கிருஸ்துமஸ் வாழ்த்து கடவுளே

லாரி ஃப்ரெஞ்ச் ‘ஏன் அப்படிச் சொல்கிறாய் ? ‘ என்று அவள் கேட்டாள். ‘அவனுக்கு வாழ்த்து தேவைதான் என்று உனக்குத் தோன்றவில்லையா ? நமக்கு அவன் செய்திருக்கிறதெல்லாம் பார்க்கிறாய் தானே ? ‘ என்றான்…

தாச்சண்யம்

கி ராஜநாராயணன் யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும் வந்ஹ்டு அப்பிடி அமைஞ்சி போகுதே. அடையிற நேரத்துக்குத் தான் காட்லெயிருந்து…

துக்க விசாரணை

ஜி. நாகராஜன் துக்க விசாரணைக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். உலகத்தில் அன்றாடம் சிறிது சிறிதாக மானத்தை விற்று எத்தனையோ பேர் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் போலத்தானே ரோகிணியும். அவளுக்கு மட்டும் துக்க…

அறிதலின் மூலம்

காஞ்சனா தாமோதரன் ஆகஸ்ட் 2005. ஹார்வுட் ஸைபர்னட்டிக்ஸ் நிறுவனத்தின் உலகத் தலைமையகம், நியூ யார்க். ———————————————————————– கோடியிலுள்ள அந்த விசாலமான அறையின் கண்ணாடிச் சுவர் வழியே காலை வெயிலில் மினுங்கும் ஹட்ஸன் நதி தொிந்தது.…

ஷெல்லும் ஏழு இஞ்சுச் சன்னங்களும்

செங்கை ஆழியான் கூடிக்குறைந்தால் பன்னிரண்டு வயது இருக்கும். முகத்தில் இனம் தெரியாத சோகம், தேமலாக அப்பிக் கவிந்திருக்க, வயதுக்கு மீறிய பெருந்தன்மையும், பொறுப்பும் விழிகளில் தெறிக்கும். புலரா ஓர் அதிகாலை வேளையில், வீட்டு வாசலில்…

ஜி. நாகராஜனின் நிமிஷக்கதைகள்

1 ‘குத்தத்தை ஒத்துக்கிறயா ? ‘ என்று மாஜிஸ்ட்ரேட் கைதியைக் கேட்டார். ‘ஆமாங்க ‘ என்றான் கைதி. ‘இந்த மாதிரிக் குத்தத்துக்கெல்லாம் ஆறு மாச தண்டனை கொடுக்கணும். ஆனால் நீ குத்தத்தை ஒத்துக்கிறதுனாலே, பொளச்சுபோ,…

அந்த முகம்

சுரேஷ் குமார இந்திரஜித் ‘டா சொன்னியா இல்லியா..இன்னுமா கொண்டாரான் ? ‘ என்று அதட்டலாகக் கரியமால் கேட்டுக் கொண்டிருந்த போது ஒரு பையன் டாயுடன் அறை வாசலில் தோன்றினான். சலாமடித்து அவர் முன் டாயை…

காட்டில் ஒரு மான்

அம்பை   அந்த இரவுகளை மறப்பது கடினம். கதை கேட்ட இரவுகள். தங்கம் அத்தைதான் கதை சொல்வாள். காக்கா-நரி, முயல் ஆமை கதைகள் இல்லை. அவளே இட்டுக் கட்டியவை. கவிதைத்துண்டுகள் போல சில. முடிவில்லா…

அப்பாவிடம் என்ன சொல்வது ?

அசோகமித்திரன் – கனவு – 1993  இரவு எட்டே கால் மணிக்குப் பெங்களூர் கண்டோன்மென்ட் இரயில் நிலையத்தில் வெளிச்சம் அதிகம் இல்லை. கூட்டமும் இல்லை. ஒரு கிழவியும் பன்னிரண்டு பதின்மூன்று வயது இருக்கக்கூடிய பெண்ணும்…

மரியா

காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் மரித்தோர் பணி மையத்தின் ஆள் மிகச் சரியாகக் குறிப்பிட்ட நேரத்துக்கு வந்துவிட்டான்-மரியா இன்னமும் குளியல் உடையிலிருந்து மாறாமல், தலையில் சுருள் முடி ஒப்பனைச் சீப்புகளுடன் நின்றிருந்தாள். ரொம்பவும் கவர்ச்சியற்றுத் தெரியாமல்…

சூறை

பாவண்ணன்     இரண்டு பதவி உயர்வுகளுக்கப்புறம் இந்த ரயில்வே ஸடேஷனைப் பார்க்க வந்திருக்கிறேன். ஸடேஷனா இது ? குட்டிச்சுவர். சொந்த ஊரிலிருந்து நாலுமைல் தூரத்திலிருக்கிற இடத்தைப் பார்க்காமல் திரும்பினால் எப்படி ? பொழுது…

அந்தப் பையனும் ஜோதியும் நானும்

வண்ணதாசன் ராஜாராமுக்கு உலகத்திலேயே நல்ல சங்கீத ரிக்கார்ட்ஸ் எங்கே கிடைக்கும் என்று தெரியும். மேரி தெரஸாவுக்கு எங்கெங்கே அழகான அன்புமய வாழ்த்து அட்டைகள் கிடைக்கும் என்று தெரியும். தெற்கு கடற்கரை ரஸ்தாவில் பெரிய அட்டைப்பெட்டிகளில்…

சுழலும் மின் விசிறி

சுரேஷ்குமார இந்திரஜித் அஞ்சலையின் மனம் நிலைகொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தது. அவள் வேலை செய்யும் வீட்டையடைய நடந்து கொண்டிருந்தாள். வெயில் இன்னும் சரியாக வரவில்லை என்ற போதிலும் அவளுக்கு வியர்த்துக் கொண்டிருந்தது. யாரும் இல்லாத வேளையில்…

அவனுடைய நாட்கள்

வண்ணநிலவன் கம்பெனிக்குப் போகும்போதே எதிரே ஆட்கள் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இன்றைக்கும் வேலை இல்லையென்பது தெரிந்து போயிற்று. வெங்கடேஸ்வரா கபே திருப்பத்திலேயே கம்பெனியிலிருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்ததை அவனும் ஆவுடையும் பார்த்து விட்டார்கள். பேசாமல்…

வேஷம்

பாவண்ணன் வாசலில் நிழலாடியதை கணிப்பொறியின் திரை உணர்த்திவிட்டது. முதலாளி. திரும்பவில்லை நான். வேலையில் மனம் குவித்திருந்தேன். அடிக்கடி வந்து அவருக்குள்ளிருக்கும் பயத்தை எனக்கும் தொற்ற வைத்துப் போய்க்கொண்டிருந்தார். பதட்டங்களாலேயே தவறுகள் கூடின. திருத்தங்களுக்கு மேலும்…

பொன் மொழிகள் 

-ஜி. நாகராஜன்.    சில எழுத்தாளர்கள் தங்கள் ‘பொன்மொழிகளை ‘ தங்கள் கதைகளிலேயே புகுத்திவிடுகின்றனர். என் கதைகளில் ‘பொன் மொழிகளே ‘ இல்லை என்று ஒரு நண்பர் குறைபட்டுக்கொண்டார். எனவே உதிரியாகவாவது சில ‘பொன்…

பல்லி ஜென்மம்

கிரேஸி (மளையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு ஸ்ரீபதிபத்மநாபா) அந்த நகரத்தின் புகழ்பெற்ற ஒரு ஆஸ்பத்திரியில் ஒரண்டு பல்லிகள் வசித்துவந்தன. ஓர் ஆண்பல்லி, ஒரு பெண் பல்லி. கொடுந்துயரமான ஆஸ்பத்திரி வாழ்க்கையை ஒரு தொடர்நாடகம் போல் பார்த்து…

ஒருத்தருக்கு ஒருத்தர்

வண்ணதாசன் குஞ்சம்மா என் கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும்தான் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக…

