கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
பெண் வேட்கையைத் தவிர்
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

ஞானம் பிறந்தது வேந்தனுக்கு !
“தான்றோன்றிச் செருக்கில்
மாற்றான் பெண்ணைப் பிடித்து வந்தேன் !
வேற்றான் ஒருவன் என்
வேட்கைக் கதவைத் தட்டினான் !
பிறன் மனைவி புணர்வோன்
தன் மனைவிக்குப்
“பிம்ப்” எனப் படுவான் !
பிறருக்குக் காயம் உண்டாக்கின்
தன்மேல் காயங்கள்
மென்மேலும் விளையும் !
எனது வஞ்சக வினைகள்
என்னைத் துரோகியாய் ஆக்கிடும்
தோழனுக்கு !
மீளும் இந்தப் பழிபாபம்
வீழ வேண்டும்.”

++++++++++++++

“பெண்ணே !
உன்னை மீண்டும்
அனுப்பி வைப்பேன் தளபதியிடம்
என் மனைவி ஒருத்தி
பொறாமை யுற்றாள் என்று !
தைரிய மாய்த் தூக்கி வந்த
தளபதியே உன்னை
விரும்பித்
திருமணம் புரிவான் !”
என்று கூறுவான் காலி•ப் !
தத்துவ ஞான முதியவனின்
சத்திய ஆண்மை இது !
காலி•ப் மெய்யாய்
ஆண்மைத் தன்மை இழந்தவன் !
அதிகார வாதி !
முதிர்ச்சி யுற்ற மனிதனின்
அதிசய ஆற்றல்
காம இச்சை அடக்கல் !
காலி•ப் மீண்டும் மீண்டும்
வினை விதைத்து
வினையை அறுவடை செய்பவன் !

(முற்றும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (March 14, 2011)

Series Navigation<< 30 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1) >>

This entry is part 2 of 49 in the series 20110320_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா