காணாமல் போனவைகள்

பகவதி செல்வம்


எப்படியும் வாழலாம்

எவ்வளவு சுலபம்

காணாமல் போனது

கலாச்சாரம் !

மது விற்பனையில்

மகத்தான சாதனை

மறந்துபோய் விட்டது

நதிநீர் பிரச்சனை !

பதுக்கிய பணத்தை

பங்கு வைப்பதுற்குள்

வந்துவிடுகிறது

அடுத்த தேர்தல்

வனவாசம் சென்றுவிட்டன

வாக்குறுதிகள் !

கல்வி

ஒரு மாபெரும்

சமுதாய தொண்டு

யார் சொன்னது

இப்படி ஒரு

லாபகரமான

தொழிலை !

நிம்மதியாக

தூங்கட்டும்

நீதி நூல்கள்

நூல் நிலையத்தில்

அவற்றை ஏன்

தொந்தரவு

செய்ய வேண்டும்

அனாவசியமாக !

Series Navigationவிஸ்வரூபம் அத்தியாயம் 75 >>

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

பகவதி செல்வம்

பகவதி செல்வம்