ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு – பகுதி ஒன்று (1)

நல்லான்



ஜன நாயகம், அதன் தொடக்கம், வளர்ச்சி என்ன என்பது பற்றி ஆராய்வோம்.

உலக ஆரம்ப காலம் தான் பொற்காலமாக இருந்தது. அரசர்கள், அரசாங்கம் என ஒன்றும் இருந்ததில்லை. மேலும் அதற்கான தேவையும் இல்லாது இருந்தது. ஏனெனில், எதிலும், எங்கும் குற்றமில்லை. ஆதலால், சட்டம், ஓழுங்கை சீரமைக்க, சமாளிக்க, தீர்ப்பு கூறி, தண்டனை அளிக்கும் ஒரு தலைவனோ, அல்லது அரசாங்கக் குழுக்களோ தேவைப்பட்டதில்லை. ஏனெனில், மக்கள் யாவருக்கும் அவரவர் கடமையில் தீவிர உணர்வு நிறைந்து, நல்லொழுக்கத்தை எக்கணமும் கடைபிடித்து மாசற்று, மற்றவர்களுடன் பரஸ்பர நட்புடன், கற்புள்ள நங்கைகளுடன் கூடி வாழ்ந்து, மிகக் களிப்புடன் இருந்தனர். பொது நலனில் தான் தன் நலமும் சேர்ந்துள்ளது என உணர்ந்து ஒருவருக் கொருவரைச் சார்ந்து காலங்கழித்தனர். சுய நலம் என்றால் என்னவென்று கூடத் தெரியாமல், எந்நிலையிலும் கடவுள் பற்று மாறாது வாழ்ந்தனர். ஏனெனில், நம்மை செயலாற்றத் துண்டும் உயிராகக் கூடவே நம்முள் கடவுள் தான், உறைந்துள்ளார் என நன்கு உணர்ந்ததால், அவரவர் தங்கள் மனசாட்சியையே கடவுள் என மதித்து, அதற்குத் தக்கவாறு. தன்னடக்கத்துடன் ஒழுங்கு முறையில் நிம்மதியாக இருந்தனர்.
போகப் போக ஒழுக்கப் பற்று, குறைந்து கொண்டிருந்தது. ஆகையால், அரசன் என்ற பெயரில் ஒரு தலைவன் தேவைப்பட்டதால், உருவாக்கப் பட்டான். இவனே ஒரு ஒழுங்கு முறை சட்டத் தொகுப்பை உண்டாக்கி, அதை மீறுபவர்களுக்கு, தண்டனை அளிக்கும் அதிகாரத்தையும் மேற்கொண்டான். ஆரம்பகாலங்களில், அவனும் மிக்க தன்னொழுக்கம் நிறைந்தவனாக இருந்ததால், அரசும் எந்த இன்னலும் இன்றி நடந்தது. நாடும் மிக சுபிட்சமுடன் இருந்தது. அரசனும் அரசை நிர்வாகம் செய்ய வரியையும் வசூலித்தான். ஆனால், அவ்வசூலிப்பு, ஒரு வண்டு, பூவின் மீது தன் பளுவை சுமத்தாமல், அதேசமயம் பூவையும் சிதைக்காமல், மேலே பறந்து கொண்டே, பூவிடமிருந்து தேன் உறிஞ்சித் திரட்டுவது போல, மக்களிடம் நியாயமான வரியை, விடாமல் வசூல் செய்தான். மக்களும் வரி செலுத்துவதை தங்கள் கடமையை உணர்ந்து விருப்பத்துடன் வரி கொடுக்கத் தயாராகக் காத்திருந்தனர். இதற்கெல்லாம் காரணம் சமூகமே ஒரு ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்தது” என அறிஞர் பீஷ்மர், சொன்னார்.
ஆகவே, உலகிலுள்ள மக்கள் யாவரும், அடிப்படை ஒழுங்கு முறைகளில் சிறந்து விளங்கினால், உலகில் எந்த அரசாங்கமும் தேவையில்லை. அப்படி மக்கள் யாவரும், அடிப்படை ஒழுங்கு முறைகளில் சிறந்து இருப்பார்கள் என்ற நம்பிக்கைக்கு வாய்ப்பு, பிற்காலங்களில் போகப்போக குறைந்து போனதால், ஆற்றல் மிக்கவர்களால் ஒரு அரசாங்கம் (நல்லவர்களைக் கொண்டோ, அல்லது கெட்டவர்களைக் கொண்டோ) கட்டாய நிலையில் உருவாகிக் கொள்ள நேர்ந்து விட்டது. இதை Oliver Goldsmith என்ற கவர்ச்சியான ஆங்கில இலக்கிய உரை நடை ஆசிரியர், தன் “The Citizen of the World” எனும் புத்தகத்தில், “”Necessity makes even a barbarian to any art of dissimulation“” என அழகாகச் சொன்னார். அதாவது, “”தேவைப்பட்டால், ஒரு காட்டுமிராண்டி கூட, அந்தந்த சூழ்நிலைக்குத் தக்கவாறு (பொய், புரட்டு, பாசாங்கு என) தானே செயலாற்ற, தன்னையே கட்டாயமாக மாற்றிக்கொள்வான்”” என்றார்.
இம்மாதிரி நடக்கும் போது, ஆரம்ப காலத்தில், ‘தடியெடுத்தவன் தண்டல்காரன்’ என்ற விதிப்படி (might is right), ஒரு தலைவன் என்று முடியாட்சியோ, அல்லது சர்வாதிகாரி என்றோ ஒரு நிகழ்வாக மக்களுக்கு வந்து வாய்த்தது. இவ்வலிமை உடலாலோ அல்லது வேறெவ்வித மாகவோ இருந்தது. இவனிடம், சட்டம், ஒழுங்கு, நீதி விளக்கம், குற்றத்திற்கேற்ற (தன் சொந்த அபிப்பிராயப்படி, எது குற்றமென அவன் தீர்மானித்தானோ, அதற்கு) தண்டனை அளித்தல், ராணுவம், வேறு இனத்திற்கு எதிராக படையெடுக்கும் தீர்மானம், என பல்வேறு அதிகாரங்கள், ஒரு மனிதனிடமே கூட்டாகக் குவிந்து கிடந்தன. இவன் நல்லவனாக இருந்தால் நல்லது, அனேக தடவை ஏறுமாறாக நடப்பவனாகவே கிடைத்தான். தொன்று தொட்டே, ‘வலிமை மிக்கவனே எக்கணமும் சரியென ஏற்கப்பட்டு விடுவான்’ என மக்கள் மனதில் ஊறிப்போன வழக்காகும். இவ்வலிமை, உடலளவாகிலோ, அல்லது கூர்ந்த புத்தித் திறத்தாலோ இருக்கலாம். இவனும் தன்னை முழுதும் நிரந்தரமாகத் தற்காத்துக் கொள்ள முடியாது என்ற நிலையிலும் இருந்தான். ஏனெனில், தன்னைச் சேர்ந்தவர்களே, இவனுக்கு எதிராக தங்கள் சதித் திட்டத்தை நிறைவேற்றி, அதனால் தன் உயிருக்கே ஆபத்து எளிதில் எந்நேரத்திலும் ஏற்படலாம், எனும் பயம் உண்டாக ஆரம்பித்தது. இச்சமயங்களில், அரசனானாலும் சரி, சர்வாதிகாரி யானாலும் சரி, செய்கையில் சற்றுக் கடுமையுடன் தன்னை ஆக்கிக் கொண்டால் தான் தப்பி பிழைத்து, ஓரளவிற்காவது மேலாண்மை செலுத்த முடியும் என அவனுக்கே புலப்பட்டு விட்டது. ஒரு முன்னேற்பாடாக, வம்சாவளி எனும் கருத்தை உருவாக்கி, தன் குடும்பத்த்தைச் சேர்ந்தவர்களே தனக்குப் பிறகு தான் வகித்த அதே பதவியை தொடர்ந்து வகிக்க வேண்டுமென, ஏற்ற வசதி செய்து கொண்டான். இவனுக்குத் தூபம் போட, உதவியாக ஏதாவதொரு மதத்தலைவரோ அல்லது சதித் திட்டம் தீட்டுபவரோ இருக்கலாம் அல்லது “”தானே எல்லாம்”” என நிர்வாகமும் செய்யலாம் அல்லது Rasputin போல கொடுங்கோலன் அரசாட்சியையோ உருவாக்கலாம்.

