மழையினால் காலம் ஆன போது

பா. சத்தியமோகன்


எல்லாமும் சிலீரிட்டிருந்தன
கடிகாரத்தின் முள் அமைதியுற்றிருந்தது
மாண்டவர்களின் ஆவியும் குளிரூட்டம் செய்யப்பெற்றது
எந்த ஆடையும் உலகில் ஈரம்பட்டேயிருந்தது
நனைந்த தெரு நடுங்கும் மரம் வழுக்கும் இலைகள்
மெல்ல ஊரும் கருப்பு அட்டைப்பூச்சிகளும் நனைந்திருந்தன
நீர்பட விரும்பாத பூனை ஒன்றை வளர்க்கும் என்னை
ஆகாயத்தில் நடமாடும் ஒருத்தியின் கூந்தல் சாம்பல் நீர் மேகம்
துரத்தி துரத்தி மழை பெய்கிறது
குடிசைகள் மிதந்து தென்னை ஓலைக் கப்பலாக மிதப்பதற்குள்
தேநீர் உறிஞ்சிப் பசியாறும் ஏழைகளின் உதடு
நடுநடுங்கியவாறே பிராத்திக்கின்றன.
கொண்டு புதைப்பதற்குள் மனித உடலில் நிகழும் நீரோட்டம்
வடிந்து வற்றி உறிஞ்சப்படும் காலங்களால் ஆன மழையை ருசித்தபடியே
சுழித்தோடும் குளிரில் .
————-
pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

This entry is part [part not set] of 44 in the series 20031113_Issue

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

You may also like...