்கியம் என்பது
என்ன வென்று தெரியாமல் !
உள்ளுணர் வின்றி
தெள்ளறி வின்றி
தெளிக்கிறேன் நான் எங்கும்
என் சோக பாரத்தை !
எனது கதை பல்வேறு வழிகளில்
எங்கும் சொல்லப் படுகிறது :
வாலிபக் காதற் களிப்பாய்
கேலி நகைப்பாய்
ஆணின் போராட் டமாய்
காலி இடமாய்க்
கதைக்கப் படும் !

+++++++++

எந்தன் மறதியை
வகுத்து விடு
எண்ணற்ற இலக்கத்தில் ! அவை
இயங்கிடும்
ஒரு சுற்று வட்டமாய் !
பின்பற்றும் எனது
இருண்டு போன
ஆலோசனைகள் எல்லாம்
தெரியாத ஒன்று
தீட்டிய
ஒரு சதித் திட்டமா ?
கவனம் வைப்பீர்
நண்பரே !
என்னருகில் வர வேண்டாம்
அனுதாபப் பட்டோ
அல்லது
ஆவல் மிகுந்தோ !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 15 2010)

Series Navigation17 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17 >>

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
விளையாட்டுச் சிறுவனாய் இரு !
++++++++++++++

சிறந்த அறிவைப்
பெறுவதற்கு
உகந்த முறை இதுவல்ல !
அறிவுப் பாரம் சுமப்போர்
குருவின் சீடர்
விரும்பினும் சரி
விரும்பாது போயினும் சரி
வேதனைப் படுவார் !
பொது மக்க ளிடையே
புகழ் பெறத்
தூண்டில் போன்றது அது !
தர்க்கத்துக் குட்படும் அறிவுக்கு
வாடிக்கை யாளர் இல்லை !
ஆத்மாவும் இல்லை அதற்கு !
உறுதியும் ஆற்றலும் படைத்த
விருப்பக் கூட்டத்தில்
ஞானம்
வீழ்ந்திடும் தரையினில்
ஒருவரும்
வரவில்லை என்றால் !
உண்மை யான
வாடிக்கை யாளர் கடவுள்
ஒருவர் தான் !

+++++++++++++

மெதுவாக மென்று தின்பாய்
இனித்திடும் கரும்புத் தண்டை !
அது போல்
கடவுளின் அன்பும்
சுவைக்கும் !
விளையாட்டுச் சிறுவனாய்
நிலைத்திரு !
ஒளி பெறும் உன் முகம் !
சிவப்பு ரோஜா போல்
மலர்ந்திடும் !

++++++++++

அலை மோதும்,
மனநிலை மறந்திடும்,
காதல் மோகி
வெட்கித்
தலை குனியட்டும் !
தெளிவு உள்ளவன்
கவலை அடைவான்
வாழ்க்கை
தாறு மாறாய்ப் போயின் !
காதலனும்
கவலைப் படட்டும் !

+++++++++

இரவு, பகல் எந்நேரமும்
இசை வெள்ளம் !
அமைதி ஒளியில்
பொங்கி
எழும் பாட்டு !
அவை எல்லாம்
மங்கிப் போனால்
அனைவரும்
மாய்ந்து போவோம் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 8 2010)

Series Navigation16 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16 >>

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

சிறுவரை விட்டு அகன்றார்
குருநாதர்.
வாலிபன் உரக்கக் கேட்டான் :
“மேலும் கூறுவீர்
இவ்வூர் மாதரைப் பற்றி.”
அருகில் வந்தார் குருநாதர்
மரக் குதிரையில்.
“உன் முதற் காதலி
கன்னி அழகு உனக்குத்தான் !
களிப்பும் விடுவிப்பும்
அளிப்பாள் !
இரண்டாம் மாது
குழந்தை யில்லா விதவை !
பாதி மனைவி ஆவாள் உனக்கு !
மூன்றாம் மாது
வேண்டாம் உனக்கு !
திருமணம் ஆன மாது !
ஒரு பிள்ளையும் உண்டு.
முதற் பதிக்குப் பிறந்த பிள்ளை !
அவளது அன்புப் பகிர்வு
அந்தப் பிள்ளை மீதுதான் !
உந்தன் மீது
உண்டா காது உறவு !
சிந்திப்பாய் இப்போது !
வந்த வழியே திரும்பிச் செல் !
மரக் குதிரையை
திருப்ப வேண்டும் நான் !

++++++++++

சிறுவரை விளித்துக் கொண்டு
குருநாதர் நெருங்கினார்.
“மேலும் ஒரு கேள்வி மேதையே !”
“சீக்கிரம் கேள்
குதிரைச் சவாரிக்காரி
உதவிக்கு நான் தேவை.”
நேசிக்கப் போகிறேன்
நான் அவளை.”
வாலிபன் மீண்டும் கேட்டான் :
“ஈதென்ன விளையாட்டு
மேதையே ?
உமது ஞானத்தை ஏன் இப்படி
ஒளித்து வைக்கிறீர் ?”
குருநாதர் கூறினார் :
“என்னைத் தலைவனாய் ஆக்க
இம்மக்கள் விழைகிறார் !
குற்றத்தை விசாரித்து நான்
நீதி சொல்ல,
வேத நூலை விளக்க
வேண்டு மென விழைகிறார் !
என்னறிவு அதற்கு
இடங் கொடுக்க வில்லை !
இன்பத்தில் மூழ்க்க என்னை
இழுக்குது என்னறிவு !
நானொரு
கரும்புத் தோட்டம் !
அதே சமயத்தில் அதனைத்
கடித்து இனிப்பைச் சுவைப்பதும்
நான் தான் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (November 1 2010)

Series Navigation

This entry is part [part not set] of 34 in the series 20101107_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -24 பாகம் -1சிறுவரோடு விளையாடும் ஞானி

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++
சிறுவரோடு விளையாடும் ஞானி
++++++++++++++

++++++++++++++
எத்தனை விதமான பெண்டிர் ?
++++++++++++++

வாலிபன் ஒருவன் வழி நெடுவே
கேள்வி கேட்டு அலைந்தான் :
“ஞானி ஒருவரைக்
காண நான் விழைகிறேன்;
இயல வில்லை என்னால்.”
அருகில் நின்றவன் கூறினான் :
“மரக் குதிரை மேலமர்ந்து அங்கே
சிறுவரோடு
விளையாடி வரும்
அந்த மனிதரைத் தவிர
எந்த நபரும் இல்லை
எமது ஊரில்.
உள்ளொள,¢ கூரிய அறிவு
விரிந்த விழுமம் உடையவர்,
ஆனால் அவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
சிறுவரோடு விளையாடுகிறார்.”

++++++++++

சிறுவர் விளையாடும் இடத்தை
நெருங்கிக் கேட்டான் :
“அன்புத் தந்தையே !
நீர் சிறுவனாய் மாறியதின்
மர்மம் என்ன ?”
மா மனிதர் கூறினார் :
“போடா போ !
எந்த மர்மமும் இன்றில்லை”
வழிப்போக்கன் கேட்டான் :
“குதிரையைத் திரும்பி ஒருகணம்
பதில் அளிப்பீர் !”
குருநாதர் கூறினார் :
“விரைவாகக் கேள் !
நேர மில்லை எனக்கு !”

+++++++++++

தனது முக்கிய
வினாவைக் கேளாமல்
விகடம் பேசினான் வழிப்போக்கன் !
“திருமணம் புரிய வேண்டும்
பொருத்த மான பெண்ணொருத்தி
இருக்கி றாளா இந்தத்
தெருவில் ?”
குருநாதர் கூறினார் :
“முத்தரப் பெண்டிர் உள்ளார்
இத்தரையில் !
இருவர் துயர் கொடுப்பவர் !
ஒருத்தி ஆத்மாக்கு
அமுத சுரபி !
முதல் பெண்
முழு மனைவி ஆவாள் உனக்கு !
அடுத்த பெண்
பாதி மனைவிதான் உனக்கு !
மூன்றாம் பெண்
தீண்டாள் உன்னை !
ஊரை விட்டு
ஓடிப் போய்விடு
குதிரை உன் தலையை எட்டி
உதைப்ப தற்கு முன் !”

