வெங்கட் சாமிநாதன் வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, “மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன் வாசிதான்.” என்றார். அது சும்மா தமாஷாகப் பேசுவதாகவும் இருக்கும். கொஞ்சம் கிண்டலும் கலந்திருக்கலாம். நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அது சந்தோஷமான சமாச்சாரம் தான். நான் மதுரைக்குப் போய் படிக்கப் போகிறேன் என்பது எல்லோரும் பேசும்Continue Reading

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும் வேறுபட்ட பொருள் நிலைகளைக் கொண்டிருந்தாலும் பெண்ணைப் பற்றியவை என்பதால் ஒன்றுக் கொன்று தொடர்புடையனவாக, பிரித்தரிய முடியாதனவாக விளங்குகின்றன. பெண்ணடிமை என்பது சமூகத்தில் பெண்களின் இருப்பைக் குறிக்கும். பெண் விடுதலை என்பது வாழ்வின் நோக்கம். பெண்Continue Reading

அ.லெட்சுமணன் சென்னை போன்ற பெரு நகரங்களில் சைக்கிள் ஓட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதை காண முடிகிறது. கடைநிலை ஊழியர்களுக்கான வாகனம் சைக்கிள் என்றாகிவிட்டது. தபால்காரர், கொத்து வேலை செய்பவர், பிளம்பர் போன்றோர்கள் தான் சைக்கிள் உபயோகிக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தினர் சைக்கிள் உபயோகிப்பதை நிறுத்தி நீண்ட நாட்களாகிவிட்டது. என் நண்பன் ஒருவன் பள்ளிக்கூடம் போகும் போது வாங்கிய சைக்கிளை இன்றும் சென்னையில் வைத்திருக்கிறான். சரஸ்வதி பூஜை அன்றைக்கு மட்டும் துடைத்துContinue Reading

உதுல் ப்ரேமரத்ன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான யுத்தம் முடிவுற்று இன்றோடு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமானது, கடந்த இரண்டு வருடங்கள் பூராகவும் இடைக்கிடையே அந்த யுத்த வெற்றி மனப்பான்மையை மக்கள் மத்தியிலும் இராணுவத்தினர் மத்தியிலும் நிலை நிறுத்துவதற்காக பல விதமான விழாக்களை ஏற்பாடு செய்திருக்கிறது. அதனடிப்படையில் இன்றும் கூட அது போன்ற விழாக்கள் அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மஹிந்த ராஜபக்ஷContinue Reading

லதா ராமகிருஷ்ணன் ’எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே. அது நல்லவனாவதும், தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’ என்று எடுத்துச்சொல்லும் ஒரு திரைப்படப்பாடல். எனில், தாய் என்பவளே அவள் சார்ந்த சமூகத்தால் உருவாக்கப்படுபவள் என்பதே உண்மை. இந்த உண்மையின் பின்புலத்தில் பார்க்கும்போது குழந்தை வளர்ப்பில் சமுதாயத்திற்கு உள்ள பெரும்பங்கு புலனாகும். சமுதாயமாகிய நாம் குழந்தைகளின் நலவாழ்வில் எத்தகைய பங்காற்றி வருகிறோம்? குழந்தைகளின் சீரிய வளர்ப்பிற்கு உகந்த சூழல்,Continue Reading

பி.கே. சிவகுமார் [எச்சரிக்கை: குடும்பம், வேலை சார்ந்த மும்முரங்களில் நான் ஓடிக்கொண்டிருந்தாலும், என் மீதுள்ள அன்பினால் திண்ணையில் வாராவாரம் எழுதுங்களேன் என்று தொடர்ந்து சொல்லிவந்த திண்ணை ஆசிரியர் குழுவுக்கும், அதன் பலனை அனுபவிக்கப்போகும் வாசகர்களுக்கும் என் அனுதாபங்கள்.!] அமெரிக்கக் குடியரசு கட்சியின் தீவிர பழமைவாதக் கருத்துகளின் பெண் முகம் சாரா பாலின். நம்மூர் பதின்ம வயது இளைஞர்களின் பேச்சுவழக்கில் சொல்வதென்றால், நாற்பதுகளிலும் ஹாட்டாக தோற்றமளிக்கும் இருக்கும் மாமி. இப்படிப்பட்டகருத்துகளைச் சொல்பவர்களையும்,Continue Reading

