பாதிக்கப்பட்டவன்!

ரசிகன்


தன்னை அறியாது
நீ முன்னிலை படுத்தப்படுகிறாய்
நினைவு ரோட்டில்….
இரு புற சாலையோர மரங்கள்
உன்னை
கண்பொத்தி அழைத்து செல்கின்றன…
ஊர்திகள்
உன் காது பொத்தி வைத்திருக்கின்றன!

டயர் பஞ்சர் ஒட்டும் கடையில்
முகவரி விசாரிக்கிறாய்…
கிட்டத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு…

இடம் நெருங்கியதும்
தனிமை படுத்தப்படுகிறாய்…
முதலில் ஒரு டம்ளர் தண்ணீர்…
அடுத்து ஒரு தேநீர்…
கூடவே ஒரு சிகரட்!

புரியாத தெளிவோடு
இன்றைய செய்தித்தாளை புரட்டுகிறாய்…
பக்கத்துக்கு பக்கம்
உன்னை தொடர்புபடுத்தியே இருக்கிறது
எல்லா செய்திகளும்!

தற்கொலை…
அகால மரணம்….
காணாமல் போனவர் பற்றிய குறிப்பு…!

-ரசிகன்

Series Navigation33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33 >>

This entry is part [part not set] of 33 in the series 20110424_Issue

ரசிகன்

ரசிகன்