ஷேக்ஸ்பியர் எழுதிய ரிச்சர்ட் II எனும் பிரிட்டனை ஆண்ட சர்வாதிகார அரசன் சொல்வதாக ஒரு உரையாடல் கீழே:

“” Not all the waters of the rough rude sea
Can wash the balm of anointed king.
The Deputy elected by the Lord””
என ரிச்சர்டை எதிர்த்த பாலிங்ப்ரோக்கிடம் (Bolingbrooke) ராஜ சபையில், இவ்வாறு முழங்கினான். இதன் பொருள், “””கரடுமுரடான முரட்டுத்தனமான அலைகளைக் கொண்ட எல்லா சமுத்திரத் தண்ணீரைக் கொண்டு என் உடல் முழுதும் திருமுழுக்காட்டப் பட்டாலும், இப்பூவுலகில் கடவுளால், அவருடைய பிரதிநிதி என நியமிக்கப்பட்ட என் மீது ஒட்டியிருக்கும் அரசன் என்ற களிம்பை (balm) எந்த கொம்பனானாலும் அகற்றிவிட இயலாது””” என இறுமாப்புடன் சொன்னான்.

இக்கருத்தை ஒட்டியே, கீழ்கூறியவற்றை, பிஃரென்ச் நாட்டு 14வது லூயி, தன் கடைசி காலத்தில், திமிருடன் இப்படிச் சொன்னான். “”நானே பிஃரான்ஸ் நாடு, அரசாங்கம், சட்டம், எல்லாம் நானே. நாட்டில் பல விஷயங்கள் ஒழுங்கீனமாக, செயலாற்றப் படுகிறதென எவராவது நினைத்தால், அது என்னால், என் இஷ்டப்படி, நான் சொல்லித்தான் நடந்தது, இனியும் எல்லாம் என்னிஷ்டப்படி தான் நடக்கும். ஏன் என கேட்பதற்கு எவருக்கும் இங்கு அதிகாரமில்லை”. ”I am all in the State, things are done wrong because, I wish it and it will continue to be so, and none can question me”” எனச் சொன்னான்.
இதுவே கொடுங்கோல் சர்வாதிகாரிகளுக்கு ஒரு வரையறையானது. இக்கருத்தை ஒட்டியே முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, இந்தியாவெங்கும் அவசரநிலைப் பிரகடனப்படுத்தும் போது (Emergency) படு திமிராகச் சொன்னாராம். இதன் வீளைவு ஜெயப் பிரகாஷ் நாராயண் அவர்கள், அவசர நிலைக்கு முன் துவக்கி வைத்த “நவ நிர்மாண்” என்ற இயக்கம் இன்னும் தீவிரப்படுத்தப் பட்டது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். முடிவாக இந்திராஜியே பதவி இழந்து, பின்னர் ஆட்சிக்கு வந்த்வுடன் தன் மெய்காப்பாளரால் தான் உடல் முழுதும் துப்பாக்கிக் குண்டு துளைத்து படுகொலை செய்யப்பட்டார்.

