35 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 35

ரேவதி மணியன்



இந்த வாரம் यदा – तदा (yadā – tadā) when – then என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம். வாக்கியம் எக்காலத்தில் இருந்தாலும் यदा – तदा என்பது உருமாற்றம் பெறாது (Indeclinable).

‘ यदा ‘ इति यत्र प्रयुज्यते तत्र ‘ तदा ‘ इति शब्दः अपि प्रयोक्तव्यः। (‘ yadā ‘ iti yatra prayujyate tatra ‘ tadā ‘ iti śabdaḥ api prayoktavyaḥ |) ஒரு வாக்கியத்தில் ‘ यदा ‘ என்ற வார்த்தையை உபயோகித்தால் ‘ तदा ‘ என்ற வார்த்தையையும் உபயோகிக்க வேண்டும்.

उदा :
यदा वसन्तकालः तदा कोकिलः कूजति।
yadā vasantakālaḥ tadā kokilaḥ kūjati |
எப்போது வசந்தகாலமோ அப்போது குயில் கூவுகிறது.

यदा सूर्यास्तः भवति तदा पक्षिणः नीडं प्रविशन्ति।
yadā sūryāstaḥ bhavati tadā pakṣiṇaḥ nīḍaṁ praviśanti |
எப்போது அந்திநேரமாகிறதோ அப்போது பறவைகள் கூட்டில் நுழைகின்றன.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி
1. यदा अहं तत्र गतवान् तदा सः पठति स्म।
yadā ahaṁ tatra gatavān tadā saḥ paṭhati sma |
எப்போது நான் அங்கு சென்றேனோ அப்போது அவன் படித்துக் கொண்டிருந்தான்.

2. यदा भवान् बेङ्गलूरु आगमिष्यति तदा मम गृहे एव वासं करोतु।
yadā bhavān beṅgalūru āgamiṣyati tadā mama gṛhe eva vāsaṁ karotu |
எப்போது நீங்கள் பெங்களூர் வருகிறீர்களோ அப்போது என்னுடைய வீட்டிலே தங்கவும்.

3. अहं सज्जः भवामि। यदा भवान् आगच्छति तदा गच्छामः।
ahaṁ sajjaḥ bhavāmi | yadā bhavān āgacchati tadā gacchāmaḥ |
நான் தயாராக இருப்பேன். எப்போது நீங்கள் வருகிறீர்களோ அப்போது போகலாம்.

4. यदा वयं काश्मीरं गतवन्तः तदा तत्र बहु शैत्यम् आसीत्।
yadā vayaṁ kāśmīraṁ gatavantaḥ tadā tatra bahu śaityam āsīt |
எப்போது நாங்கள் காஷ்மீர் சென்றோமோ அப்போது அங்கு குளிராக இருந்தது.

5. यदा अहं भवतः गृहम् आगतवान् तदा भवान् कुत्र गतवान् आसीत् !
yadā ahaṁ bhavataḥ gṛham āgatavān tadā bhavān kutra gatavān āsīt !
எப்போது நான் உங்களுடைய வீட்டிற்கு வந்திருந்தேனோ அப்போது நீங்கள் எங்கே சென்றிருந்தீர்கள்.

6. यदा अहं विद्यार्थिनि आसं तदा संस्कृतं पठितवती।
yadā ahaṁ vidyārthini āsaṁ tadā saṁskṛtaṁ paṭhitavatī |
எப்போது நான் மாணவியாக இருந்தேனோ அப்போது சமஸ்கிருதம் படித்தேன்.

एतं श्लोकम् उच्चैः पठन्तु –
etaṁ ślokam uccaiḥ paṭhantu –
இந்த ஸ்லோகத்தை உரத்துப் படிக்கவும்.

यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत।
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्॥
yadā yadā hi dharmasya glānirbhavati bhārata |
abhyutthānamadharmasya tadātmānaṁ sṛjāmyaham ||

( ‘यदा यदा धर्मस्य ग्लानिः भवति अधर्मस्य च उत्कर्षः भवति , तदा अहम् अवतारं करोमि ‘ इति श्रीकृष्णः वदति !)
( ‘ yadā yadā dharmasya glāniḥ bhavati adharmasya ca utkarṣaḥ bhavati , tadā aham avatāraṁ karomi’ iti śrīkṛṣṇaḥ vadati !)