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 26 2010)

Series Navigation

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++
++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

கவிஞானி ரூமியின் கவிதைகள்
(1207 -1273)

++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

கவிதை -23 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

(முன்வாரத் தொடர்ச்சி)

விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !
நீரோட்டம் சுற்ற வைக்கும்
ஆழிபோல் உடலைச்
சீராக இயக்குவது
ஆன்மா !
மூச்சை உள்ளிழுக்கச் செய்வதும்,
வெளியே தள்ளுவதும்
ஆன்மா புரிவதே !

++++++++++

ஒரு கணத்தில் சினம்
மூட்டுவதும்
அடுத்த கணத்தில்
அமைதி உண்டாக்குவதும்
ஆன்மாவே !
இறைவனைத் தவிர
இல்லை ஓர் மெய்த்துவம்
என்று சொல்கிறார்
தன்னை முழுமை யாக
அர்ப்பணம் செய்த
குருநாதர் !
மனித இனத்துக்குப்
புனிதக் கடல் போன்றவர் !

+++++++++++

படைப்பின் அடுக்குகள் எல்லாம்
கடலின் துடுப்புகள் !
துடுப்பின் அசைவுகள்
கடலில் அலைகள் எழுப்புவதால்
தொடர்பவை !
துடுப்புகளை எல்லாம்
கடல் ஓய வைக்க
துரத்தி விடும் கரையோரம் !
மீண்டும் கொந்தளிப்பில் அவை
வேண்டப் பட்டால்
புயல் அடித்து வளைக்கும்
புல்லிலை போல் !
நில்லாது இந்த நிகழ்ச்சி
ஒருபோதும் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 18 2010)

Series Navigation

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) புல்லும் கிளையும் கவிதை -23 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
புல்லும் கிளையும்
++++++++++++++

++++++++++++++
படைப்பின் அடுக்குகள்
++++++++++++++

ஒரே காற்றுதான்
வேரோடு மரங்களை வீழ்த்திப்
புல்லின் இலைகளை
வில்லாய் வளைத்து
மின்னிடச் செய்யுது !
தெய்வீகக் காற்று
இலைகளின்
பலவீனத்தை நேசிக்கும் !
பணிவையும் விரும்பும் !
பராக்கிரமம் தன்னிடம் உள்ளதைப்
பீற்றிக் கொள்வ தில்லை
காற்று
ஒரு போதும் !

+++++++++++

வெட்டித் துண்டாக்கும்
கோடரி
கிளைகளின் தடிப்பைக்
கண்டு
கவலைப் படாது !
இலைகளின் விதி வேறு
அவற்றை விட்டு
விலகிச் செல்லும்
கோடரி !
கட்டுமரத்தின் குவியலைக்
கண்டு கொள்ளாது
கனல் பொறி !
ஆட்டு மந்தைக்கு
அஞ்சி
ஓடிப் போக மாட்டான்
கசாப்புக் கடையாளி !

+++++++++++++

மெய்த்து வத்தின்
முற்றத்தில்
வையகத்தின் வடிவென்ன ?
மிக மங்கிய தோற்றம் !
சுற்றிடும் ஒரு
கும்பா போல் வானை
நம்மீது
குப்புறக் கவிழ்த்துவது
மெய்ப்பாடு !
விண்வெளியில் ஆழியைச்
சுழற்றி விடுவது யார் ?
பிரபஞ் சத்தின்
பேரறிஞன் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 12 2010)

Series Navigation

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
என் நாக்கின் வடிவு
++++++++++++++

என்னுள் இருக்கும் கண்ணாடி
எனக்குக் காட்டுகிறது;
என்னால்
என்ன வென்றும் சொல்ல ஆஇயலாது !
ஆனால் தெரியா தென்றும்
நானுரைக்க முடியாது !
என் உடலி லிருந்து நான்
இயங்குபவன் !
என் ஆன்மா விலிருந்து நான்
எழுந்தவன் !
எந்த ஒன்றுக்கும் நானிங்கு
பந்தப் படாதவன் !

+++++++++++

உயிரோ டில்லைஆ நான் !
ஊசி நாற்றம் அடிப்பதை உன்
நாசி நுகர்கிறதா ?
என் கிறுக்குத் தனம் பற்றிப்
பேசி வருகிறாய் !
ஊசி முனை அறிவைக் கேள் !
நானும்
நட்மாடும் அங்கி மேல்
கொடிப் பழமாய் ஆஇருப்பது !
நீ அறிந்த ஒரு நபர் போல்
நானிருக் கிறேனா ?

+++++++++++++

வீழ்ந்த இந்தக் கொடிப் பழம்
நீர்மை மிகுந்தது !
தலை கீழாய்த் தொங்கினும்
துளிநீர் சிந்தாது !
அவ்விதம் நீர்த்துளி சிந்தினும்
அத்துளிகள்
இறைவன் மேல் விழுந்து
முத்துக்களைப் போல்
உருண்டு விடும் !

++++++++++

கடல் மேல் நானொரு
முகிலாய்
வடிவெடுப்பேன் !
சிந்திய
நீர்த் துளிகளை எல்லாம்
சேமிப்பேன் !
பொழிவேன் மழையாய்
சூரியன்
இங்குள்ள போது !
ஓரிரு நாட்களில்
மல்லிகைப்
பூக்கள் மலரும் என்
நாக்கு வடிவத்தில் !

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (October 4 2010)

Series Navigation

This entry is part [part not set] of 41 in the series 20101010_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -21 நடனம் ஆடப் புல்லாங்குழலிசை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
நடனம் ஆடப் புல்லாங்குழலிசை
++++++++++++++

நடனம் புரிவதற்குத்
தெரு வழியே வரும்
புல்லாங் குழலிசை
நாத வெள்ளம்
நமது செவிப்பட
அதிட்டம் செய்துள்ளோம் !
புவித்தளம் மிளிர்கிறது !
முற்றத்தில்
தயாராக உள்ளது மேஜை !
எல்லா ஒயினையும்
இன்றிரவே அருந்துவோம் ! இதோ
வசந்த காலம்
வந்து விட்டது !
கடல் குமுறி ஏறுகிறது.
முகிலாகி நாங்கள் மிதக்கிறோம்
கடல் வான்மீது !
உள்ளொளி யால் கடலுக்குள்
ஒளி தெரியும் போது
கடுகுபோல் ஆகிவிட்டோம்
கடல் மேல் !
குடி மயக்கத்தில் நான்
கிடப்பது எனக்குத் தெரிகிறது
கடல் பேச்சை நான்
தொடங்கிய போது !
ஒரே வீச்சில்
வெண்ணிலவை
இரண்டாய்ப் பிளக்க
விரும்பு வாயா நீ ?

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 27 2010)

Series Navigation

This entry is part [part not set] of 39 in the series 20101002_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -20 என் வாழ்வு எனக்கில்லை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
என் வாழ்வு எனக்கில்லை
++++++++++++++

வசந்த காலம் வந்து விட்டது !
வளர்ந்து வருகுது
ஒவ்வொன்றும் தளிர்த்து !
உயர்ந்த
சைப்பிரஸ் மரமும் வளருது
நாமிந்த இடத்தை விட்டு
நீங்கக் கூடாது !
கிண்ணத்தின் விளிம்பைச் சுற்றி நம்
எண்ணத்தைப் பகிர்கிறோம் !

++++++++++++++++

இசைக்கீதம் யாரேனும் பாட விழைந்தால்
இனிமை மிக்கதாய் இருக்க வேண்டும் !
நாம் ஒயின் குடிக்கிறோம்
நமது வாயிதழ் மூலமின்றி !
நாம் உறங்கி விழுகிறோம்
நமது படுக்கையில் இருந்தல்ல !
கிண்ணத்தை நெற்றியில் உரசு
இறப்புக்கும், வசிப்புக்கும் அப்பால்
இந்த நாளை சிந்தித்துக் கொள்வீர் !

