சொல்வதெப்படியோ

என் சுவாமிநாதன்


அருகே அருகே வருகிறாய் நீ
அன்புடன் உன்னை விலக்கி நகருகிறேன் நான்

இதழோடு இதழ் பதிக்க வருகிறாய்
இதற்கேன் இப்போ அவசரம் என்கிறேன் நான்

காதோடு வந்து கிசுகிசுக்கிறாய்
காதில் விழாதது போல இருக்கிறேன்

கண்ணால் சேதி பல சொல்கிறாய்
கண்மூடி காண மறுக்கிறேன்

மூக்கருகே முகம் பதிக்கவருகிறாய்
மூச்சடக்கும் ஞானிபோல் மோனத்தவம் செய்கிறேன்

வாய் திறந்து பேசச்சொல்கிறாய்
வாயடைத்துக் கிடக்கிறேன்

எழுதிக் காட்டச் சொல்கிறாய்
எழுத்தறியாதது போல் நடிக்கிறேன்

சிரித்தே சிறையிலடைப்பதேன் என்று வினவுகிறாய்
சிரித்து சிரித்து மழுப்புகிறேன்

மனத்திலுள்ளதச் சொன்னால்
மறுபடியும் என்னிடம் வருவாயோ
மாறாத அன்புடன் இருப்பாயோ
மாற்றிவிட்டு மற்றோர் உறவு காண்பாயோ ?
துணிந்து சொல்லிடத் துணிவில்லையே ?ி
தாலிகட்டினால் தன்னால் வருமோ துணிவு

ஆதலின் அருமைக் காதல !
நேரில் சொல்லத் துணிவில்லாமல்
எழுதிக் காட்டவும் அஞ்சி
இளித்து சாடையிலேயே காட்டி
ஒளித்ததை மனத்திலேயே கேட்டுக் கொள்கிறேன்
‘குளோசப் இன்னும் வாங்கலியா ‘

==============
nswaminathan@socal.rr.com

Series Navigation

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

டாக்டர் என் சுவாமிநாதன்

டாக்டர் என் சுவாமிநாதன்