பாவண்ணன் எண்பதுகளின் இறுதியில் அலுவலக வேலையாக மாதத்துக்கு ஒருமுறையாவது அல்லது இரண்டுமுறையாவது கர்நாடகத்திலிருந்து சென்னைக்கு வந்துவிடுவேன். சென்னையில் எங்கள் தலைமை அலுவலகம் இருந்தது. பெரிய அளவில் கேபிள் சேமிப்புக்கிடங்கும் சென்னையில்தான் இருந்தது. நாங்கள் வேலை செய்யும் இடத்துக்கு கேபிள் உருளைகளை சென்னையிலிருந்துதான் சரக்குந்துகளில் ஏற்றி அனுப்புவார்கள். தமிழ் தெரிந்தவன் என்கிற காரணத்தை முன்னிட்டு இந்தப் பயணவாய்ப்பு எனக்குத் தரப்படும். அலுவலக வேலையை முடித்தபிறகு கிடைக்கிற குறைந்தபட்ச கால அவாகாசத்தை நண்பர்களைப்Continue Reading

ப்ரியந்த லியனகே தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை இன்று மே மாதம் 16ம் திகதி. நான் கொழும்பில் இருக்கிறேன். வீதி முழுதும் புத்தரின் பிறந்த நாளைக் கொண்டாடும் மகிழ்ச்சி எதிரொலிக்கிறது. எனது கைத்தொலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. எனக்கு மட்டுமல்ல. அது நாட்டிலிருக்கும் எல்லோருக்கும் அனுப்பப்பட்டவோர் தகவல். ‘நோயற்ற சுக வாழ்வோடு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்’ எனும் வாழ்த்துச் செய்தி அது. அவ் வாழ்த்தினை நினைவிலிருத்திக் கொண்டு நான்Continue Reading

திரு அருண் ஜெயிட்லி, எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை திரு அருண் ஜெயிட்லி எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை “மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா 2011” பொதுத் தளத்தில் இடப்பட்டுள்ளது. இந்த மசோதா மத சம்பந்தமான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும், அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனை அளிப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டமாக்கப்படவுள்ள மசோதாவின் நோக்கம் அவ்வாறு சொல்லப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம்Continue Reading

ரவி நடராஜன் பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல் காலப் பிரச்னைகள் ஏனோ நல்முகம் மற்றும் இப்பண்டிதர்கள் சொல்லும் கட்டமைப்பு வளர்ச்சி முட்டுக்கட்டைகள் பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை. எப்படி தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை, மற்ற சமயங்களில் இன்னொரு அணுகுமுறை சாத்தியம்? அலசப்படுவதோContinue Reading

மஞ்சுளா நவநீதன் தேர்தலுக்கு முன்னால் ராஜா கைது தேர்தல் முடிந்ததும் கனிமொழி கைது, இருவர் தவிர சரத்குமார் கைது – தேர்தல் முடிவுகள் வேறு மாதிரி இருந்திருக்குமானால், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று வீரவுரை பேசி மக்கள் மன்றத்திற்கு முன்னால் நீதி மன்றங்கள் தலை பணிய வேண்டும் என்றெல்லாம் வசனங்கள் எழுதப் பட்டிருக்கும். அதற்கு வழியில்லாத படிக்கு மக்கள் பெருவாரியான வாக்குகளை அளித்து தீர்ப்பும் வழங்கி விட்டார்கள். ஆனால்Continue Reading

சின்னக்கருப்பன் நேற்றைக்கு ராஜீவ் கொலையுண்ட நாளை நினைவு படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசின் அனைத்து துறைகளும் விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. சுற்றுலாத்துறையிலிருந்து மாசு கட்டுப்பாடு துறை வரைக்கும். அது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் இதே போல அனைத்து துறைகளும் ராஜீவ் காந்தி நினைவு நாளை நினைவு படுத்தி விளம்பரங்கள் வெளியிட்டிருக்கின்றன. இது இந்தியாவின் அனைத்து பத்திரிக்கை, தொலைக்காட்சிகளிலும் செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு இதற்காக செலவழித்த தொகை மட்டுமே சுமார்Continue Reading

