சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!

கவியோகி வேதம்


சிவனார்தம் சடையிலே வெண்ணிலா தொட்டிடும்
..சீதமுதம் தூய்மை செய்ய,
… .சிறந்திடும் ஊர்பேரும் ‘மதுரை’ என் றாகவும்,
.. “.சியாமளா தேவி!” வந்தாய்!
பவமாயை போக்கவே ‘மந்திர’ ரூபமாய்ப்
…பார்புகழ் ‘மீனாக்‌ஷி’ ஆனாய்!
……பக்தர்எம் நாட்டிலே வடக்கினில் சீருடன்
… ‘மாசிப்’ ப்ரதமை தன்னில்
சுவையாக ஒன்பது நாள்நவ ராத்ரியாய்
… ‘சியாமளா விழா’எ டுத்தார்!
..தூய்மையாய் எம்மனம் மாறவே நீஅருள்
…சுந்தரீ! சரண்பு குந்தோம்!
..

2)-கடல்கொண்ட நீரெலாம் விண்சென்று மேகமாய்க்
..காட்சிஉரு மாறல் போல
..கருணை‘லலி தாம்பிகைக்’ கைவிற் கரும்பிலே
..‘சியாமளை’ கண்டு வப்பார்!
அடல்கொண்ட ‘அறிவெனும்’ தத்துவத் தலைவியே!
..‘அலை’மனம் அடக்கு வாயே!
..அழகாகப் பூஇட்டு நின்பாதம் துதிப்போரை
..அணைக்கவே ஓடி வருவாய்!
.மடல்இட்டுச் சந்தத்தால் பாடிடும் ‘சாக்தரை’
..மணமாக வைக்கும் அம்மே!
‘அம்பிகையின்’ மந்த்ரிணீ!’ பல்உரு கொண்டுநீ
..மனத்தோடு பொருந்து வாயே!
..
3)-அடித்தோனைக் கடிக்கவும் மிதித்தோனை நசுக்கவும்
..‘ஆள்’வைக்கும் காலந் தன்னில்,
..அகம்வரின் பொய்யாக நெய்யொழு கப்பேசி
.அப்புறம் ஏய்க்கும் வேளை,
அடக்காத ஆசையால் மதிகெட்டு ‘சாந்தியை’
..அதிகமாய்ப் போக்கும் நேரம்,
ஆன்மாவில் நீதானே குடிவந்து வழிசொல்லி
..அம்மாபோல் திருத்த வேணும்!
.படிக்காத மூடனும் ‘காளிதாச’ னாகினான்!
. பவித்திர மாதங்கீ ! நகுலீ!
..பலதீய எண்ணங்கள் நெஞ்சிற்குள் போகாமல்
..பலமான ‘த்யானம்’ அருள்வாய்!

Series Navigation

This entry is part [part not set] of 47 in the series 20090828_Issue

கவியோகி வேதம்

கவியோகி வேதம்