ஆனால், பிஃரெஞ்ச் நாட்டு 14வது லூயினுடைய மிக அழகான மனைவிக்கோ, (Mary Antoinette) வெளி உலகம் என ஒன்று உள்ளது என அனுபவமோ, எண்ணமோ கிடையாது. அவள் என்ன செய்வாள்! பாவம்! ஏனெனில், இவள் வளர்க்கப்பட விதம் அப்படி! பிறந்த இடமும், புகுந்த இடமும் ராஜ பரம்பரை. வாழ்க்கையில் கஷ்டம் என்றால் என்ன என்று தெரியாத, ஏலா நிலையில் உள்ள, தூய்மையான, பழிபாவமற்ற பேதை. ஒரு தடவை அரண்மனை வாயிலில், ஆயிரக் கணக்கான பொது மக்கள் கூட கூச்சல், குழப்பம் செய்து கொண்டிருந்தனர். ராணி, தன் சேடிகளிடம், அரண்மனை வாசலிலிருந்து ஏன் பெருங்கூச்சல் கேட்கிறது? எனக் கேட்டாள். அதற்கு சேடி ஒருவள்: “மக்களுக்கு உண்ண ரொட்டி (Bread) கிடைக்கவில்லை. ஆகையால், கூச்சல் போடுகிறார்கள்” என்றாள். அதற்கு ராணி, ‘ரொட்டி கிடைக்காவிட்டால் என்ன!, அதற்காக ஏன் கூச்சல் போடவேண்டும்? சாதாரொட்டிக்கு பதிலாக மென்மையான இனிப்பு ரொட்டி (Creamed cakes) சாப்பிடலாமே!’ என ஆச்சரியமான பதிலுரைத்தாளாம். எப்படி!!. சாதா ரொட்டிக்கே, திண்டாடும் போது, மிருதுவான இனிப்பு ரொட்டிக்கு எங்கு போவது? இப்படி ஒரு ஆளும் வர்க்கம் இருந்தாலோ, அல்லது எதுவும் ஒரு எல்லையை மீறினாலோ, நாட்டில் குழப்பம், புரட்சி (Revolution) என, தானே உருவாகி விடும். அப்படித்தான் உண்மையில் பிஃரான்சில் அன்று ஒரு நிலை தன்னாலே வெடித்து, ஒரு பெரிய புரட்சியே உருவானது. (“”when the blood began to flow, and the achievements of revolution were imperiled, France became a nation of supermen, whose volcanic energy scattered as the blasts of people before the cough of kings”” so said a historian). “மக்கள் புரட்சி எனும் இக்கட்டில் பிஃரான்ஸ் நாடே சிக்கிக் கொண்டபின், நாடெங்கும் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. புரட்சியால் விளைந்த செயற்கரிய சாதனைகளோ, பிரம்மாண்ட மனித உருவங்களில் பல எரிமலைகள் ஒன்று சேர்ந்து வெடித்து நாற்புறமும் நெருப்பைக் கக்கி, எழுந்த படு பயங்கர சத்தத்தை ஒப்பிட்டுப்பார்க்கும் போது, அரச குடும்பத்தில் எழுந்த ஆடம்பர ஆர்பாட்டப் பேச்சொலி, சாதா மனித இருமல் ஒலி என ஆயிற்று””, என ஒரு சரித்திர ஆசிரியர் அன்று எழுதி உள்ளது உள்ளபடி எழுதி வைத்தார். அப்போது அரச வம்சத்தில் பிடிபட்ட ஒவ்வொரு வரையும் விதிவிலக்கின்றி பழிக்குப் பழியாக குற்றவாளிகளிகளென மக்கள் நீதி மன்றத்தில் கண்மூடித்தனமாகத் தீர்ப்பாகி, தனித்தனியாக, ஒவ்வொருவருடைய தலையை வெட்டி விட மிகப் பளுவான வெட்டுப் பொறியால் (Guillotine), தீர்த்துக் கட்டினர். அரச பரம்பரை முற்றிலும் அழிக்கப்பட்டது. பின்னர் ஜன நாயகம் பிஃரான்சில் உருவானது. இதை பிஃரஞ்சு புரட்சி (French Revolution) எனச் சொல்வார்கள். மேற்கூறியாறு இன்றைய ஆட்சியாளர்கள் அநியாயங்களில் திளைத்து மேலாண்மை செலுத்தினால், அன்று பிஃரான்ஸ் நாட்டில் அரச வர்க்கத்திற்கு ஏற்பட்ட நிலைதான் எல்லா ஆட்சியாளருக்கும் உண்டாகிவிடும். மனித இயல்பு அப்படித் தான் இயங்கும். இதை ஆட்சி பீடத்திலுள்ளோர் யாவரும் உணரவேண்டும். அநியாயங்களை நிரந்தரமாக மக்களால் சகித்துக் கொள்ள இயலாது.
இதற்கடுத்ததாக, கூட்டாட்சி என மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி சபை என சமூகத்தில், செல்வாக்குள்ளவர்களால், ஆரம்பத்தில் ஓரமைப்பு ஏற்பட்டது. ஆங்கே, மக்களால் ஆங்கீகாரம் பெற்ற அறிஞர்கள், நாட்டுப்பற்றுள்ள மாபெரும் வீரர்கள், பெரியோர்கள், ஆகியவர்களால் தான், ஜன நாயகம் உருவானது. இப்படித் தான் ஜன நாயகம் என்ற கருத்துப் படிவம், ஆரம்பத்தில், மேலை நாட்டு கிரேக்க ஏதன்ஸில் ஜனித்து, பின்னர் ரோம் நகரில் தொடர்ந்து வளர்ந்தது. பிற்காலத்தில், மேலை நாடுகளிலும் தோற்றமெடுத்தது. எங்கும், ஏதன்ஸ் முறையை ஒட்டியே ஆரம்பத்தில் இருந்தது. கிரேக்க ஏதன்ஸில், ஆரம்பகால ஜன நாயகத்தில், செல்வாக்குள்ள 20% சொந்தக்காரர்கள், மற்ற அடிமையான 80% மக்களை ஆண்டனர். இந்த 20%க்குள் ஒரு அமைப்பைத் தான் ஜன நாயகம் என அவர்கள் அழைத்தார்கள். 80% அடிமை மக்களுக்கு அரசாங்கத்தில் இடமில்லாது இருந்தது. அந்நாட்களில் பெண்களுக்கு ஜன நாயகத்தில் வாய்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. இம்மாதிரி அமைப்புதான் ரோம் (Rome) ஆட்சியிலும் உண்டானது. ஏனெனில், ரோமில்கூட ஏதன்ஸில் உள்ளது போலவே மக்கள் சமுதாயம் இருந்தது. கி.பி. 1215இல், பிரிட்டனை ஆண்ட அரசன் “ஜான்” (King John of England) அத்துமீறி செயல்பட்டதால், மக்கள் கொதித் தெழுந்து, அரசனுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையே, Magna Carta என ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். இதில் உள்ள கருத்தை யொட்டியே, இன்றைய பிரிட்டனின் அரசியல் சாசனத்தில், அரசனுக்கு, அலங்கார அரசு-பதவி மட்டுமே உண்டு, ஆனால், செயலாற்ற அதிகாரமில்லை எனவும், தளை நீக்கம், சுதந்திரம் ஆகியவற்றின் அடித்தளமாக உலகுக்கு அமைந்தது. (“”Maintenance of ‘Magna Carta’ became the watch word of the British constitutional Liberty”” By William Tuft in ‘History of Britain’). போகப்போக, 19வது நூற்றாண்டில் தான் பெண்டிர் உள்பட எல்லா மக்களுமாக ஜன நாயகத்தில் வாக்குரிமை (Universal suffrage) உலகெங்கும் பெற்றனர்.