சிறுமியும் வண்ணத்துப்பூச்சிகளும்

சுரேஷ்குமார இந்திரஜித் நான் சிங்கப்பூரிலிருந்து, தாய்லாந்திற்கு விமானத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதிர்ஷ்டவசமாக எனக்கு அடுத்த இருக்கையில் ஜப்பான் எழுத்தாளர் டோகுடோ ஷோனினைச் சந்தித்தேன். முதலில் அந்தப் பெயரை பார்த்ததும் ‘சிறுமியும் வண்ணத்துப் பூச்சிகளும்,…

உறைந்த கணங்கள்

ராம்ஜி விமானத்தில் நுழைந்த அர்ச்சனாவின் கண்களில் முதலில் பட்டது அங்கு இல்லாதது- பயணிகள். அவளையும் சேர்த்து மொத்தம் நாலு பேர். ஏர்ஹோஸ்டஸின் உறைந்த புன்னகையைப் பெற்றுக்கொண்டு இவ்வளவுதானா மொத்தம் என்று கேட்டாள். ‘ஆமாம். ஆனால்…

முகங்களை விற்றவன்

கோகுலக்கண்ணன் அந்த ஊாில் முச்சந்தி மத்தியிலுள்ள வளாகத்து தரையில் அவன் கடை விாித்த போது முதலில் யாரும் கண்டு கொள்ளவில்லை. அக்கடையை எல்லோரும் கடக்கும்பொழுது அவன் தரையில் விாித்து வைத்திருந்த முகங்களை அருகில் பார்க்கும்…

மண் பிள்ளையார்

மனுபாரதி இன்று விநாயகச் சதுர்த்தி நாள். என் கூடத்தங்கியிருந்தவர்கள் அனைவரும் நேற்றே அவரவர்களின் கூட்டைத் தேடிப் பறந்துவிட்டார்கள். தனிமையில் ஆகாயத்தை வெறித்தபடி இங்கே நான். எனக்குப் போக இஷ்டமில்லை. ‘பரவாயில்ல, கிளம்பி வாயேன்டா. ‘…

நடுக்கம்

கோகுலக்கண்ணன் நீல நிறத்தில் தங்க கீற்றுகளுடன் சற்று பொிதான எழுத்துக்களை கொண்ட அந்த அழைப்பிதழ் அட்டையின் மத்தியில் ‘கண்டேனடி ஆசைமுகம் ‘ என்ற தலைப்பும், அதன் கீழ், ஜீவா-மேகலா என்றிருந்தது. அதனடியில் சாய்ந்திருந்த எழுத்துகளில்…

படம்

எஸ். அர்ஷியா கேமராவைக் கையாள்வது எப்படி என்று ஜஹிர்தான் எனக்குச் சொல்லித் தந்தான். அவன் தொழில்முறை போட்டோகிராபர் அல்லன். பம்ப்செட் மோட்டார், கம்ப்ரஷர் மெஷின், ஹோஸ் பைப், கப்ளிங் என்று கனரக இரும்புப் பொருட்களை…

st1

st1 எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:3) சீஸர் பட்டாபிசேகத்தின் முந்தைய நாள் சி. ஜெயபாரதன், கனடா நேற்றைய தினம் பட்டப் பகலிலே அங்காடிச் சந்தையில் குந்தி அலறிக் கொண்டு ஊளை…

முள்பாதை (முதல் அத்யாயம் தொடர்ச்சி)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் அம்மா ரொம்ப திறமைசாலி. அதை நான் மறுக்கவில்லை. என்மீது அவளுக்கு அன்பு இல்லை என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் அம்மா காட்டும் அன்பு வெறும் கடமையைச்…

ஏமாத்து.

தேனம்மை லெக்ஷ்மணன் மாநகரப் பேருந்து விரைந்து கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு பெண் .. மல்லிகைப் பூ வாசனையோடு.. மாலை நேரக் காற்றில் கிறக்கமாகத் தலை சுற்றுவது போல் இருந்தது.. கொஞ்சம் பருமன்தான்.. ஆனால் அதுதான்…

ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) (1809-1865) காட்சி -4 பாகம் -4

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Civil War Soldiers -1 “நான் ஓர் ஏகாந்த மனிதன் ! உள்நாட்டுப் போர் விளைவுகளால் மனம் நொந்து போயிருக்கும் தனி நோயாளி நான் !…