செந்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவும் அதன் தோழமை கட்சிகளான தேமுதிக, இடதுசாரி கட்சிகள், மற்றும் சமத்துவ மக்கள் கட்சியும் எதிர்பார்த்த படியே மகத்தான வெற்றி பெற்றுள்ளன. அவர்களுக்கு வாழ்த்துகளுடன், சில வார்த்தைகள். இந்த வெற்றி ஊழலுக்கு எதிரான, ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எதிரான வாக்கு மட்டுமல்லாமல், இந்திய அரசியலில் நிலவும் பொருளாதாரக் கொள்கைகளுக்கான எதிரான, இலங்கை போன்ற நாடுகளுடனான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின்Continue Reading

மரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில்Continue Reading

சின்னக்கருப்பன் ஒசாமா கொலை. காஷ்மீரில் நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் இந்தியாவின் இதர பகுதிகளில் நடந்த/ நடக்கும் பயங்கரவாத செயல்களுக்கும் ஒசாமாவுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் ஒசாமாவின் அல்குவேதாவுக்கு இந்தியா ஒரு பொருட்டே இல்லை. அவரது குறியெல்லாம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்தான். அமெரிக்கா அரேபிய புனித பூமியில் கால் வைத்தததால் கோபம் கொண்டு அழிக்க கிளம்பியவர் அவர். ஒசாமா இரட்டை கோபுரங்களை தாக்கி அழித்தது வரை இந்தியாவில் நடந்துகொண்டிருந்த பயங்கரவாதContinue Reading

கோபால் ராஜாராம் கோல்கொடாவின் மையப் பகுதியில் ஒரு மாடியறை. சற்று விசாலமான அறையில் 20 லிருந்து நாற்பது பேர் உட்காரலாம். நாற்காலிகள் சுற்றி போடப்பட்டிருக்கின்றன. நாடக அரங்கின் உள்ளேயே பார்வையாளர்கள் அமர்ந்திருக்கிற முறையில் நிகழ்த்துனர்கள் சுற்றிவர நிகழ்த்துநர்கள் செல்ல வழி விட்டு நாற்காலிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. நாடகம் பார்வையாளர்கள் நடுவிலும் சுற்றிலும் நிகழ்கிறது. இது இந்த திருப்பம், இது இந்தத் திருப்பம் என்று நாடக நடிகர் ஒவ்வொரு திருப்பமாக அந்தContinue Reading

எம்.ரிஷான் ஷெரீப், எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு பல் முளைத்தது. ஒரு வயதில் முளைக்கும் பாற்பல்லல்ல. பதின்ம வயதில் முளைக்கும் ஞானப்பல். தாமதமாக முளைக்க நேர்ந்த கோபத்திலோ என்னவோ அந்தப் பல் நேராக முளைக்காமல், வாயின் கீழ்த் தாடை எலும்புக்குள் முளைத்து, வெளியே வராமல் மறைந்து கொண்டது. அதற்குள்ளும் சும்மா இருக்காமல், எலும்பை அரித்து அரித்து, முட்டைக் கோது போல ஆகும் வரை எந்தவித வலியையும் கூடக் காட்டவில்லை. பிறகு,Continue Reading

சுனந்த தேஸப்ரிய தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவரது கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர்கள் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடுContinue Reading

கோச்சா ::: ::: தமிழக காங்கிரஸின் தற்போதைய நிலைக்கு ஒரே ஒரு காரணம் தான், ஜி.கே.மூப்பனார் இல்லாதது. ஏன்…? காமராஜார் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில் கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன், சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக் கேட்டறிந்தனர். பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா காங்கிரஸில் இணைவதையே விரும்பினர். மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே முடிவெடுத்தார். சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ் இணைப்புContinue Reading