“வில் டுராண்ட்” (Will Durant) என்ற அமெரிக்க சரித்திர நிபுணர் கூறியபடி, “”உண்மையைச் சொன்னால், ஹிந்துஸ்தானே எல்லா நாடுகளுக்கும் ஜன நாயகம், ஒரு சீரான சொந்த-அரசாங்கம் (democracy and self-government) எனும் கருத்தை உலக மக்களுக்கு ஆசிரியராக, கற்றுக் கொடுத்தது. இக்கருத்தை ‘டயோடுரஸ்”, (Diodorus, a Greek historian) எனும், கிரேக்க வரலாறு ஆசிரியர், ஹிந்துஸ்தானத்தைப் பற்றி, அன்று இந்தியாவில் படையெடுத்த அலெக்ஸாண்டர் காலத்தவர், இது உண்மைதான் என உறுதியாக எழுதியுள்ளார். ஒவ்வொரு இந்திய கிராமங் களிலும் கூட அந்நாட்களில், ஜனநாயக நடைமுறை தழைத்து ஓங்கியது. ஏனெனில், இந்தியா தான் எல்லா நாகரிகங்களுக்கும் முன்னோடியாக தலை சிறந்து விளங்கியது. சமஸ்கிருதமே உலக மொழிகளுக்குத் தாய் என மதிக்கப்பட்டது. இந்தியாவே மிக உன்னத தத்துவங்களின் தலைமை பீடமாகவும் திகழ்ந்தது. உலகத்துக்கு, கணிதம், மருத்துவம், ரசாயனம், உலோகவியல் போன்ற விஞ்ஞானங்களை அரேபியர் முதலில் இந்தியாவிடமிருந்து தான் கற்று, அதையே மேலை நாடுகளில் பின்பற்றினர். இதற்கு அரேபிய நாட்டு சரித்திரங்களிலிருந்தே ஏராளமான சான்றுகள் உள்ளன. இம்முறை தொன்று தொட்டு அதாவது கிருஸ்து பிறப்புக்கு முன்பேயே இந்தியாவில் புழக்கத்திலிருந்தது”” என்றார். இந்த உண்மையை திரையிட்டுக் கூறி எழுதி விடுவது, இன்றைய நாட்களில் கூட சில சரித்திர ஆசிரியர்களுடைய முழு நேர வேலை. ஆனால், சரித்திரச் சான்று வேறு விதமாக உள்ளதே! இதை மறைக்கவோ மறுக்கவோ இயலாதே!

இன்னொரு அமெரிக்க நாட்டு இலக்கிய ஆசிரியரான மார்க் ட்வைன் (Mark Twain) மேகூறிய “வில் டுராண்ட்” கருத்தை அப்படியே ஆமோதித்தும் இருக்கிறார்.

சமீபகாலத்தில் நம்மிடையே வாழ்ந்த ஆல்பர்ட் ஈன்ஸ்டின், என்ற விஞ்ஞானி, உலகுக்கு முதன் முதலில், சார்பியல் கோட்பாடு (Theory of Relativity = E = mc2) எனும் கருத்தை ரத்தினச் சுருக்கமாக அளித்தவர்; இக்கருத்து பல புது கண்டுபிடிப்புகளுக்கு அடிகோலியது. அவர் கூறியது. “”இந்தியர்களுடைய புத்திசாலித் தனத்திற்கும், பரந்த மனப்பான்மைக்கு உலக மக்கள் மிகவும் கடமைப் பட்டுள்ளனர், ஏனெனில், இந்தியர்களே, மனித இனத்திற்கு எண்ணிக்கையை முதன் முதலில் கற்றுக் கொடுத்தனர். எண்ணிக்கையே உலகில் எல்லா நவீன விஞ்ஞான கண்டுபிடிப்பு களுக்கு தொடக்க நிலையிலிருந்து இன்றியமைதாக இருக்கிறது.”” என்றார்.