+++++++++++++

மற்றவர் வைத்திருப் பதை எல்லாம்
மனதில் இச்சிப்பதை
விட்டு விடு !
அதுவே பாதுகாப் புனக்கு !
எங்கு பாதுகாப் புள்ள தெனக்கு
என்று கேளாய்
இனிமேல் !

++++++++++++++++++

வினாக் களைக் கேட்க
வேண்டாம்
இந்த ஒரு நாள் !
நாள்காட்டி சுட்டும் எந்த ஒரு
நாளும் வேண்டாம் !
இந்த நாளுக்கு
ஓர் உணர்ச்சி உண்டு !
இந்த நாள்
நமக்கு நேச மானது !
உணவு போன்றது !
பரிவானது ! சொல்வதை விட
எளிதானது !

+++++++++++++++++++

சிந்தனை யாவும் வார்த்தைகள்
செதுக்கியவை !
ஆயினும்
இந்த நாள்
சிந்தனைக்கும் கற்பனைக்கும்
அப்பாற் பட்டது !
அவை இரண்டும் தாக முள்ளவை
தண்ணீ ருக்கு மென்மை
தருபவை !
அவற்றின் வாய் வரண்டவை !
களைத்துப் போனவை !
இக்கவிதையில்
மற்றவை படிக்க இயலாமல்
மங்கிப் போனவை !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 20 2010)

Series Navigation

This entry is part [part not set] of 34 in the series 20100926_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -19 திறப்பாய் உனது புனை நினைவை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
திறப்பாய் உனது புனை நினைவை
(Unfold Your Own Myth)
++++++++++++++

பொழுது புலர்ந்ததும்
எழுந்து யார்
பூத்தெழும் ஒளியை நோக்குவார் ?
அணுக்களைப் போல்
வக்கிரமாய்
வட்ட மிட்டுவதை
யாரிங்கு பார்ப்பது ? தாகமுள்ள
நீர்ச்சுனை ஒன்றை
யார் ஒருவர்
நெருங்கிச் சென்று
நிலவு பிரதி பலிப்பதை
நேராகக் காண்பது ?
கவலையில் மூப்படைந்த
கண்ணில்லா ஜேகப்* போல்
மரணமுற்ற மைந்தன் உடை நுகர்ந்து
மறுபடியும்
கண்ணொளி பெற்றது யார் ?
வாளி ஒன்றைக்
கீழிறக்கி ஓடும்
ஞானத் தூதுவரை
மேல் தூக்கி வருவது யார் ?
தீயை நாடிச் சென்ற
மோசஸ்* போல்
பொழுது புலர்ச்சியில்
எழுந்திடும் நெருப்பைக்
கண்டது யார் ?

++++++++++++++++

பகைவரிட மிருந்து
தப்பிக் கொள்ள
இல்லம் ஒன்றில் ஒளிந்து கொண்ட
ஏசு நாதர்
புதியதோர் உலகுக்குக்
கதவு திறந்தார் !
மீனை அறுத்த சாலமன்
பொன் மோதிரம்
ஒன்றைக் கண்டான் !
தூதரைத் தாக்கிக் கொல்லப்
பாய்ந்த ஓமார்*
ஆசிகள் பெற்று
ஏகினான் !
மானை விரட்டிப்
போனவர்
எல்லா இடத்துக்கும்
போவார் !
ஒரு துளிக்கு
வாய் திறக்கும் சிப்பியில்
இப்போது
இருப்பதோர் முத்து !

+++++++++++++

சிதைந்த குவியல்களில்
திசையற்றுத்
திரியும் நாடோடி ஒருவன்
செல்வீகன் ஆவான்
திடீரென்று !
திருப்தி அடையாதீர்
எப்படிப் பிறர் இருந்தார்
என்னும்
இந்தப் புனை கதைகளில் !
உமது புனைவு உணர்வுகளைத்
திறந்து வைப்பீர்
சிக்கலான விளக்க மின்றி
பிறருக்குப் புரியும் படி !
திறந்து வைப்போம் உமக்காக !
மோசடிகள்,
பாசாங்குகள் நோக்கி நடந்தால்
பாரமாகும் கால்கள்
களைப்படைந்து !
ஒருகணம் உனக்கு வந்திடும்
இறக்கை முளைத்துப்
பறப்பதாய் !

++++++++++++++++++

*ஜேகப், *மோசஸ், *சாலமன் பைபிள்
கூறும் நபர்கள்.
*ஓமார் இஸ்லாமிய நபர்.

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 13 2010)

Series Navigation

This entry is part [part not set] of 33 in the series 20100919_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
பூமியின் கூக்குரல்
++++++++++++++

புவித்தளம் போல் உணர்கிறேன்
வியப்புடன் !
எத்துணை அரிய விளைவை
பெற்று வந்துள்ளது
இச்சூழ்வெளி !
எனக்குத் தெரிந்த தெல்லாம்
என்னுள் வளரும் !
ஒவ்வொரு மூலக்கூறையும்
மழைப் பொழிவு
கர்ப்பம் ஆக்கும்
மர்மத்தை நிரப்பி !
பிள்ளைப் பேறு வலியில்
தாயுடன் அலறுவோம்
நாமெல்லாம் !
பூமியும் அலறு கிறது :
“நான்தான் சத்தியம் !
கீர்த்தி இங்குள்ளது !”

++++++++++++++++

திறக்கிறது பூமி ! அதிலிருந்து
பிறக்கிறது ஓர் ஒட்டகம் !
மரம் ஒடிந்து
கிளை ஒன்று விழுகிறது !
அங்கே ஒரு பாம்பு !
நபி நாயகம் நவில்கிறார் :
“மெய்யான
நம்பிக்கை கொண்டவன்
நல்லதோர் ஒட்டகம் போன்றவன் !
தன்னை ஒழுங்காய்ப் பேணும்
எஜமா னனை மட்டும்
எதிர்நோக்கும் அது
எப்போதும் !
வைக்கோல் இடுவான் அவன் !
முழங்காலைக்
கட்டிப் போடுவது
தாங்கிக் கொள்ளும் சட்டம் !
கட்டுப்பாடு நீக்கிய பின்
ஒட்டகம்
நடனம் ஆட விடப்படும்
அங்கியைக் கிழித்துக் கொண்டு
கடிவா ளத்தை
அறுத்துக் கொண்டு !

+++++++++++++

புதிய வடிவத்தில் தளிர்க்கும்
பயிரினம்
பூமியின் தளத்தில் !
கற்பனை செய்யாத
அற்புதச் செடிகள் முளைக்கும் !
நடனமிடும் ஒட்டகம்
அவை மேல் !
இந்தப் புதிய விதைகள் எல்லாம்
என்னதான் முயன்றாலும்
வேறோர் பரிதியை
விளக்கமாய்க் காட்டுவ தில்லை !
அவை மறைக்கும் அதனை !
ஆயினும்
முயற்சி அளிக்கும் மகிழ்ச்சி
சிப்பிக்குள் இருக்கும்
முத்துக்களை
ஒவ்வொன்றாய் வெளியே
எடுக்கும் போது !

++++++++++++++++++

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (September 6 2010)

Series Navigation

This entry is part [part not set] of 37 in the series 20100912_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நீராவிப் புகை இழைகள் கவிதை -17 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

நிரப்பிடும் குளிக்கும் இடத்தை
நீராவி !
விழித்திடும் சுவரில் உறைந்த
துளிகள் !
திறக்கும் ஈரக் கண்கள்
வட்டமாய் !
சுயக் காதல் விழிகள்
நோக்கும் வெகு தூரம் !
புதுச் செவிகள்
எக்கதையும் கேட்க விழையும் !
நண்பரைப் போல்
வடிவங்கள் எல்லாம்
நடனங்கள் ஆடும் நீரில்
ஆழமாய் பாய்ந்தும்
மேல் எழுந்தும்
மீண்டும் குதித்தும் !