K.W. ஜனரஞ்சன தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை ‘முதன்மையானது என்றால் என்ன?’ என புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் ‘எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்’ என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன்மையானதாக இருந்தது இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவதுதான். விடுதலைப் புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்துகொள்ளாதோர் இருந்தனரெனின், அவர்கள் தீவிரContinue Reading

ஸிந்துஜா கஸ்தூரிரங்கனை நான் 1974ம் வருஷம் ஒரு மார்ச் மாத மத்தியான நேரத்தில் சந்தித்தேன். என்னை அவரிடம் இந்திரா பார்த்தசாரதி அழைத்துச் சென்றிருந்தார். மதுரையிலிருந்து, வேலை கிடைத்ததால் புது தில்லிக்குச் சென்று சில நாட்களே ஆகியிருந்தன. எனக்கு அப்போது பழக்கமாகியிருந்த இரண்டே நபர்கள் இ.பா.வும், வெங்கட் சாமினாதனும்தான். ஜன்பத்தில் இருந்த நியு யார்க் டைம்ஸ் அலுவலகத்தில், அரைக் கைச் சட்டையும், கண்களில் கண்ணாடியும், முகத்தில் புன்னகையும் அணிந்திருந்த நாற்பது வயதுContinue Reading

நல்லான் முதலாவதாக ஒரு முக்கிய செய்தி: இஸ்லாமாபாதிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், மிகப் பாதுகாப்புகள் நிறைந்த அபெட்டாபாத் (Abbottabad) பாகிஸ்தான் மிலிட்டரி அகாடமியின் அருகாமையில் இருக்கும் கட்டடத்தில், பிரத்யேக அமெரிக்கப் படையின் நேரடி நடவடிக்கையில், பாகிஸ்தானின் ஆதரவில், இதுவரை, ஒளிந்து வாழ்ந்த இஸ்லாமிய பயங்கர தீவிரவாதி ஒசாமா பின் லேடனும், இவன் மகன்கள் இருவருமாக, ஆக மூவருமே, கொல்லப்பட்டார்கள். நடுக்கடலில் இவன் உடலை அடக்கம் செய்ய எடுத்துச்Continue Reading

பாவண்ணன் எண்பதுகளில் இலக்கிய உலகில் அடியெடுத்து வைப்பதற்கு ஒரு வாசலாக இருந்த முக்கியமான இதழ் கணையாழி. அதன் நிர்வாக ஆசிரியராக இருந்து நடத்தியவர் கி.கஸ்தூரிரங்கன். தொடக்கத்தில் சிறிது காலம் தி.ஜானகிராமன் இதன் ஆசிரியராக இருந்து நடத்தினார். பிறகு, நீண்ட காலத்துக்கு அசோகமித்திரன் ஆசிரியராக இருந்தார். அப்போதுதான் இரா.முருகன், கோணங்கி, சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், நான் என பலரும் அந்த இதழில் தொடர்ந்து எழுதினோம். எங்களுக்கு முன்னால் சா.கந்தசாமி, ஆதவன்,Continue Reading

வெங்கட் சாமிநாதன் மலர் மன்னனின் புத்தகம் வந்தேமாதரம் நமக்கு சற்று முன் இஸ்லாமியர்கள் எழுப்பிய பிரசினை யின் சரித்திரம் முழுதையும் ஆதியோடந்தமாக எடுத்துச் சொல்கிறது. இது போல அவ்வப்போது எழும் பிரசினைகளின் முழு வரலாறும் சொல்லப் படாவிட்டால் இவற்றின் பின்னிருந்து செயல்பட்ட சக்திகள் என்னவாக இருந்தன என்பது தெரியாமலே போயிருக்கும். இது மலர்மன்னனிடமிருந்து இந்த வகையில் வரும் மூன்றாவது புத்தகம். முதலில் தயானந்த சரஸ்வதி பற்றியது. பின்னர் தொடர்ந்தது திமுகContinue Reading

