பருவகாலம்

ரா.கிரிஷ்


பருவக் காலத்தில் வந்து சொல்லும்
பறவைகள் போல்
என் பருவ வயதில் வந்து
சென்ற காதல் அது!

படிப்பதில் கவனம் செல்லவில்லை

உறங்குவதில் கவனம் செல்லவில்லை

பார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு எண்ணம்

பசியென்ன என்பதை அறியாது போனேன்

கவலைகள் இல்லா பருவம் அது

எதிர்காலம் பற்றிக் கவலையில்லை

நிகழ்காலம் ஒன்றே இன்பமாய் கண்முன்னே

இதோ பருவ காலம் முடியபோகிறது. . .

பறவைகள் எல்லாம் தன் பிறப்பிடம் நோக்கி
பறக்க தொடங்கிவிட்டன. . .

என் காதலும். . .

ரா.கிரிஷ்

Series Navigation

This entry is part [part not set] of 31 in the series 20050707_Issue

ரா.கிரிஷ்

ரா.கிரிஷ்