++++++++++++++++

முற்றத்தில் நீராவி கசியும்
மறுபடி கேட்கும் அதன் அரவம் !
ஒரு மூலையில் துவங்கி
ஓடும் அடுத்த மூலைக்கு
சிரித்த வண்ணம்
நீராவி !
எவரும் கூர்ந்து நோக்கார்
எவ்விதம் நீராவி
ஒவ்வோர் மனத்தின் ரோஜாவைத்
திறக்கிற தென்று !
பிச்சைக் குவளையை
எப்படி நாண யங்களால்
நிரப்பிக் கொள்வது ?
நீண்ட கூடை ஒன்று
நிரம்பிடும் நன்கு உடனே
நீர் விழைவது போல !

+++++++++++++

நீதி வழங்கும் நெறியாளரும்
தவறு செய்த மானிடரும்
தீர்ப்பை மறந்து
சென்றிடுவார் !
ஒருவர் எழுந்து நிற்பார்
உரையாற்ற !
எதிரே இருக்கும்
மரமேஜை புனிதம் அடையும் !
அவ்விநாடி மதுக்கடை
ஆக்கப் படும் ஒயினால் !
மதுவைக் குடிப்பான்
மயக் கத்தில் மாய்ந்தவன் !

++++++++++++++++++

அடுத்து நீராவி
ஆவி யாக மறையும் !
வடிவங்கள்
சுவரில் பதிந்து கொள்ளும்
வெறுமை ஆயின விழிகள்
நேர் கோடாகும் செவிகள் !
வெளிப்புறத்
திரையில் நிகழும் அக்காட்சி !
பறவையின் குரலும்
சருகுகள் சலசலப்பும் கேட்கும்
தோட்டத்தில் !
எழுந்து நிற்போம் இந்த சத்தத்தில்,
காற்றாய் மாறுவோம் !
என்ன நடக்குமென
எவர் சொல்ல இயலும்
எல்லாரும் பேனாவை
கோடி முறை மைச்சிமிழில்
நாடி விடும் போது ?

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 30, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -17 நீராவிப் புகை இழைகள்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++
நீராவிப் புகை இழைகள்
+++++++++++++++++++

மீண்டும் ஒளியை ஏற்றுவாய்
ஒளியூட்டும் ஒன்றிலே !
வாழும் வழியை மாற்றுவாய் !
கடல் கொப்பரையில் நீ
எடுக்கும்
ஒவ்வொரு குவளை
ஒயினும்
நெருப்பைப் பற்ற வைக்கும் !
நெடுங்காலத் துக்கு முன்
செத்துப் போன
ஓரிரண்டு உடல்களும்
உயிர்த்தெழும் !
ஓரிரண்டு குடிகாரர்
சிங்க வேட்டைக் காரர்
ஆவார் !

++++++++++++++++

கறுப்பு முகத்தை வெளுப்பாக்கும்
கதிரவன் ஒளி !
மெய்யான மலர் ஒன்று
மிளிர்ந்திடும் அந்த முகத்தில் !
புல்வெளிகளும்
பூந்தோட்டமும் ஈரமாகும்
மீண்டும் !
வீரிய ஒளி போன்ற
விரல்கள்
எமது தலையை
நளினமாய்த் தடவின !
பிரிவினை எதுவும் இல்லை
விரல்களுக் குள்ளே !

+++++++++++++

பூட்டுத் தாழ்ப்பாளை நகர்த்து !
மேலிருந்து ஓர் அடுக்கு
கீழடுக்கை நோக்கி விழும் !
வெப்பம் பரவிடும் எப்புறமும் !
வெறி கொண்ட
கொப்பரைகள் கொதிக்கும் !
கிழிந்திடும் உடைகள் காற்றினில் !
வெளி விடுவார்
வெகுண்ட கவிஞர்
நீராவிப் புகை இழைகள் !
களிப்புக் கோர் அளவில்லை
ஒளிவெளியில் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 23, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -16 ஏசு கிறித்து வசந்தம்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++

“ஒவ்வொருவரும் உண்டப் பிறகு ஓய்வெடுத்து உறங்குகிறார். வீடு காலியாக இருக்கிறது. பீச் பழம் ஆப்பில் பழம் சந்திக்கவும், மல்லிகைக்கும் ரோஜா மலருக்கும் இடையே உரையாடல் நிகழவும் நாங்கள் தோட்டத்தை நோக்கி வெளியே போகிறோம்.”

ரூமி.

++++++++++++++++
ஏசு கிறித்து வசந்தம்
++++++++++++++++

வசந்த காலமே ஏசு கிறித்து !
தியாகம் செய்யும்
பயிர்ச் செடிகளை
வளர்க்கும் புல் புதர்களில் !
வாய் பிளக்கும் அவை நன்றியில்
வாய் முத்தம் வேண்டி !
ரோஜாவின் சுடரொளிக்கும்
மணிமலர்* ஒளிக்கும்
காரணம்
உள்ளே இருக்கும் விளக்கு !
ஓரிலை நடுங்கும் !
எனக்கும் நடுக்கம் வருகுது
இனிய தென்றலில்
துருக்கிஸ்தான் பட்டுத்
துணி போல் !
ஊது பத்திச் சிமிழ் கனலாய்
ஓங்கி எரியுது !

+++++++++++++

தென்றல் காற்றே புனித ஆன்மா !
மரங்கள் யாவும்
புனித மேரி !
கவனித்து நோக்கு :
கைகோர்த்துக்
கணவனும் மனைவியும் எப்படிக்
களிக்கிறார்
எளிய விளையாட்டில் !
பளிங்கு முத்துக்கள்
ஏடனி லிருந்து
காதலர் இடையே வீசப்பட்டன
திருமண வழக்குப்படி !

+++++++++++++

ஜோஸ•ப் அணியுடை
நறுமணம்
ஜேகப் நோக்கி வருகிறது !
மெக்காவி லிருந்து
முகமது நபியின்
விலை மதிப்பில்லா
செந்நிறக் கல் சிரிப்பொலி
செவியில் கேட்கிறது !
நாமெல்லாம்
இதைப் பற்றியும் அதைப் பற்றியும்
கதைக்கிறோம் !
ஓய்வில்லை நமக்கு
உரையாடும்
இடைவேளை தவிர !

+++++++++++++
மணிமலர்* –> Tulip Flower

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (August 16, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) ஒரு பெரும் வாகனம் கவிதை -15 பாகம் -1

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++
உன் முகத்தை நோக்கும் போது
++++++++++++++++++++++++++++++

நான் உன்முகம் நோக்கும் போது
கற்சிலைகள் தலைசுற்றும்
தோன்றுவது நீ !
நான் கற்ற தெல்லாம்
குழம்பிப் போகும் !
இழப்பது நான்
என் இருப்பிடம் !
முத்துக்களாய் மாறும் நீர்த் துளிகள்
செத்திடும் நெருப்பு ! அது
சிதைப்ப தில்லை எதையும் !
உன் முன்னிலையில்
எனக்கு விருப்ப மான
அம்மூன்று தொங்கு
விளக்கு களையும் நான்
வேண்டேன் !
உன் முகத்தின் உட்புறத்தில்`
புராதன எழுத்தேடுகள்
துருப்பிடித்த கண்ணடி போல்
இருக்கின்றன` !

+++++++++++

காற்றை நீ சுவாசிப்பதால்
புதுப் புதுத்
தோற்றங்கள் உருவாகும் !
ஆசைகள் யாவும்
கீதங்களாய்
வசந்த காலம் ஊர்வது போல்
பயணி செய்யும்
ஒரு பெரும்
வாகனம் போல் !
கவனமாய், மெதுவாய் ஓட்டிச் செல்
வழிப் பயணிகளில் சிலர்
கால் முடவர் !

