சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 7

ராமச்சந்திர கோபால்



முந்தைய பாடத்தில் எளிய வாக்கியங்களை படித்தீர்கள். சொன்னீர்கள். ஒரு வாரம் முழுவதும் படிக்க அது மிகவும் குறைவு என்பது தெரியும். ஆகவே இந்த வாரம் சற்று நிறைய கற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்வோம்

किम् கிம்,என்றால் ”என்ன” என்று பொருளாகும்.

இது என்ன அது என்ன என்று கேட்பதற்கு किम् என்ற வார்த்தையை உபயோகிக்க வேண்டும்.

யார்? என்று கேட்க कः என்று கேட்க வேண்டும். ஆனால் முக்கியம், கேட்கப்படுபவர் ஆணாக இருந்தால் மட்டுமே कः என்று

கேட்கவேண்டும்.

அது பெண்ணாக இருந்தால் का என்று கேட்கவேண்டும்.

கவனியுங்கள். பெயர் என்ன என்று கேட்டால் नाम किम् . ஆனால், ராமர் யார்? என்று கேட்கவேண்டுமானால், राम: कः?

என்று கேட்கவேண்டும். சீதா யார் என்று கேட்க सीता का? என்று கேட்கவேண்டும்.

சில வார்த்தைகளை தெரிந்துகொள்வோம்.
अहम – அஹம், என்றால் நான்
भवान – ப்வான்,நீங்கள் (ஆண்)
भवत: பவதஹ, உங்களுடைய (ஆண்)

भवती – பவதி, நீங்கள்(பெண்)
भवत्‍या: பவத்யாஹா, உங்களுடைய (பெண்)

नमस्ते நமஸ்தெ,வணக்கம்
सुप्रभातम्-ஸுப்ரபாதம்,காலைவணக்கம்
कुशलम्-குஷலம்,நலம்
आम्- ஆம்

(तव தவ என்றால் உன்னுடைய என்று பொருள், ஆண் பெண் இரண்டுக்கும் ஒன்றே)

கீழ்க்கண்ட உரையாடலை உரத்து படியுங்கள். அல்லது யாருடனாவது உரையாடுங்கள்.

பெண் – नमस्ते , भवत: नाम किम् ?
ஆண் – नमस्ते , मम नाम रामः
भवत्‍या: नाम किम् ?
பெண் – सुप्रभातम्, मम नाम सीता
ஆண் – कुशलम्,वा?
பெண் – आम्, भवान क:?
ஆண் – अहम्, रामः
भवती का?
பெண் – अहम सीता


ஆகவே ஆண்பால் பெயர்கள் रामः, शेखरः, देवः, पुत्रः, शिवः, माधवः, विजयः, पिता, भ्राता , काकः (காகம்), गजः(யானை),

உபயோகிக்கும்போது அதன் தொடர்பான क: யார் என்பதை உபயோகிக்க வேண்டும்.

பெண்பால் பெயர்களான सीता, उमा, पार्वती(பார்வதீ), देवी (தேவீ), पुत्री (புத்ரீ), भार्या, माला(மாலை), माता, पद्मा (பத்மா – த் द् எழுத்தும் ம எழுத்தும் இணைந்து இருப்பதை கவனியுங்கள்), सुभ्रद्रा (சுபத்ரா) ஆகிய பெண்களை பேசும்போது का உபயோகிக்க வேண்டும்.

அஃறிணையாக இருக்கும் வார்த்தைகளை உபயோகிக்கும்போது கிம் किम्-உபயோகிக்க வேண்டும்.

मित्रम्, वाहनम्, नाम, धनम्, जलम्, कमलम्, आभरणम्- ஆகியவற்றை பேசும்போது அஃறிணைக்காக किम् உபயோகிக்கவேண்டும்.

மித்ரம் என்றால் நண்பன், நண்பி எல்லாம்தான். ஆனால், மித்ரம் என்ற இந்த வார்த்தை அஃறிணை. அதுதான் முக்கியம்.

இந்த வார்த்தை அஃறிணையாக இருப்பதால்தான் இதன் தொடர்பாக கேள்வியோ பேச்சோ இருந்தால் அது அஃறிணைக்கான அனைத்து உப வார்த்தைகளையும் கொண்டு பேசப்படவேண்டும்.

உதாரணமாக

நண்பர் யார்?

என்பதை

मित्रम् किम्-என்றுதான் எழுதவோ பேசவோ வேண்டும். நண்பர் ஆணாக இருந்தால் மித்ரம் கஹ? என்று கேட்கக்கூடாது.

மித்ரம் கிம் என்றுதான் கேட்கவேண்டும்.


சரி இப்போது இவர் அவர் இது அது ஆகியவற்றை பார்க்கலாம்

ஆண்
एषः – எஷஹ, இவர் (இவன் மாதிரி)
सः – ஸஹ, அவர் (அவன் மாதிரி)


பெண்
एषा – எஷா, இவர் (இவள் போல)
सा – ஸா, அவர் (அவள் போல)

एतत्- எதத், இது
तत्- தத், அது


एषः विजयः (கையை அருகாமையில் காட்டி)
सः रामः (கையை தொலைதூரத்தில் காட்டி)

एषा उमा (கையை அருகாமையில் காட்டி)
सा सीता (கையை தொலைதூரத்தில் காட்டி)

एतत् वाहनम् (கையை அருகாமையில் காட்டி)
तत् आभरणम् (கையை தொலைதூரத்தில் காட்டி)

சொல்லிப்பழகுங்கள்.
இங்கே வேறு பெயர்களையும் போட்டு சொல்லிப்பழகினால் இவை மனதில் ஏறும்

இப்போது சில வாக்கியங்களை எழுதுகிறேன்.
இவற்றை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து சொல்லிப்பழகுங்கள்.

இவர் ராம
இவர் சீதா
இது கமலம்

அது யானை
அது மாலை
அது வாகனம்

இது என்னுடைய யானை
இது என்னுடைய மனைவி
இது என்னுடைய ஆபரணம்

அது உங்களுடைய யானை
அது உங்களுடைய மனைவி
அது உங்களுடைய ஆபரணம்

இப்போது சில சொற்களை கற்றுக்கொள்வோம். பேசும்போது இவை உபயோகப்படும்

धन्यवादा: தன்யவாதாஹா = நன்றி

स्वागतम्- ஸ்வாகதம் – நல்வரவு

धन्योस्मि – தன்யோஸ்மி – நன்றி(யுடன் இருக்கிறேன்)

पुनर्मिलामः – புனர்மிலாமஹ – மீண்டும் சந்திப்போம்.

क्ष्म्यताम्- க்‌ஷம்யதாம் – மன்னியுங்கள் (excuse me என்று சொல்வதுபோல)

शुभमस्तु – ஷுபமஸ்து – நல்லதே இருக்கட்டும் – best wishes என்று சொல்வது போல


இப்போது
पुनर्मिलामः

Series Navigation

This entry is part [part not set] of 44 in the series 20100807_Issue

ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்