அமெரிக்க நாட்டு ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் (1809–1865) கூறியவாறு, “””ஜனநாயகம் என்பது தான் முழுமையான, கடைசி அரசாங்கமாகும். தேர்தல் மக்களுக்கு உரியது. இவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளால் தான் அவர்களுக்கு ஏற்ற அரசாங்கத்தை கொடுத்துக் கொள்ள முடியும். மக்களே தங்கள் தலைகளில் கொள்ளிக் கட்டையை வைத்துக் கொண்டு, தங்களையே எரித்துக்கொள்ள வேண்டுமென விரும்பினால், அவர்கள் ஒழுக்கங்கெட்ட பிரதிநிதிகளையும் தாராளமாகத் தேர்தெடுத்துக் கொள்ளும் உரிமையும் உள்ளது. ஆகையால் ஜனநாயகம் என்பது மக்களைக் கொண்டு, மக்களால், மக்களுக்காகவே தான் ஆக்கப்பட வேண்டும். நான் ஒரு அடிமையாக வாழ விரும்பமாட்டேன். ஆகையால் நானே அடிமைகளின் சொந்தக்காரனாகவும் ஆகிவிட என்றும் விரும்ப மாட்டேன். இது தான் ஜனநாயகம் என்ற என் கருத்து. மக்களுடைய ஒவ்வொரு ஓட்டுச் சீட்டும், துப்பாக்கிக் குண்டைக்காட்டிலும் மிகவும் வலிமை வாய்ந்தது (The ballot is stronger than the bullet). மக்களால், எல்லாவித துரதிருஷ்ட நிலையிலும் வாழ இயலும். இது அவர்களுக்கே உரித்தான உள் மனவலிமை.
ஆகையால், ஒரு தனி மனிதனுடைய குணவியல்புகளை தேர்வாய்வு செய்ய விரும்பினால், அவனிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள் அப்போது தெரியும் அவன் எப்பேற்பட்டவன் என தானே தன்னை வெளிப்படுத்திக்கொள்வான்””” என்றார்.
[[ஒட்டு வலிமையை சற்றும் உணராமல், இதை சில இலவசங்களுக்காகவோ அல்லது காசுகளுக்காகவோ, கழகங்களுடன் பண்டமாற்று செய்து கொள்ள வேண்டாமே! இக்கட்டான இச்சமயத்திலும் இந்தியாவில் இன்று நடைபெற்றுவரும் “அன்னா ஹசாரே” எனும் காந்தித் தொப்பிக் காரர், காங்கிரஸ் கட்சி தலைமை பீடமும், இடது சாரியினரும் சேர்ந்து, தயாரித்துக்கொடுத்த “லோக் பால்” (Ombudsman) நியமனம் எனும் கருத்துத்திற்காக கிரண் பேடி, அக்னிவேஷ், மல்லிகா சாராபாய், ஆகியோரோடு ஆரம்பித்துவைத்த குழப்ப நாடகம், தேநீர்க்கோப்பைக்குள் நிகழும் உலக மகா சுனாமிதான்! (Storm in the Tea-cup!) இவர்கள் நாடகம் சில நாட்களில் பிசுபிசுத்துப்போகும். இது வரும் தேர்தலுக்காக நடத்தப்பட்ட திடீர் அரசியல் நாடகம். அனைவரும் நினைப்பது போல, இந்திய மக்கள் அவ்வளவு முட்டாள்களல்ல!!]]
வின்ஸ்டன் சர்ச்சில், இரண்டாவது உலகப்போர் நடக்கும் போது, பிரிட்டனின் பிரதம மந்திரியாக இருந்தவர், ஜன நாயகத்தைப்பற்றி ஒரு ஐயுறும் வகையில் தான் தன் அபிப்பிராயத்தை இவ்வாறு: “”ஜன நாயகம் தான் மிகச்சிறந்தது எனவோ அல்லது அறிவில் முதிற்சியடந்தது என ஒரு முடிவாக யார் சொன்னாலும், நான் சொல்ல மாட்டேன். எவ்வளவோ அரசாங்க மாதிரிகளை முயன்று பார்த்தனர். அஃதே போல வருங்காலத்திலும் இன்னும் எவ்வளவோ அரசாங்க தினுசுகளும் புதிது புதிதாக ஏற்படலாம். இருப்பினும், அதில் ஏதாவதொன்றை அவ்வப்போது, ஏற்றுக் கொள்ளும் மக்களையும், அவர்களைக் கையாள்பவர் களையும் பொருத்தது”” என வெளிப்படை யாடையாகக் கூறினார். ஓரு வேளை ஜனநாயகம் என்ற பெயரில், இந்திய நாட்டின் காங்கிரஸ் கட்சியின் தலைமை பீடத்திலிருந்து இந்திய நாட்டையே நிர்வகிக்கும், “எட்விகே அன்டோனியோ அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனும் அசல் இத்தாலியப் பெயர் கொண்டவருக்கு, அப்பெயரை பல காரணங்களுக்காக இந்தியர்களிடமி ருந்து மறைக்க விரும்பிய மாமியார் இந்திரா காந்தி, தன் வெளி நாட்டு மருமகளுக்குச் சூட்டிய “சோனியா காந்தி!” என்ற சுருக்கமான மறு பெயருடன், தன் ஆமைக் கால்களை இந்திய மண்ணில் முதன் முதலில் பதிய வைத்து, பின்னர் பொறுப்பிலும் அமருவார் என முன்கூட்டியே அறிந்து இப்படிச் சொல்லி இருப்பாரோ என்னவோ!!. இருக்கலாமல்லவா! இந்த இத்தாலியப் பெண்மணியின் அபிப்பிராயப்படி, இந்திய ஜன நாயக அரசாங்க நிர்வாகம் என்றால், “”, சோனியாவுக்காக, சோனியாவால், சோனியாவைக் கொண்டு தான் ஆக்கப்பட்டது” என இந்திய நாட்டில் இதைக் கேட்பதற்கு நாதியின்றி தன்னிச்சைப்படி தன்னாட்சி செலுத்தப் படுகிறது. இதற்கு கழக ஆட்சியும் சோனியா வுடன் சேர்ந்து அடங்கி ஜால்ரா போட்டு, ஒத்தூதுகிறது. இதே ‘சோனியாஜி’, பிரிட்டனில் ராஜீவ் கல்லூரியில் படிக்குங்காலத்தில் ஆங்கே ஒரு உணவுவிடுதி யில் உணவு பரிமாறும் பணிப்பெண்ணாக ஊழியம் செய்யும் போதே ஒரு திட்டத்துடன் தான் அவரைக் காதலித்து கடிமணம் புரிந்தார். (Thus, ‘Made for each other’!)
பெஞ்சமின் பிஃராங்க்லின் (Benjamin Franklin) கூறியவாறு: ‘’ஜன நாயகம் என்பது, இரு ஓனாய்கள் ஒரு ஆட்டுக்குட்டி என உறுப்பினர்களுடன் உருவாக்கப்பட்ட ஒரு குழு ‘அன்று இரவு சாப்பாட்டில், எந்த மிருகத்தை உணவாக உண்ணலாம்’ என தீர்மானிப்பதற்கு ஒப்பானது. ஆனால், அந்த ஆட்டுக்குட்டியிடம் இரு ஓனாய்களையும் ஒருங்கே சமாளிக்க (தீர்த்துக் கட்ட) மிகச் சிறந்த வேட்டு ஆயுதம் கைவசம் இருந்ததால் பிழைத்துக் கொள்ள முடிந்தது. இல்லாவிடில், அந்த ஆட்டுக்குட்டியே இரு ஓனாய் உறுப்பினர்களுக்கு உணவாகியிருக்கும்.

எல்லாவற்றைக் காட்டிலும் மிக மூர்க்கத்தனமான விமர்சனத்தைச் சொன்னவர், கார்ல் மார்க்ஸ் (Karl Marx) அவரோடு கம்யூனிஸ்ட்களுமாகச் சேர்ந்து, ஜன நாயகத்தை இவ்வாறு நைய்யப் புடைத்து, விளக்கினார். ”ஜன நாயகம் என்பது பழமையில் பற்றுள்ளது; (Bourgeois= பூஷ்வா); இது முதலாளித் தத்துவத்தில் ஊறியவர்களுடைய ஒரு விபரீத எண்ணம். இக்கருத்தை ஒட்டியே பல்வேறு மதங்களும் மனித எண்ணங்களை மழுங்கடித்து, தூக்க மயக்கத்தில் ஆழ்த்தும், ‘’அபின்’’ (opium) எனக் கருதினார். இந்த அரசியல் முறையில், ஒடுக்கப்பட்ட வர்கத்தைச் சேர்ந்தவர்கள் (oppressed) ஒவ்வொரு முறையும் மீண்டும் மீண்டும் தங்களை ஒடுக்க, யார் யாரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒடுக்கும்-பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பது தான்” ஜனநாயகம் என்றார். ஆக மொத்தம் ஜனநாயகமும் அடக்குமுறையைச் சார்ந்தது தான், என்பதை கம்யூனிஸ்டுகளுக்கே உரித்தான புரட்சிப் பாணியில், ‘காம்ரேட் கார்ல் மார்க்ஸ்’ ஜன நாயகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கினார். இவர்களுக்கு சொந்த நாட்டின் மேல் விசுவாசம், பக்தி என்பது எள்ளளவும் கிடையாது. இவர்கள் வெளி நாட்டு கம்யூனிச சக்திகள் சார்பாக மக்கள் நலனில் அக்கறை இருப்பதுபோல பாசாங்கு செய்து, வெட்கமின்றி வாதாடும் மரபுடையோர். கேட்டால், சீனாவைப் பார், ரஷ்யாவைப் பார் என உணர்ச்சி வேகத்தில் மணிக்கணக்கில் பேசுவர். நாட்டுப்பற்று விஷயத்தில் கம்யூனிசத்தை இஸ்லாமுடன் ஒப்பிடலாம்.

இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல, என் நண்பர் ஒருவர் அடிக்கடி சொல்வது உண்டு. எல்லா படுமோசமான முறைகளில், “”ஜனநாயகமே, மோசத் தரத்தில் சற்று குறைவானது (Lesser of the evils). ஆனால், சர்வாதிகரத்தைவிட எக்காலத்திலும் மிக உன்னதமானது. தவறான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்காமல், மக்கள் தான் எப்போதும் விழித்துக் கொண்டு, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். அப்படி தேர்ந்தெடுக்கப் பட்டவர் மோசமாக நடக்கிறார் என எள்ளளவு சந்தேகம் எழுந்தால் கூட, மக்கள் பரிந்துரைத்து, அப்பிரதிநிதியை பதவியிறக்கம் செய்யும் அதிகாரம் நாடாளுமன்ற மற்ற பிரதிநிதிகளுக்கும், உச்ச நீதி மன்றத்திற்கும் இருக்கவேண்டும்; இதற்கு நாட்டு நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன வாயிலாக மிகத் தெளிவான சட்டவிதிகள் அமைந்துக் கொள்ள வேண்டும். இதனால், மற்ற ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இதுபோன்ற பதவி நீக்கத்தால் தக்க பாடம் கற்பிக்க முடியும். இம்மாதிரி இந்தியப் பிரஜா உரிமைச் சட்டமோ அல்லது வழக்கமோ தெளிவாக இல்லாததால் தான், இத்தாலிய நங்கை “எட்விகே அன்டோனியா அல்பினா மைனோ (Edvige Antonia Albina Maino) எனப்படும் “சோனியா காந்தி!”, பின் வம்சாவளி ஆட்சி எனும் கருத்து வியாதியைப் பற்றிக் கொண்டு, அரசாள்வது தங்கள் பிறப்புரிமை (prerogative) என, நடைமுறை யில் காண்பிக்கிறார்கள். ஓர் இத்தாலியர், இந்திய நாட்டுப் பெருவாரியான பொது மக்கள் விரும்பாத, இறக்குமதி செய்த ஆட்சியாளராக இருப்பதை சகித்துக் கொள்ளும் மானக் கேடு, இந்தியாவில் மட்டுமேதான் உண்டு. இந்த அநியாயத்தை, வேறு எந்த நாட்டிலும் ஏற்று சகித்துக் கொள்ளும் சுரணை கெட்ட மக்கள் எங்காகிலும் உண்டா? இக்கருத்தையொட்டியே, நாளை பிரதமர் பட்டம் கட்டிக் கொள்ள, இன்றே அதற்காக ஏற்பாடு செய்யது தரப்படும் ராகுல் காந்தி’ போன்ற தான்தோன்றி களுக்கும், தற்போது கடிக்காத பற்களைக் கொண்ட இந்திய நாட்டு சட்ட ஓட்டைகளால் தப்பித்துக் கொள்ளும் குறுக்கு வழிகளும் இன்று ஏராளமாக உள்ளன. இம்மாதிரி சட்டங்கள் ஐயத்திற்கோ அல்லது மழுப்பிப் பேச இடமின்றி, இரு நாட்டு பிரஜா உரிமை கொண்டவருக்கு குடியுரிமை அளிக்க இயலாதவாறும், தான் ஒரு இந்திய நாட்டின் நிரந்தரவாசி என நீதிமன்றத்தில் கட்டாய விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விதத்தில் சட்டங்கள் மிகத் தெளிவாக இயற்றப்பட வேண்டும். டாக்டர் சுப்ரமணிய ஸ்வாமி என்பவர், இந்த அக்கிரமங்களை, தக்க சான்றுடன் தட்டிக்கேட்டு பகிரங்கமாக வெளியிட்ட போது, இவர் மீது தவறு இருந்தால், அவர்மீது மான நாஷ்ட வழக்கு உடன் தொடர வேண்டும். அதுவரை ஆகாதவரை, இவர் கூறியதனைத்தும் உண்மையென உள்நாட்டு எதிரிகளே நிரூபிக்கின்றனர். அப்படி நடவடிக்கை எடுக்காதிருக்கக் காரணம், எப்பாடுபட்டாவது ஆட்சி பீடத்தில் வீற்றிருக்க வேண்டுமெனபதே!
அரசாங்க அதிகார பீடத்தில் வீற்றிருக்கும் அரசியல்வாதி களிடமிருந்து கட்டளைகளை பெற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களுக்காகவே தற்போது ஒத்துழைக்கும், ‘சிபிஐ’ போன்ற, கைப்பாவைக் கருவி அமைப்பும், செயலாற்ற முடியாது. தகுந்த சட்டக் கட்டுப்பாட்டு மூலம் தான் ‘2ஜி’ ஸ்பெக்ட்ரம் போன்ற ஒதுக்கீடு மோசடிகளையும் உடன் கண்டறிய முடியும்”” என்றார். தகுந்த கட்டுப்படு இல்லாததால் தான், இங்கே அரசியலில் பரத்தமைத் தொழில்-போல இடைத்தரகு புரிந்த, பல தொடர்பு நிருவனங்களை நடத்திவரும் நீரா ராடியா அம்மையார் போன்றவர்களின், ரகசியங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின் இன்று மக்களுக்குக் கிடைத்துள்ளன. ஐயப்பாடுகளை முற்றிலும் அகற்றிட தகுந்த சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். இக்கருத்தை யாவரும் முழுமையாக வழிமொழிவார்கள் என நினைக்கிறேன். புள்ளி விவரப்படி, உலகெங்கும் ஜனநாயகம் என பெயரளவிலாவது இன்று பெரும்பான்மையாக உள்ளது.
உலகத்தில், சிறுபான்மையினராக இஸ்லாமியர்கள் இருப்பினும், உலக சர்வாதிகார தேசங்களுக்குள், பெரும்பான்மையினராக இஸ்லாமிய எதேச்சாதிகாரமே இன்று நடைமுறை யிலுள்ளது.