நிஸார் அகமது கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது பத்மநாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பு – கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் வசிக்கும் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மற்றும் அவர்தம் குடும்பத்தின் மீது தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா அசோசியேசன் (அபீமுஅ)ஜமாத் கடந்த 12-07- 2007 ம் தேதி முதல் ஊர்விலக்கம் சமூக புறக்கணிப்பை நடத்தி வருகிறது.இதற்கு காரணமாக மே 2007 உயிர்மை மாத இதழில்Continue Reading

நல்லான் இஸ்லாமிய இயக்க ‘ஷரியா’ சட்டங்களில் உள்ள ஒவ்வொரு சொல்லின் முக்கியத் துவத்தை, இஸ்லாம் முஸ்லிம்களுக்கு எப்படி-எந்தெந்த விதங்களில் போதிக்கிறது, இதுவரை இஸ்லாமால் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படப் போவது யார், யார்?, இஸ்லாமை ஏன் பலர் கட்டுரைகளாளும், நையாண்டி, கேலி சித்திரங்களாலும், விமர்சிக்கிறார்கள், எனும் கேள்விகளுக் கெல்லாம் சேர்ந்து ஒரே பதில்: — உலகில் எல்லோராலும் ஒரே மனதாக, எளிதில் எதிர்பார்க்கப்படும் ஒழுங்குமுறை திட்டங்களுக்கும், செயல்பாடுகளுக்கும், இஸ்லாமிய ஒழுங்குமுறை திட்டங்களில், செயல்பாடுContinue Reading

சானக ரூபசிங்க தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமாக சர்வதேச தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களின் நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கடந்தமாதம் எனக்குக் கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்காக இலங்கையர்களோடு பிரான்ஸ், பிலிப்பைன்ஸ், மியன்மார், நேபாளம், இந்தியா மற்றும் மொங்கோலியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும் இளைஞர்கள் வந்து கலந்துகொண்டிருந்தார்கள். நாங்கள் குழுக்களாகவும் தனித்தனியாகவும் பிரிந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் கணக்கெடுப்புக்களில் ஈடுபட்டோம். எனது வாழ்நாளில் ஒருபோதும் பாதம்Continue Reading

ப. இரமேஷ், பெண் விடுதலை, பெண்ணுரிமை, ஆணுக்குப் பெண் சமம் என்ற கருத்துக்கள் மேலோங்கி நிற்கின்ற இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் கொடுமைகளும் அரங்கேறிக் கொண்டுத்தான் இருக்கின்றன. மானுடத்தின் உயர்ந்த பண்பு மனிதனை மனிதனாக மதிக்கும் பண்பாகும். இந்தப் பண்புகள் மனிதமனங்களில் கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டு வெறுமையாய் காட்சியளிக்கின்றன. “பொதுவாகச் சமூகவியல் கோட்பாட்டின்படி ஒத்த தகுதியுடைய இரு கூறுகளிடையே எப்பொழுதும் முரண்பாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் இதனால்தான் ஆண்,Continue Reading

வெங்கட் சாமிநாதன் ஒரு நாள் ராஜா வந்திருந்தார் ஹிராகுட்டிலிருந்து. எப்போதாவது வந்து என்னைப் பார்த்து, எப்படி இருக்கிறேன் என்று விசாரித்துவிட்டுப் போவார். இப்படி அவ்வப்போது வரும்போது ஒரு நாள் சொன்னார், நான் ஒருத்தரை அனுப்பரேன். இங்கே ஹிராகுட்டில் வேலை கிடைச்சிருக்கு. அவரோட அவர் மனைவியும் இரண்டு சின்ன குழந்தைகளும். அவருக்கு இப்போதைக்கு வீடு கிடைக்காது போல இருக்கு. கொஞ்ச நாள் ஆகும். நீ இங்கே அவங்களை வச்சுக்கோயேன். வீடு கிடைக்கறContinue Reading

