…வும், முடிவும், விடிவும், முடி…

அனந்த்


<><><><><><><><><><>

முதுமை…

காலதேவன்
என் உடல்முழுவதையும் தன்
கணக்கையெழுதும் கரும்பலகையாகக்
காணும் காலம்..

வலி என்ற சொல்லின்
வாலிபப் பொருள் மாய்ந்து
வருத்தும் துன்பத்தை வலியுறுத்தும் நேரம்..

என் மறைவில்
இல்லத்தாரின் வருத்ததைவிட
எதிர்பார்ப்பு ஏறும் வேளை…

விரைந்தோடி வந்து
விழும் சுருக்கங்கள்
வேதனையின் பாசறைக்கு
இழுத்துச் செல்லும் படிகளாகும் போது

இன்னும் கொஞ்சம் கூட
நான் இருக்க வேண்டுமா ?
ஐய்யய்யோ! வேண்டாமையா!

மறுபடியும்..
மொழுமொழு என்ற
பிஞ்சு மேனி எடுத்து
வலிமையும் வனப்பும் பெற்று…..

மீண்டும் இக்கவிதையைத் தொடர்வேன்….

<><><><><><><><><><>
dbsvsa@nus.edu.sg

Series Navigation

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

அனந்த்

அனந்த்

You may also like...