பனிப்பிரதேச பேரழகி!

ரசிகன்ஒரு
வெளிர்நீல மைதானத்தின் கீழ்
பனிக்குவியல்களை உரிமை கோர
நிதர்சனப்படுகிறது ஒரு புகைப்படம்!

கொஞ்சம் எடுப்பாகவும்
கொஞ்சம் மிடுப்பாகவும்
வண்ணம் பூசிக்கொள்கின்றன
அவள் அழகுகள்!

மிதமாய்
தூறல் விட்டுக்கொண்டே
அங்குமிங்குமாய்
சில புன்னகை மழைகள்…

ஆர்குட்டையோ
முக நூலையோ
இன்ன பிற சமூக வலைத்தளங்களை
கவர்ந்து விட எத்தனிக்க

முற்றிலுமாக
முடங்கிக்கொள்கிறாள்
ஒரு
குளிர் தாங்கும் மேலாடையில்!


ரசிகன்

Series Navigation22 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22 >>

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue

ரசிகன்

ரசிகன்

You may also like...