கோச்சா சந்தோஷம் சில சமயம் அள்விடமுடியாதபடி பெருகும். கே.பாலசந்தருக்கு , தாதா சாகிப் பால்கே விருது என்று தொலைக்காட்சியில் செய்தி வந்த போது அதேவிதமான சந்தோஷம்…. மனதுக்குள் பகலவனாய் ஒளிவட்டமிட்டது, “அபூர்வராகங்கள்”, அவள் ஒரு தொடர்கதை… மன்மதலீலை… டீக் ஹை… காட்சிகள். டைட்டில்கள் இசையுடன் ஓடி, பின் திரை கருமையாக, இசை வெறுமையாக, மெதுவாய் வரும்… இயக்கம்: கே.பாலசந்தர் என்று…. அது வந்து போகிறது…. வெறுமையான இசை பின் பிரவாகமெடுத்துContinue Reading

செந்தில் — அமெரிக்க இந்திய உறவுகள் பல தளங்களில்-பொருளாதார, வணிக, கல்வி போன்ற தளங்களில்- தொடரும் நிலையில், ஆசிய, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளான குறிப்பாக இலங்கை, ஈரான், பாகிஸ்தான், இஸ்ரேல், சீனா மற்றும் அரபு நாடுகளுடனான உறவு குறித்து, இந்த இரு இரு நாடுகளின் வெளியுறவு கொள்கைகள், சிலவற்றில் வேறுபடவும், மற்ற சிலவற்றில் ஒன்றுபடவும் நேரிடலாம். இந்தியாவும், அமெரிக்காவும் இந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் குறித்த கொள்கைகளைContinue Reading

நட.சிவகுமார் அண்மையில் வெளிவந்துள்ள ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல் நூலை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.வெளியீட்டகத்தின் பதிப்புரையில்… உலகில் தொன்றிய மதநிறுவனங்கள் எதுவும் சாதியக் கூறுகளுக்கு பலியாகாமல் தப்பியதில்லை. அதற்கு இஸ்லாமும் விதிவிலக்கில்லை.இதைத்தான் கவிஞர் ஹெச்.ஜி.ரசூலின் தலித் முஸ்லிம் என்னும் இந் நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்கின்றன. சமத்துவத்தை வலியுறுத்தியதில் உலகின் எந்த மதத்திற்கும் இணை சூற முடியாத இடத்தை இஸ்லாம் பெற்றது உண்மையே.Continue Reading

நல்லான் முதற் பகுதியைத் தொடர்ந்து இப்பகுதியில் எழுதுவதற்கு முன், இஸ்லாமியத்தில் எனக்கு அறிமுக அறிவு எப்படிக் கிடைத்தது என்பது பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏற்றுக்கொண்ட வேலைகளுக்கிடையே, ஓய்வு நேரங்களில் இஸ்லாமைப்பற்றி படிப்பது எனும் ஆரம்ப வழக்கத்திற்கு பதிலாக, போகப் போக மிக கவனத்துடன் ஆழ்ந்து படிக்கவும் தொடங்கினேன். ஆரம்பத்தில், முகம்மது சொன்னது செய்தது ஆகியவைகளை பாரபட்ச மின்றி படித்தபின், இவைகளில் உள்ளவைகளை, அப்படியே முழுதுமாக பயனற்றது எனContinue Reading

ப. இரமேஷ் இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களில் ஈடு இணையில்லாதக் கவிஞர் பாரதியே. வசன கவிதை என்ற ஒன்றை உலகுக்கு அளித்து, மரபை உடைத்தெறிந்த உன்னத கவிஞர் மகாகவி பாரதியார். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாட்டு விடுதலைக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் பாடிய ஒரு பெரும் புலவர். பாரதியின் பார்வை விசாலமானது. நாடு விடுதலை பெறுவது மட்டும் அவரது நோக்கமல்ல இந்தியநாடு ஒரு வல்லரசாக பரிணமிக்க வேண்டும் என்று கனவு கண்டார். பிற்காலச்Continue Reading

நல்லான் ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம். உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது இருந்தது. ஏனெனில், எதிலும், எங்கும் குற்றமில்லை. ஆதலால், சட்டம், ஓழுங்கை சீரமைக்க, சமாளிக்க, தீர்ப்பு கூறி, தண்டனை அளிக்கும் ஒரு தலைவனோ, அல்லது அரசாங்கக் குழுக்களோ தேவைப்பட்டதில்லை. ஏனெனில், மக்கள் யாவருக்கும் அவரவர் கடமையில்Continue Reading

