ஜனவரி 30,2005 – ராஜராஜேஸ்வரம் நிகழ்ச்சி

லலிதா ராம்


அன்புள்ள நண்பர்களுக்கு,

சென்ற வாரம் திண்ணையில் அனுப்பிய அழைப்பிதழ் தொடர்பாக http://www.thinnai.com/le01130515.html ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போய்விட்டது. (நிகழ்ச்சி நிரலில் விஷயம் பொதிந்திருப்பினும், explicit-ஆக குறிப்பிடவில்லை).

தமிழகத்தின் முதுபெரும் வரலாற்றாய்வாளர்களான முனைவர் கலைக்கோவன், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன், முனைவர் இராஜவேலு – மூவரையும் ஒரே அரங்கில் – அதிலும் தஞ்சை இராஜ ராஸ்வரத்தில், சந்திக்க ஒரு அரிய வாய்ப்பாக இந்நி கழ்ச்சி அமையும். நிகழ்ச்சியின் முடிவில் நேரமிருந்தால் ஆய்வாளர்களுடன் இராஜராஜேஸ்வரத்தை சுற்றிப் பார்க்கும் பேரும் நமக்குக் கிட்டும்.

விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர் அனைவரும் ஜனவரி 30 காலை 9.30 மணி வாக்கில் தஞ்சைப் பெரிய கோயில் வளாகத்தி ற்குள் வந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். அங்குள்ள அறிவிப்புப் பலகைகள் நமது நிகழ்ச்சி நடக்கும் இடத்தை உங்ளுக்குத் தெரி யப்படுத்தும்.

என்னுடைய restricted net access-ஐ வைத்துக் கொண்டு அடிக்கடி இணைய உலா வருவதென்பது கடினம். உங்களுக்கு இவ்விழா தொடர்பாக ஏதேனும் கேள்வியிருப்பின் editor@varalaaru.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும். எங்கள் குழுவிலிருந்து யாரேனும் ஒருவரிடைருந்து உங்களுக்கு பதில் வரும். அனைவரும் இந்த அரிய விழாவில் தவறாமல் கலந்துகொண்டு எங்கள் முயற்சியினைச் சிறப்பிக்க மீண்டுமொருமுறை கேட்டுக் கொள்கிறோம்.

அன்புடன்,

லலிதா ராம்

http://www.varalaaru.com

Series Navigation

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

லலிதா ராம்

லலிதா ராம்

You may also like...