உண்மையில் ஜன நாயகத்தில் நடப்பதென்ன? இப்போதுள்ள அரசியல்வாதிகள் தான் ஜனநாயகத்தின் நற்பெயருக்கு ஊறு செய்கிறார்கள். அரசியல்வாதிகள் வரும் தேர்தலை மட்டுமே கணக்கில் கொள்ளாது, அதற்கடுத்து வரும் தேர்தலுக்குமாகச் சேர்ந்து நிரந்தர திட்டங்களுடன் செயலில் இறங்குகிறார்கள். அரசியல்வாதிகள், இக்குறிக்கோளுடன் அடுத்து வரும் தேர்தலில், தங்கள் பதவியை எவ்வழியிலும், தக்க வைத்துக் கொள்ள எந்த தில்லு முல்லையும் சளைகாமல் செய்கிறார்கள். இது நாட்டு ஒற்றுமைக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பிராந்திய சக்திகளுக்கும், கட்சிகளுக்கும் உற்சாக மூட்டி, துணிவூட்டுகிறது. இதனால், ஒருகாலத்தில் மேல் துண்டு வாங்கக்கூட வக்கில்லாத பிராந்திய கட்சித்தலைவர்கள், இன்று தெருவில் புரளும் வண்ண அழகுக் கரை துண்டுடனோ அல்லது பொன்னிற சால்வையுடன் பவனி வருவதும், தனக்கும், தன்னைச் சேர்ந்தவர் களுக்கும், கோடிகோடியாக சொத்தைக் குவித்துக் கொள்ளவும், காணொளி நிறுவனங்களை சொந்தமாக்கி, பல பத்திரிக்கையாளர்களைக் கையில் போட்டுக் கொண்டு தங்களுச் சாதகமாக எழுதச் சொல்லவும், வெளி நாட்டு வங்கிகளில் கோடிகோடியாக, சேமித்து வைக்க, அவர்கள் வகிக்கும் பதவியே ஏற்பாடு செய்து கொடுக்கிறது.

இதனால், முன்னாள் பிடிட்டிஷ் பிரதம மந்திரி, கிளாட்ஸ்டன் என்பவர் W. E.Gladstone
“”மனித இனத்திற்கே சுயநலம் என்பது ஒரு சாபக்கேடு. உச்ச நிலை தீவிர போட்டியாலும், சுயநலத்தாலும், எத்தனையோ நல்ல தேசங்கள் நாசமாகி இருக்கின்றன.

துருக்கிய நாட்டு ‘எர்டோகன்’ (Erdogan) என்பவர், இஸ்லாமைப் பற்றி விமர்சனம் செய்கையில், “” ஜன நாயகம் ஒரு பொதுஜன பேருந்து போன்றது. அதில் உட்கார்ந்து, முஸ்லிம்கள் விரும்பும் இடத்தில் அவ்வப்போது ஏறிக்கொண்டு, தங்களுக்கு வேண்டும் இடத்தில் இறங்கியும் விடுகிறார்கள். தினமும் அதில் உட்கார்ந்து பயணம் செய்ய முஸ்லிம்களுக்கு பொறுமையும் கிடையாது. நிரந்தர விருப்பமும் கிடையாது. இக்கருத்தை முஸ்லிம்கள் தான் உலக மக்களுக்கு நிரூபித்துக் காட்டுகிறார்கள்!”” என்றார். அதே சமயத்தில், இன்னொரு கவிதையில் அவருடைய மென்மையான உண்மை மனவெழுச்சியை இப்படி பிரதிபலிக்கிறார்.

• மசூதிகள் தான் முஸ்லிம்களுக்கு பாசறை (படைவீரர்கள் தங்குமிடம்);
• முஸ்லிம்கள் தான் இஸ்லாமிய இயக்கத்தின் போர் வீரர்கள்;
• மசூதி கவிகை மாடம் தான் (dome) முஸ்லிம்களுடைய இரும்புத் தொப்பி (Helmet);
• மசூதி ஸ்தூபிகள் தான் (மனோரா) முஸ்லிம்களுக்கு ஈட்டி; அல்லது துப்பாக்கி முனையில் உள்ள குத்தீட்டி.
• முஸ்லிம் படைவீரர்கள், முஸ்லிமாக இல்லாதவர்களைத் துன்புறுத்தி, கட்டாயப் போரால் (‘ஜிஹாத்’) இஸ்லாமியத்தைப் பாதுகாக்கிறார்கள்.
• முஸ்லிம்களுக்கு ஏற்றவாறு, கூறுவதையும் (‘தக்கியா’) ‘ஹலால்’ என புனிதமாக்கப் பட்டுள்ளது. ‘ஹலால்’ என்றால் கட்டாயம் செய்ய வேண்டியவைகள்.
• சிறு பிராயம் முதல், ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்க்கைப் பயணம் அல்லாவின்
இருப்பிடமான சுவர்க்கத்தை அடையும் நோக்கத்துடன் ஆரம்பிக்கிறது;

மேற் கூறியவைகளைத் தொடர்ந்து, முல்லாக்களால், சாயங்கால “ஜும்மா மெஹ்ரிப்” தொழுகைக்குப் பிறகு, அல்லாவுக்காக ஜிஹாதில் பங்குகொண்டு உயிர்தியாகம் செய்வதால் மட்டுமே, சுவர்க்கத்தில் அல்லாவை அடையலாம் என்பது தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப் படுகிறது. இம்மாதிரி அறிவுரையின் விளைவாக, எத்தனையோ கணக்கற்ற நிரபராதி சடலங்களால் ஆன படிகளில் மீதேறி, சுவர்கப் பயணம் தொடங்குகிறது””, என்று, இஸ்லாமி யத்தின் உண்மை நடப்புகளை பிரதிபலிக்கும் வகையில் மிக ரத்தினச் சுருக்கச் சொற்களால் நிரூபித்துள்ளார். ஆனால், “”ஜன நாயகம் என்பது மேலை நாட்டு கலாசார விளைபொருள். இது மத்திய கிழக்கு நாடுகளில் என்றும் நிலைத்து இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், இங்கிருக்கும் நாடுகளுடைய கலாச்சாரம், மதம், சமூக, சரித்திரப் பின்னணி மேல நாட்டு கலாச்சாரத்திலிந்து முழுமையாக வேறுபாடுடையது”” என்றார்.