வெங்கட் சாமிநாதன் ரொம்ப நாட்களாக அவ்வப்போது சில நாட்களாவது எங்களுடன் தங்கி சின்னப் பையன்களோடு தானும் ஒரு சின்னப் பையனாக ஊர் சுற்றுவதும் சினிமா பார்ப்பதுமாகக் கழித்த அந்த பெரியவர், வயதில் எங்களுக்கெல்லாம் தந்தை வயதுள்ளவர், கொஞ்ச நாட்களாகக் காணவில்லை. அவர் என்னிடமிருந்து வாங்கிச் செல்லும் ஃபில்ம் இண்டியா பத்திரிகையும் சேர ஆரம்பித்து விட்டது. மாதங்கள் கடந்தன. பின்னர் தான் யாரோ அவர் டிவிஷனல் அலுவலகம் இருந்த சிப்ளிமாவிலிருந்தோ பர்கரிலிருந்தோContinue Reading

முனைவர்அ.குணசேகரன், முனைவர்அ.குணசேகரன், தமிழ்இணைப்பேராசிரியர், அண்மைக் காலமாகச் சமூகத்திலும் தமிழிலக்கியச் சூழலிலும் பெண் பற்றிய முழக்கங்கள், விவாதங்கள், ஆய்வுகள் மிகுதியும் கூர்மைப்பட்டுள்ளன. அதனடிப்படையில் பெண்ணடிமை, பெண்விடுதலை, பெண்ணுரிமை, பெண்ணியம் போன்ற சொல்லாடல்கள் தீவிரமாக ஒலிக்கின்றன. இவையனைத்தும் வேறுபட்ட பொருள் நிலைகளைக் கொண்டிருந்தாலும் பெண்ணைப் பற்றியவை என்பதால் ஒன்றுக் கொன்று தொடர்புடையனவாக, பிரித்தரிய முடியாதனவாக விளங்குகின்றன. பெண்ணடிமை என்பது சமூகத்தில் பெண்களின் இருப்பைக் குறிக்கும். பெண் விடுதலை என்பது வாழ்வின் நோக்கம். பெண்Continue Reading

வெங்கட் சாமிநாதன் இமையம் முற்றிலும் வேறான மனிதர், எழுத்தாளர். தலித் சித்தாந்தத்தை, தனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பது போல அதை முற்றிலும் மறுப்பவர். அவர் ஒரு சாதாரண ஏழை பள்ளி வாத்தியாராக இருந்தது, சித்தாந்திகளுக்கு மிகவும் சௌகரியமாகப் போயிற்று. தம் சித்தாந்தத் துப்பாக்கி சுடும் பயிற்சியாளர்களுக்கு சரியான குறியாக இமையம் வாய்த் தார் என்று தான் சொல்லவேண்டும். இமையத்தை தம் சித்தாந்தத் தாக்குதல்களுக்கு இரையாக்கினால் அது ஒருContinue Reading

செந்தில் இந்தியா உலகின் மிகபெரிய ஜனனாயகம் மட்டுமன்றி பல தேசிய மொழி இனங்களின் கூட்டமைப்பும், சமத்துவ குடியரசாகும். அமெரிக்கா உலகின் முதல் ஜனனாயகம் மட்டுமன்றி, உலகின் பல்வேறு இன மக்களும் குடியேறும் ஒரு மாற்றத்தையே மூலதனமாகக் கொண்ட, வளம் மிக்க ஒரு நாடு ஆகும். இந்த இரு ஜனனாயக நாடுகளும் உலகிற்கு வழிகாட்டிகளாக அமைவதோடு, போரற்ற, வறுமை ஒழிக்கபட்ட, இயற்கை நலம் காக்கும் ஒரு புதிய மனித சமுதாயத்தை படைக்கவும்Continue Reading