++++++++++++++

இன்றைக்கு விழித்து எழுந்தோம்
என்றும் போல்
வெறுங் கையாய்
ஒன்று மில்லாது
பயத்தோடு !
படிப்பறையின்
கதவைத் திறவாதே !
எதையும் படிக்கத் துவங்காதே !
இசைக் கருவி ஒன்றை
எடுப்பாய் !
நாம் வழிபடும் அழகுத்துவம்
நமது பணிகளில் புலப்படட்டும் !
நூற்றுக் கணக்கான
தோற்ற முறையில்
துதிக்கலாம் நாமெல்லாம்
மண்டி யிட்டு
மண்ணை முத்த மிட்டு !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 27, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 35 in the series 20100801_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எங்கே இசை பொங்கிடுமோ

கவலைப் படாதே இந்தக்
கானங்களைக் காத்திடுவாய் என்று !
வருத்தம் அடையாதே
கருவிகளில் ஒன்று முறிந்து போயின் !
இசைக் கானமே
இன்பமயம் என நாமெல்லாம்
மூழ்கிக் கிடக்கிறோம் !
யாழின் நாண்களை மீட்டிச்
சூழ்வெளியில்
புல்லாங் குழல் இசை வெள்ளம்
பொங்கி எழட்டும் !
தரணியின் மகர யாழ்க் கருவியே
எரிந்து போயினும்
இன்னும் இசை வெள்ளம் மீட்டும்
மறைந்தி ருக்கும்
இசைக் கருவிகள் !

+++++++++++

மெழுகு வர்த்தி ஒளி துடித்து
அணைந்து போனது !
பிழைத் திருப்பது சிறு
தீப்பொறி
நமது கரங்களில் !
பாடும் இந்த இனிய கலை
ஆடும் கடல் நுரை !
ஆழ்கடல் தளத்தில் எங்கோ
நளின நகர்ச்சிகள்
வெளிவரும் ஓர் முத்திலிருந்து !
பொங்கிக் குவியும் கவிதைப் பாக்கள்
செலவாளி செல்வம் போல்
கட்டுமரக் கட்டை நுனி
கரையிலே விரும்பி
விட்டு விட்டதைப் போல் !
அவை உறிஞ்சும் மெதுவாய்
ஆனால் வலுவாய்
வேர் மூலம் நமக்குத்
தெரியாத வாறு !
வார்த்தையை நிறுத்து இப்போது !
இதயத்தின் நடுவே
திறந்து வை ஜன்னலை !
ஆன்மீகச் சிந்தனை
பறக்கட்டும்
உள்ளே வந்து போய் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 19, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 33 in the series 20100725_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) வசந்த கால மயக்கம் கவிதை -13 இளவேனிற் காலம்

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஒரு வேத முனிக்கு (Mystic) உள்ளொளி உலகமே ஒரு கால நிலை அறிவிப்பிடம் ! அங்கே பிரபஞ்சம் அடங்கியுள்ளது, மொழிச் சின்னமாகப் பயன்படுவதும் அதுவே !

கவிஞானி ரூமி

******************

அல்லிக்குத் தலை வணங்கும்
மீண்டும் ஊதாப் பூ !
அவள் பாவாடையைக் கிழிக்கும்
மீண்டும் ரோஜாப் பூ !
பசுமை இனங்கள் பறந்து வரும்
பிற உலகி லிருந்து !
போதையில் கிடப்போன் தென்றலை
மோகித்தல் புதுமை
மூடத் தனம் !
மீண்டும்
மலை உச்சியின் மீது
அனிமோன்* பூவின்
இனிய மெய்ப்பாடுகள் தோன்றும் !
அயாசிந்த்* மல்லிகை யோடு
சம்பிர தாயம் பேசும் :
“சமாதானம் நெருங்கட்டும் உன்னை !
அடைவாய் நீயும் அமைதி !
என்னோடு நடப்பாய்
இந்தப் பசும்புல் வெளியில் !
மீண்டும் சூ•பிகள் காணப் படுவார்
எங்கெங்கு நோக்கினும் !

+++++++++++

மொட்டு நாணி உள்ளது
சட்டென
முகத்திரை நீக்குது காற்று
“என் தோழி” எனக் கருதி !
நதியில் நீர் போன்றும்
நீரில் தாமரை போன்றும்
தோழி தோன்று கிறாள் இங்கே
நீ விளிக்கும் போது
தளப் பூக்கள் கண்சிமிட்டும்
கொடிப் பூக்களை !
செடியிடம் சொல்லும் மொட்டு :
“நீ தான் எனது
சுமைதாங்கி !”
“இந்தக் குடில்கள் யாவும்
சொந்தம் உனக்கு !
உனை வரவேற் கிறேன்”
எனக் கூறிடும் செடி !
ஆரஞ்சை நோக்கி
“ஏன் முகஞ் சுழிப்பு ?”
என்று கேட்கும் ஆப்பிள் !
“காயப் படுத்த விழைவோர் என்
கவினைக் காணார் !
மீண்டும்
வந்தது வசந்தம் !
ஒவ்வொன் றுக்கும் உள்ளே
வசந்தத்தின் அடிப்படை
எழுகிறது !
நிலவு ஒன்று
நுழைந்து செல்லும்
நிழலி லிருந்து !
பல்வேறு முயற்சிகளைச்
சொல்லாது விட வேண்டும் !
நேரம் இருட்டி விட்டது
நேற்றிரவு
விடப் பட்ட உரைகளைத்
தொடர்வோம் நாளை !

++++++++++++

அனிமோன்* பூ – Anemone – Poppy like Flower
அயாசிந்த்* பூக்கள் -Hyacinth Flowers

****************
சூ•பி Sufi & Sufism : Sufism or Taṣawwuf is, according to its adherents, the inner, mystical dimension of Islam.
Classical Sufi scholars have defined Sufism as “a science whose objective is the reparation of the heart and turning it away from all else but God.” Alternatively, in the words of the renowned Sufi teacher Ahmad ibn Ajiba ” a science through which one can know how to travel into the presence of the Divine, purify one’s inner self from filth and beautify it with a variety of praiseworthy traits.”

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -4

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சோற்று மூட்டை

சோற்று மூட்டை காலியாகத்
தொங்கிக் கிடந்ததைச்
சூ•பி (Sufi*) ஒருவர் கண்டார்
சுவர் ஆணியில் !
சினம் மிகுந்து
தனது உடைகளைக் கிழித்து
அலறினார் :
பசித்தவருக்குப்
பசியாற்ற
உணவுப் பண்ட மில்லை !
எரிச்சல் மிகைப்படப் பிறரும்
அவருடன் சேர்ந்தார்
அக்கினிப் பசிக் காதலால்
அரவத் தோடு
முணு முணுத்து !

+++++++++++

“காலிப் பாத்திரம் அது” என்பார்
மெதுவாய்க்
கடந்து போவோர் !
சூ•பி சொல்வார் : விலகிச் செல் !
யாம் விரும்பாததை எல்லாம்
நீவீர் வேண்டுவீர் !
நேசர் அல்லர் நீவீர் யாவரும் !
நேசருக்கு
பாசமே உணவு !
உணவுப் பண்ட மல்ல !
நேசம் கொண்டோர் எவரும்
வாழ்வைக்
காதலிப்ப தில்லை !
காதலர் வாழ்வைப் பற்றி
கவனிப்ப தில்லை !
முதலின்றி வட்டி சேர்க்கும்
மனிதப்
பதர்கள் அவர் !

+++++++++++++++

இறக்கை இல்லா விடினும்
பறப்பார் அவர்
தரணி முழுதும் !
கரங்கள் இல்லா விடினும்
களத்தில்
போலோ பந்தைத் தூக்கிச்
செல்வார் !
சூ•பி மெய்த்துவம் மோந்து
சுவாசிப்பார் !
இன்று தூய ஒளிக் காட்சியைப்
பின்னிக்
கூடையாய் நெய்கிறார் !
கூடாரத்தைக்
கண்ட இடமெல்லாம் இடுகிறார்
காதலர்கள் !
களத்தைப் போல்
கூடாரம்
அனைத்தும் ஒரே நிறத்தில் !

++++++++++++

தாய்ப் பால் அருந்தும் சிசு
சுட்ட மாமிசத்தின்
சுவை அறியாது !
ஆன்மா வுக்கு
உணவில்லா வாசனையே
தனக்குணவு !
எகிப்திய மனிதனுக்கு
நைல் நதி
செந்நிறமாய்த் தெரிகிறது !
யூதனுக்கு நதி
தெளிந்தி ருப்பதாய்த்
தெரிகிறது !
ஒருவனுக்கு
பெரு வீதியாய்த் தெரிவது
பேரிட ராய்த் தெரியும்
வேறொரு வனுக்கு !