இங்கே ஒன்றைக்கவனிக்க வேண்டும். மேற்கூறிய எல்லா சர்வாதிகாரிகளுக்கும் கிடைத்த ஒரே பரிசு, அவர்களுடைய பயங்கர கொலைகளிலோ அல்லது நாட்டைவிட்டோடவோ நேர்ந்தது. ஆப்பிரிக்காவில் “சமீபகாலத்தில், ‘இதி அமீனை”த் தொடந்து, பிற்காலத்தில் முஸ்லிம் எகிப்திய அதிபர் முபாரஃக், நாட்டை விட்டோட நேர்ந்தது, அடுத்தது இஸ்லாமிய வெறியன் முஸ்லிம் லிபியா முகம்மது கஃட்டாஃபிக்கும், பஹ்ரைன் நாட்டு ஷேக்கிற்கும் நடக்கக் காத்துக் கொண்டிருக்கிறது. சர்வாதிகாரிகள் தற்காலிகமாக அப்படி ஆதாய வெற்றி பெற்றாலும், அது நீடித்து நிலைக்க முடியாது. மீண்டும் கிளர்ச்சி ஏற்படக் கூடும். ஆயதுல்லா குமேனியால் உண்டாக்கப்பட்ட இஸ்லாமிய இரானிலும், டேனிஷ் நாட்டிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு புரட்சி கூடிய சீக்கிரம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து, இப்பட்டியலில் சேரவுள்ள நாடுகள், அல்ஜீரியா, ஜோர்டன், ஏமான் ஆகிய நாடுகளிலும் மக்கள் ஜன நாயகத்திற்கு ஆதரவாக புரட்சி வெடித்து, எந்நேரத்திலும் தொடங்க உள்ளது. இஸ்லாமிய சவுதி அரேபியா விலும், கிளர்ச்சிகள் வரும் காலத்தில் கட்டாயம் நடைபெறும். ஜன நாயகம் மலரும்.
சூரிய, சந்திரக் கிரகணம் நிகழும் போது, சிறிது காலத்திற்குத் தான் ஒளியடைப்பு இருக்கும். நிரந்தரமாக அல்லவே! இக்கருத்தை ஒட்டி, (“चांद कब तक गेहन में रहे”) “சாந்த் கப்தக் கேஹன் மே ரஹே”– என (राज़ इलाहाबादी) ‘ராஜ் இலாஹாபாதி’ எனும் ஹிந்தி கவிஞர் எழுதியுள்ளார்) ஆக, ஜன நாயகமே எல்லா அரேபிய நாட்டிலும் வருங்காலத்தில் கட்டாயமாக மலரும். சர்வாதிகாரம் மண்ணைக் கவ்வும். இந்த கருத்துப்படிவம் தான் சரித்திர ஆரம்பத்தி லிருந்து இந்நாள்வரை கண்டுணரப்படுகிறது. இதற்கு பூர்வாங்கமாக இஸ்லாமிய ரல்லாத மக்களால் நடவடிக்கைகள் இஸ்லாமிய பயங்கர தீவிரவாதத்திற்கெதிராக, ஜன நாயகத்திற்கு ஆதரவாக ஆங்காங்கே ஆயத்தமாகிக் கொண்டு வருகிறது. இதன் விளைவு, மூன்றாவது உலக மகாயுத்தத்தில் கூட (World War III) விளைந்து விடலாமென அரசியல் நிபுணர்கள் (Political Pundits/Scientists) கருதுகிறார்கள். இப் போரின் விளைவால், இன்று உலகில் உள்ள 20% முஸ்லிம்களுடைய இனிமையற்ற, மனதிற்கொவ்வாத அணுகு முறையும் முழுமையாக நீங்கி, இவர்களும் (20%ம்) மற்ற 80% பெரும்பகுதி உலக மக்கள் சமூகத்தோடு ஒட்டி வாழ வாய்ப்பும் உள்ளது. இந்த வாய்ப்பை இழந்தால் அன்று, ஹிட்லர் அமைத்த நாஸிசம், லெனின் அமைத்த சோவியத் கம்யூனிசம் போலத்தான் ஆகிவிடும்!…

இந்தியாவில் இதன் கருத்துத் தாக்கம் மிக ஆழமான முழுதுமாக இன்றும் உணரப் படவில்லை. கூடிய சீக்கிரம் உணர்ந்து விடுவதே இந்திய நாட்டு வருங்காலத்தில் மக்களுக்கு நல்லது. நம் தெய்வப்புலவர் திருவள்ளுவர் இயற்றிய, உத்தர வேதமாக போற்றப்படும் திருக்குறளில், ஒழுக்கமுடைமையில் (140) இவ்வாறு கூறினார்.

“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலாதார்”.
இந்திய முஸ்லிம்களின் தற்போதைய நடத்தை, அவர்களுக்கு இஸ்லாம் புனித நூல்கள் காட்டிய வழியையே, அனுசரிக்கும் ‘தக்கியா’வுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

மற்றொரு முக்கிய தகவல்: இனி, வரப்போகும் பகுதிகளில், சில இஸ்லாமிய முக்கியமாக பழக்க, வழக்கங்களை அளிக்க வேண்டிய கட்டங்களில் தக்க ஆதாரங்களுடன் ஆய்ந்து தந்திருக்கிறேன். இப்படி கொடுக்காமல் இருக்க வேறு வழியில்லை. ஏனெனில், உண்மை என்று ஒன்று உண்டல்லாவா! இவைகளைச் சொன்னாலாவது தமிழ் மக்களுக்கு இஸ்லாமிய வண்ணமய பல உருவங்களை அறிந்தால் சரி என்ற நல்ல நோக்குடன் எழுத்தப் பட்டுள்ளது.

(தொடரும்) …

Series Navigationவிஸ்வரூபம் அத்தியாயம் 75 >>

This entry is part [part not set] of 46 in the series 20110417_Issue

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்

அம்பா சரண் வஸிஷ்ட் - தமிழாக்கம்: நல்லான்