வெங்கட் சாமிநாதன் அனேகமாக பஞ்சும் பசியும் என்னும் சிதம்பர ரகுநாதனின் நாவலிலிருந்து தொடங்கும் இடது சாரி சோஷலிஸ யதார்த்த வகை தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் ஏதோ தொழிற்சாலையில் முன் தீர்மானிக்கப்பட்ட ஸ்பெஸிஃக்பிகேஷனுக்கேற்ப உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகள் போல, மார்க்சிஸ விமர்சகர்கள் கட்சியின் கொள்கைகளுக்கேற்ப தரும் சட்ட திட்டங்களை சரி வர அனுசரித்து படைக்கப்பட்டவை. அதற்கு கட்சி சார்ந்த விமர்சகர்களே பொறுப்பேற்க வேண்டும். கடைசியில் இந்த உற்பத்திப் பெருக்கத்தில், அதன் ஐம்பதுContinue Reading

வெங்கட் சாமிநாதன் சைனா நமக்கு ஒரு வேண்டாத ஆனால் விலக்க முடியாத அண்டை ராக்ஷஸன். அசோகன் காலத்திலிருந்து தொடங்கலாம் அத்துடனான நம் நட்புறவை என்று ஒரு ரொமாண்டிக் கனவு கொண்டவர்கள் சொல்லலாம். நேரு போல. ஆனால் அது எப்போதுமே ஏகாதிபத்ய கனவுகளையே தன் பாரம்பரியமாக தன் தேசீய உணர்வாகக் கொண்ட நாடு என்பதையும் வரலாற்றுப் பிரக்ஞை கொண்டவர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். 1962-ல் சைனா எல்லை தாண்டி வந்து ஆக்கிரமித்தContinue Reading

வெங்கட் சாமிநாதன் புர்லா வந்த பிறகு ஏற்பட்ட புதிய ஈடுபாடுகளில் ஒன்று, ஆங்கில தினசரி பத்திரிகை படிப்பதும், பத்திரிகைகள் வாங்குவதும். ஆங்கில தினசரி பத்திரிகை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். புர்லாவுக்கு வந்த ஆங்கில தினசரி பத்திரிகைகள் கல்கத்தாவிலிருந்து வரும். புர்லாவுக்கு வந்தவை அம்ரித் பஜார் பத்திரிகாவும், ஸ்டேட்ஸ்மன் –னும் ஸ்டேட்ஸ்மன் ஆங்கிலேயர் நடத்தும் பத்திரிகையாச்சே என்று அம்ரித் பஜார் பத்திரிகை பக்கம் மனம் சென்றது. அது ஒரு பெரிய ஸ்தாபனம்.Continue Reading

மலர்மன்னன் 1943 ஆம் ஆண்டு ஈ.வே.ரா. அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து விரோதியான ஈ.வே.ரா. வுடன் அண்ணா இணைந்து தொண்டாற்றி வந்த நேரம் மட்டுமல்ல, ஈரோட்டில் ஈ.வே.ரா.விடம் அவர் பணியும் புரிந்துவந்த காலகட்டம். ஈ.வே.ரா. தம்மை நாத்திகர் என அறிவித்டுக்கொள்வாரேயன்றி பொதுவாகக் கடவுள் மறுப்பைக் காரண காரியங்களுடன் விளக்குவதைவிடக் குறிப்பாக ஹிந்துக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வங்களை மிகவும் இழிவாகவும் தரக் குறைவாகவும் பேசுவதிலேயே பொழுதைச்Continue Reading

மலர்மன்னன் நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் பல்வேறு தத்துவ சாரங்களையும் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறான். இவையே நமது ஹிந்து சமயத்தின் ஆதார சுருதிகளாக இருப்பதால்தான் பகவத் கீதையை ஹிந்து சமயத்தினர் அனைவருக்கும் ஏற்ற பொது நூலாகக் கொள்கிறோம். ஹிந்து சமயக் கோட்பாட்டிற்கே ஆணி வேராக அமைந்துள்ள தருமம், கருமம் என்ற, ஒன்றோடு ஒன்று தொடர்புள்ள, ஏன் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த இரட்டைக் கோட்பாட்டை கீதையில் மிகத் தெளிவாகப்Continue Reading