****************
Sufi & Sufism : Sufism or Ta?awwuf is, according to its adherents, the inner, mystical dimension of Islam.
Classical Sufi scholars have defined Sufism as “a science whose objective is the reparation of the heart and turning it away from all else but God.” Alternatively, in the words of the renowned Sufi teacher Ahmad ibn Ajiba ” a science through which one can know how to travel into the presence of the Divine, purify one’s inner self from filth and beautify it with a variety of praiseworthy traits.”

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++
சுயப் புராணம் வேண்டாம்
++++++++++++++++++++++++++++++

எனது வார்த்தை களைப்
பணம் கொடுத்து வாங்கு வோரை
ஒரு காலத்தில் எதிர்பார்த்து
விரும்பினேன் !
இப்போது என் படைப்பின்றி
என்னை மட்டும்
வாங்குவோர்
வர வேண்டுமென விழைகிறேன் !
கவர்ந்து சிந்திக்க வைக்கும்
கற்பனைக் காட்சிகள்
அநேகத்தை
உற்பத்தி செய்தேன்
அற்புத ஒளித் திலகமான
ஆப்ரகா மோடும்
அவரது பிதா அஸாரோடும்* !
அவ்விதம் செய்ததில்
அயர்ச்சி அடைந்தேன் நான் !

+++++++++++

பிறகு வடிவ மில்லா
ஒரு காட்சி
வருகை தந்தது !
விரைவில் அகன்றேன் !
அங்காடியைக்
கவனித்துக் கொள்ள
எவனை யாவது
வைத்துக் கொள் !
சுயப் பெருமையை
மயக்கிக் காட்டிடும்
வணிகத்தைப்
புறக்கணித்து வருகிறேன் !

+++++++++++++++

முடிவில் தெரியுது எனக்கு
பித்த மயக்கத்தின்
விடுவிப்பு ! மீண்டும்
தயங்காமல் ஏனோ வருகிறது
சுயப் பெருமை மயக்கம் !
“விட்டு வெளியேறு,” என்று
சட்டென அலறுவேன் !
முற்றும் சிதைகிறது அச்சிந்தை !
என் இனிய காதலி !
தேசக் கொடி தான்
நேசக் கையில் வசப்படக்
காற்று வேண்டும் !
ஆனால்
சுயக் கொடி வேண்டாம் !

***************
ஆஸார் *Azar – Abraham’s Father

*****************

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 28, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 34 in the series 20100704_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++
இறைவன் உன்னோடு உள்ளான்
++++++++++++++++++++++++++++++

என் இனிய காதலி !
இந்த மர்மத்தை விளக்கும்
எனக்கோர் நிகழ்ச்சியைச் சொல்
இப்போது !
எப்படிச் சுதந்திர மாய் நாம்
இயங்கி வந்தோம் !
ஆயினும் நாம்
வலிந்து செயற் பட்டோம் !
முடக்கு வாதத்தில் ஒரு கரம்
நடுங்கிடும் !
ஆடிடும் மறு கரம்
அதனைத் தடுக்க முனையும்
தருணத்தில் !

+++++++++++

நரம்பு நடுக்கம்
இரண்டும்
இறைவனால் வந்திடும் !
ஆனால் உனக்குள்ளது
ஒன்றின் மேல் குற்ற உணர்வு !
ஆனால்
அடுத்த கரம் பற்றி நீ
விடுப்ப தென்ன ?
இவை ஞான வினாக்கள் :
ஆன்மா நெருங்கும் அவற்றை
வேறு முறையில் !
ஓமாரின் விஞ்ஞான நண்பன்
பூல்-ஹாக்கம்*
எளிய பிரச்சனைகள் தீர்வுகளில்
இருப்பார் நிபுணராய் !
ஆனால் ஓமாரை
ஞான ஒளிச் சிந்தனையில்
வியந்து
காண முடிவதில்லை விஞ்ஞானி !
புத்தகத் துக்கு மீள்கிறேன்
இப்போது.
இறைவன் உன்னோடு உள்ளான்
எங்கு நீ இருப்பினும் !
ஆனாலும்
நான் எப்போ தவனை விட்டு
நழுவிச் சென்றேன் ?

++++++++++++

அறிவின்மை என்பது
இறைவன் சிறைக் கோட்டை !
அறிவுப் புலமை
இறைவனின் மாளிகை ! நாம்
உறங்கிக் கிடப்பது
இறைவன் மெய்மறந்த நிலையில் !
விழித்தெழுவது நாம்
இறைவன் திறந்த கரங்களில் ! நாம்
அழுது கொண்டிருப்பது
இறைவன்
மழை பொழியும் போது !
புன்னகை செய்வது நம் இறைவன்
மின்னல் வெடிகளில் !
நமக்குள்
சண்டை யிடுவதும் நாம்
சமாதானம் செய்வதும்
கடவுளின் உள்ளே தான்
நடக்கின்றன !

+++++++++++++++

அப்படி யாயின்
இப்படிப் பல்வேறு சிக்கல்கள்
பின்னிய உலகில்
நாமெல்லாம் யார் சொல்வீர் ?
ஆதி காலத்தில்
மெய்ப்பாடு நேர்மைக் கோடாகத்
தோன்றியவர்
அல்லாஹ் இறைவன் !
நாமெல்லாம் வெறும்
காலிப் பாத்திரம் !
சூனியம் !

*****************
பூல்-ஹாக்கம்* (Scientist Bu’l-Hakam)

*****************

(தொடரும்)

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 21, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 36 in the series 20100627_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -12 – பாகம் -1 கடவுளின் படைப்பு வேலை

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++
கடவுளின் படைப்பு வேலை
++++++++++++++++++++++++++++++

மனிதன் செய்யும் வினைகட்கும்
கடவுள் புரியும்
இயக்கங் களுக்கும்
இடையே உள்ள வேற்பாடுகளை
சிந்தித்துப் பார் !
அடிக்கடி நாம் கேட்கிறோம் :
“அப்படி ஏன் செய்தாய் ?”
அல்லது
“இப்படி ஏன் நடந்தாய்”
என்று !
நாம் செய்ய முனைந்தவை
நாமின்று செய்து
முடித்தவை எல்லாம்
கடவுளின்
படைப்பு வேலை கள்தான் !

+++++++++++

பார் நீ பின்னோக்கி
நம் வாழ்வில்
நேர்ந்த நிகழ்வுகளை எல்லாம்
ஆராய்வோம் !
வேறு முறை நோக்கொன்றும்
உள்ளது
ஒரே காட்சி முறையில்
முன்னும் பின்னும் ஆராய்வது;
அவற்றைக் காரண மோடு
புரிந்து கொள்வது
அரிது !
இறைவன் ஒருவனே அதனை
அறிவான்.

+++++++++

கடவுளுக்குப் புரியும் அது !
விழுவதைத் தூண்டுவதாய்ச் சொல்லி
நழுவிச் செல்லும் சாத்தான் !
ஆயினும்
ஆதாம் சொல்வான் கடவுளிடம்
“யாமிதை விரும்பிச் செய்தது
எமக்காகத் தான்”
இந்தப் பாப ஒப்புதலுக்குப்
பிறகு அவனை
இறைவன் கேட்டார் :
இவை அனைத்தும் எனது
கட்டுப் பாட்டுக்கு
உட்பட்டதால்
ஏனதைக் காரணம் காட்டி
மானத்தைக்
காத்திட வில்லை ?

++++++++++++

“அச்சமே காரணம்” என்பான்
ஆதாம் !
மரியாதை யோடு வாழ
விரும்பினேன் !
பிறருக்கு
மதிப்பளித்து வாழ்பவன்
தனது
மதிப்பைப் பெறுவான் !
இன்பச் சூழ்நிலை அமைப்பவன்
இனிய தின்பண்டம்
பெறுவான் !
நல்வழி ஆடவர்
நன்னெறி மாதரைக் கவர்ந்திட
முனைவார் !
உன் நண்பனை மதித்திடு !
கடுமையாய் நீ நடத்தினால்
நடப்ப தென்ன பார் ?

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 14, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 26 in the series 20100620_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11 – பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++
பொறுமையின் பெருமை
++++++++++++++++++++++++++++++

பிற வழிகள் மூலமாய் எழும்
உடலின் இச்சைகள்
அறிவிக்காது
நெருக்கிடும் தொடர்புகள் !
பொறுமை யாய்
இருக்க வேண்டும் அவற்றுடன் !
உறவுகள் உதவலாம்;
எனெனில்
அமைதியும் அன்பும் பற்றிடப்
பொறுமை கொள்ளும்
திறமையே நீடிக்கும்.

+++++++++++

ரோஜா இதழ்கள் முள்ளுக்கு
அருகிலே
இருப்ப தால்தான் அதன்
நறு மணத்தைப்
பொறுமை
காத்து நிற்கிறது !
மூன்றாண்டு கழிந்த பின்னும்
ஆண் குட்டிக்குப்
பால் அமுது அளிக்கும்
தாய் ஒட்ட கத்தின்
பொறுமை !
தேவ தூதர் நமக்குப்
போதிப்பதும்
பொறுமை ஒன்றுதான் !

+++++++++

பொறுமை என்பது
கவன மாக
வெகு நளின மாகக்
நெசவு செய்யப் பட்டுள்ளது
அணியும் ஆடையில் !
புனித நட்பும், மனிதப் பற்றும்
பொறுமை யுள்ளவை !
உறுதி அளிக்கும்
பந்தப் பிணைப் புக்கு !
தனிமை உணர்ச்சியும்
தாழ்மை எண்ணமும்
பொறுமை இன்மையைப்
புலப்படுத்தும் !

++++++++++++

கடவுளை நம்புவோர் சூழ்ந்திட
உடனி ருப்பாய்
தேனோடு கலக்கும்
பால் போல !
போவதும் வருவதும்
போல,
ஏறியும் படிவதும் போல
மாறுபவை
எனது விருப் புக்கு
மாறானவை !
தேவ தூதரைப் படைத்த
தேசத்தில் வாழ்வீர் !
இன்றேல்
பாலை வனப் பயணத்தில்
பாதை ஓரத்தில்
தனித்து எரிந்தணையும்
தீ போல்
நீ இருப்பாய் !

*****************

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 7, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 31 in the series 20100613_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

எரிந்தழியும் மெழுகுவர்த்தி

என்னருமை ஆத்மாவே ! இந்தப்
பரந்த வெளிக் குள்ளே
உனக்கு
உறவில்லை என்றால்
பின் ஏன் அதில் வலை வீசி
எதையோ
பிடிக்க வைத்துக்
காத்திருக் கிறாய் ?
கண்ணுக்குப் புலப்படாத இந்தக்
கடலானது
களஞ்சியமாய்க் கொடுத்துள்ளது !
ஆயினும்
அதை மரணம் என்றும்
ஊழியம்
வாழ்வு நீடிக்கும் என்றும்
சொல்வாய் !

+++++++++++

கடவுள் அனுமதித் துள்ளர்
சிற்சில
மர்மத் திருப்பங்கள்
விளைவதை !
அதனால் தெரியுது உனக்கு
நீ விரும்பும்
தேள் குழியும்
சூழ்ந்துள்ள எழில் வெளியில்
பாம்புப் புற்றுக்களும் !
மரண அச்சமும்
வரண்ட வாழ்க்கையும்
எத்தகை வியப்பெனத் தெரியும்
உனக்கு !
பேராசை என்பது
எத்தகைய
மன முறிவு கொண்டு
ஒட்டிக் கொள்ளும்
இணைப்புகள் !

+++++++++

தாய் தந்தையர் உனது
இரத்த இணைப்புகள்
அரவணைப்பு விருப்புக்கு
உகந்தவர்
தந்தை தாய் சொற்படி நடப்பதைத்
தவிர்ப்பாய் !
பாதுகாப்பது அவராயினும்
உன்னைச்
சிறைப் படுத்தவர் !
தீவிரப் பகை ஆவார்
உனக்கு !
அச்சம் உண்டாக் குவர்
சூனியமாய்ப் போனது உனது
துச்ச வாழ்வு !
ஒரு நாள் நீ
உவப்படைவாய் கண்ணீர் சிந்தி
பெற்றோரைப்
புரிந்து கொள்ளாத
பிழையை எண்ணி !

*****************

உடல் உனது உள்ளத்தின்
ஆன்மாவை வளர்க்கும்
உணவூட்டி !
ஆயினும்
பிறகு தவறான
அறிவுரை போதிக்கும் !
உருவம் பின்பு
இரும்புச் சங்கிலி கோர்த்த
கவசமாகும்
அமைதிக் காலத்தில் !
கோடையில் கூடும் வெப்பம் !
குளிர் காலத்தில்
கூதல் மிகையாகும் !

(தொடரும்)
***************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 31, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 23 in the series 20100606_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -11

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎரிந்தழியும் மெழுகுவர்த்தி

எரிந்த ழியவே
உருவாக்கப் பட்டிருப்பது
ஒரு மெழுகு வர்த்தி !
அந்த அழிவுக் கோலச்
சந்தர்ப் பத்தில்
நிழல்
விழுவ தில்லை !
சரண் புகும் மெழுகு வர்த்தி
எரி நாக்கைத் தவிர
வேறு ஒன்றில்லை !
நல்லதும், தீயதும் எதுவென
அறியாமல்
தானே மாய்ந்திடும்
தண்டு மெழுகு வர்த்தியைக்
கண்ணால் பார் !
பெருமையும், சிறுமையும்
ஒருங்கே தேடிச் செல்வோம் !
முன்பே இதைச்
சொல்லி யிருக்கிறேன் :
கைத் தொழில் பயில் வதற்கு
இல்லாத ஒன்றைத்
தேடுபவன்
கலைத் தச்சன்!

+++++++++++

கூரை இiடிந்து விழுந்த
பாழும்
குழியைத் தேடிப் போவான்
கட்டடக் கலைஞன் !
காலிப் பானையைத் தேடி
கையில் எடுப்பான்
நீர் பரிமாறி வருபவன் !
ஓர் கதவு மில்லா
வீடு தேடிப் போவான்
வேலை வேண்டும் தச்சன் ஒருவன் !
வேலைக் காரர் எல்லாம்
காலி யாக இருப்ப வற்றைப்
பூர்த்தி செய்ய
வேர்த்து விரைவார் !
ஆதலால் இல்லாமை ஒன்றே
ஊதிய எதிர்பார்ப்பு
நம்பிக்கை !
தவிர்த்திட நினைத் திடாய்
அவற்றை எல்லாம் !
நீவீர் வேண்டுவது
நிறை வேறும் அவற்றால் !

*****************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 24, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -10

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++++++++++++++++++++++
காதல் மௌனம்
++++++++++++++++++++++++++++++

மலர்ந்த இப்புதிய காதலுக்குள்
மடிந்து விடு ! ஆயினும்
உனது பாதை
உருவாவது மறு பக்கத்தில் !
வானமாக
வடிவு எடுப்பாய் !
சிறைக் கோட்டை மதிலை
இடிக்க
கோடரி எடுத்துப் போ !
தப்பிச் செல் !
நிறத்துக்குள் உருமாறி
திடீரெனத் தோன்றியவன் போல்
வெடித்துச் செல் !
இப்போதே செய்து முடி !
அடர்ந்த புகை மூட்டம்
உனைப் போர்த்தி யுள்ளது.
நழுவிச் செல் அப்பகுதியை விட்டு !
மரணம் அடைவாய்
அமைதி யாக !
மௌனமே மெய்ப்பிக்கும்
மரணத்தை !
முந்தைய உந்தன் பிறப்பு
மூர்க்கத் தனமாய் மௌனத்தில்
முளைத்த
ஓர் ஓட்டப் பந்தயம் !
வாய் பேசாத முழுநிலவு
இப்போது
வானில் எழுகிறது !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 18, 2010)

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று = கவிதை -9

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா++++++++++++++++++++++++++++++
காதல் உலகு ஒரு சூனியம்
++++++++++++++++++++++++++++++

நமது உயிர் வாழ்வை
இருட்டடிக்கும்
ஒரு சூனியத்தைப் போற்று !
நமது காதலால்
உருவான
இந்தக் குடியிருப்பிடம்
தோன்றியது
சூனியத் துக்கு !
எப்படியோ வெறுமை
புகுந்திடும்
இவ்வுயிர் வாழ்வு மங்கிப் போய் !
மீண்டும் மீண்டும்
போற்று அந்த விளைவை !

+++++++++++++

வெகு காலங் களாய்
வெறுமையில் கடத்தினேன்
எனது குடிவாசத்தை !
பிறகு ஒரே பாய்ச்சலில்
கரத்தின் ஒரே சுழற்சியில்
அப்பணி முடிந்தது !
நான் யார் என்பது
நழுவிப் போனது !
முன்னிருப்பது
கண்ணுக்குத் தெரியாது !
ஆபத்தைத் தரும் அச்சம்
அகன்றது !
எனது நம்பிக்கையும்
மலைமேல் ஏறும் தேவையும்
விடுதலை பெற்றன !

++++++++++++

இங்குள்ள குன்று இப்போது
வெறுமை நோக்கி
வெளியே வீசப் பட்ட
ஒரு துரும்பு இழையின்
சிறு துணுக்கு !
பொருளற்றுப் போயின
நான் கூறும்
இந்த வார்த்தைகள் !
குடிவாசம், சூனியம், சிறு துரும்பு
குன்று, வாய்ச் சொற்கள்
கூறுகின்ற
அர்த்தம் யாவும்
பலகணி வழியே கூரையில்
சரிந்து
நழுவிச் செல்லும் !

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 26 in the series 20100516_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று கவிதை -8 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++++++++++
போதுமா சொற்கள் ?
++++++++++++++++++++++++++++++

அமைதிப் புறாவை விட நீ
மௌனமாய் இரு
அந்த மரத்தி லிருந்து
சிறகும் இறக்கைகளும் உன்மேல்
துளிர்க்கும் போது !
புறாச் கூச்ச லுக்கும்
திறக்காதே உனது வாயை !
குளத்தில் பாயும் தவளையைப்
கொத்திப் பற்ற முடியாது
பாம்பு !
தவளை மீண்டும் கரைமேல்
தாவிக் கத்தும் !
துரத்திடும் அதைப் பாம்பு
மறுபடியும் !

+++++++++++++

கீச்சுக் குரல் கொடுக்கத்
தவளையும்
கற்றுக் கொண்டால்
புரிந்து கொள்ளும் பாம்பு
தவளையின்
அடித்தளக் குரலென்று !
தவளை
முழு மௌனத்தில் இருந்தால்
மீண்டும்
தூங்கச் செல்லும்
பாம்பு !
தவளைக்குக் கிடைக்கும் பார்லித்
தானியம் !

++++++++++++

ஆங்கே மூச்சு விட்டு
ஆத்மா வசிக்கும்
அமைதியாய் !
பார்லி தானியத்தை
நிலத்தில்
விளைத்தால் முளைக்கும் !
மோதுமா இந்தச் சொற்கள் ?
அல்லது
பிழிந்து சாரெடுக்க வேண்டுமா
இதற்கு மேலும் ?
நான் யாரெனச் சொல்
நண்பனே ?

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 3, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 21 in the series 20100509_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++++++++++
ஓளியும், நிழலும்
++++++++++++++++++++++++++++++

உலகத்தின் ஒரு பகுதி
உலகை விட்டு
எப்படி
விலகிச் செல்லும் ?
நீரை விட்டு
நீர்மை எவ்விதம்
நீங்கும் ?
தீயை மென்மேலும் ஏவி
தீயை அணைக்க
முயலாதே !
காயத்தைக் கழுவக்
குருதிச்
சாயத்தை ஊற்றாதே !

+++++++++++++

எத்தனை விரைவாய் நீ
ஓடிச் சென்றாலும்
அத்தனை வேகத்தில்
உன்னைத் தொடரும்
உன் நிழலும் !
நிழல் முன்னே செல்லும்
சில சமயம் !
உச்சி வேளைச்
சூரியன்
நிழல் வடிவைச்
சிறிய தாக்கி விடும்
நிச்சயம் !

++++++++++++

உனக்குப் பணி புரியும்
அந்த நிழல் !
உன்னைக் காயப் படுத்தும்
ஒன்று
உனக்கு ஆசிகள் வழங்கிக்
கண்காணிக்கும் !
இருளே உனக்கு
எரியும் மெழுகு வர்த்தி !
வரையறை
வட்டங் களே நீ
தீர்க்கப் போகும்
மர்ம வினாக் களுக்கு
விடைதேடும்
கர்மக் கோடுகள் !

++++++++++

விளக்கம் தர முடியும்
இதற்கு !
ஆயினும் அது
உன் இதயத்தின்
கண்ணாடிக் கவசத்தை
உடைத்து விடும் !
பிறகு அதைப்
பிணைப்பது சிரமம் !
நிழலும் தேவை
உனக்கு !
ஒளியும் வேண்டும்
உனக்கு !

(தொடரும்)

*****************

தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 20, 2010)

Series Navigation

This entry is part [part not set] of 29 in the series 20100502_Issue

Comments are closed.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -7

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++++++++++++++++++
தாகமுள்ள ஒரு மீன்
++++++++++++++++++++++++++++++

எனக்குக் களைப்பு வருவதில்லை
உனது அருகா மையில் !
வெறுப்படை யாதே நீயும் என்மேல்
பரிவு மேற்கொண்டு !
தண்ணீர்க் கூஜா
நீர்க் குடங்கள் போன்ற
தாக முள்ள
சாதன மெல்லாம்
ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்
ஒருநாள்
என்னை விட்டு !
மோகம் கொண்டதில் என்றும்
தாகம் தீராத
தாகமுள்ள மீன் ஒன்று
வாசம் செய்யும் என்
உடலுக் குள்ளே !
கடலுக்குப் போக
காட்டுவாய் எனக்குப் பாதை !
குறை குடத்தையும்
சிறு கிண்ணத் தையும்
உடைத்து விடு !
இந்தக்
கனவு வாழ்வையும்
எனது மன உலைச் சலையும்
தவிர்ப்பாய் !

+++++++++++

நேற்றிரவு
முற்றத்தில் பொங்கி எழுந்த
கடல் அலைகளில்
மூழ்கட்டும்
இதயத்துள் மறைந்துள்ள
எனது இல்லம் !
நிலவு கிணற்றில் குதித்தது போல்
விழுந்தார் ஜோஸப் !
எதிர்பார்த்த
அறுவடை விளைச்சலை
அடித்துச் சென்றது வெள்ளம் !
அதற்குக் கவலை இல்லை !
என் புதைப்புக் கல்லின் மேல்
எரியுது நெருப்பு !
உரிய மேன்மை வேண்டேன்,
மரியாதை வேண்டேன்.
அறிவும் வேண்டேன் !
கான இசை வேண்டும் !
காலைப் புலர்ச்சி வேண்டும் !
நம்மிருவர்
கன்னங் களும் உரசிக் கொண்ட
கணப்பு வேண்டும்
எனக்கு !

+++++++++++

அணிவகுத் திங்கு நிற்கிறார்
அவல மோடு
இராணுவ வீரர்கள் !
ஏக வில்லை நான்
அவரோடு
இணைந்து கொண்டு !
இப்படித் தான் இருக்கும்
என் கவிதை முடியும் போது !
நீடித்த மௌனம்
மூடிக் கொள்ளும்
என்னை !
வியந்து போவேன் நான்
எழுத்து வரிகளைப்
பயன் படுத்தியது
ஏன் என்று ?