‘ எப்போதெல்லாம் தர்மம் வீழ்ச்சியடைந்து அதர்மம் தலைதூக்குகிறதோ , அப்போது நான் அவதரிப்பேன் ‘ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

कथा (kathā ) கதை

कृष्णः गोपी च (kṛṣṇaḥ gopī ca)
கிருஷ்ணரும் கோபியும்

कृष्णः गोकुले वसति। प्रतिदिनं गोप्यः तेने सह नृत्यन्ति।
कृष्णः वेणुगानम् अपि करोति। तदा मृगाः पक्षिणः च तत् मधुरं गानं श्रोतुम् आगच्छति।
कृष्णः गोकुलस्य प्रियः। सर्वे तस्मै क्षीरं दधि च ददाति।
एका गोपी सर्वदा कृष्णम् एव स्मरति।
सा प्रतिदिनं क्षीरं दधि च विक्रेतुं वीथ्यां गच्छति।
यदा सा वीथ्यां गच्छति तदा सा कृष्णम् एव स्मरति स्वकार्यं विस्मरति।
एकदा सा क्षीरं दधि इति न क्रन्दति। परन्तु गोविन्द दामोदर माधव इति एव सा उच्चैः घोषयति।
तस्याः सख्यः तदा हसन्ति। सा गोपी लज्जिता भवति।
परन्तु कृष्णः तत्र आगच्छति। तं दृष्ट्वा सा सन्तुष्टा भवति।

kṛṣṇaḥ gokule vasati | pratidinaṁ gopyaḥ tene saha nṛtyanti |
kṛṣṇaḥ veṇugānam api karoti | tadā mṛgāḥ pakṣiṇaḥ ca tat madhuraṁ gānaṁ śrotum āgacchati |
kṛṣṇaḥ gokulasya priyaḥ | sarve tasmai kṣīraṁ dadhi ca dadāti |
ekā gopī sarvadā kṛṣṇam eva smarati |
sā pratidinaṁ kṣīraṁ dadhi ca vikretuṁ vīthyāṁ gacchati |
yadā sā vīthyāṁ gacchati tadā sā kṛṣṇam eva smarati svakāryaṁ vismarati |
ekadā sā kṣīraṁ dadhi iti na krandati | parantu govinda dāmodara mādhava iti eva sā uccaiḥ ghoṣayati |
tasyāḥ sakhyaḥ tadā hasanti| sā gopī lajjitā bhavati |
parantu kṛṣṇaḥ tatra āgacchati | taṁ dṛṣṭvā sā santuṣṭā bhavati |

கிருஷ்ணர் கோகுலத்தில் இருக்கிறார். தினமும் கோபியர்கள் அவருடன் நடனம் செய்கின்றனர்.
கிருஷ்ணர் புல்லாங்குழலும் வாசிக்கிறார். அப்போது மிருகங்கள் மற்றும் பறவைகள் அந்த இசையைக் கேட்பதற்காக வருகின்றன.
கிருஷ்ணர் கோகுலத்தில் எல்லோருக்கும் பிரியமானவர். அனைவரும் அவருக்கு பால் மற்றும் தயிர் ஆகியவைகளை சமர்ப்பிக்கின்றனர்.
ஒரு கோபி எப்போதும் கிருஷ்ணனை மட்டுமே நினைவுகொண்டிருந்தாள்.
அவள் தினமும் பால் மற்றும் தயிர் விற்பதற்காக வீதியில் செல்வாள்.
எப்போது அவள் வீதியில் செல்கிறாளோ அப்போது கிருஷ்ணரையே நினைத்துக்கொண்டு தன்னுடைய வேலையை மறந்துவிடுவாள்.
ஒருமுறை பால் தயிர் என்று கூவவில்லை. பதிலாக கோவிந்த , தாமோதர, மாதவ என்று மட்டும் சத்தமாக கூவிச் செல்கிறாள்.
அவளுடைய தோழிகள் அப்போது சிரிக்கின்றார்கள். அந்த கோபி வெட்கமடைகிறாள்.
ஆனால் கிருஷ்ணர் அங்கு வருகிறார். அவரைப் பார்த்ததும் அவள் ஆனந்தம் அடைகிறாள்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி

‘ यदा – तदा ‘ अव्यययोः योजनेन वाक्यानि रचयन्तु –
‘ yadā – tadā ‘ avyayayoḥ yojanena vākyāni racayantu –

उदा – अध्यापकः आगच्छति – छात्राः उत्तिष्ठन्ति।
adhyāpakaḥ āgacchati – chātrāḥ uttiṣṭhanti |

यदा अध्यापकः आगच्छति तदा छात्राः उत्तिष्ठन्ति।
yadā adhyāpakaḥ āgacchati tadā chātrāḥ uttiṣṭhanti |

1. सूर्योदयः भवति – कमलं विकसति।
sūryodayaḥ bhavati – kamalaṁ vikasati |
சூரியோதயம் ஆகிறது – தாமரை மலர்கிறது

2. रात्रिः भवति – चन्द्रोदयः भवति।
rātriḥ bhavati – candrodayaḥ bhavati |
இரவாகிறது – சந்திரன் உதயம் ஆகிறது

3. पञ्चवादनम् भवति – बालकः उत्तिष्ठति।
pañcavādanam bhavati – bālakaḥ uttiṣṭhati |
ஐந்து மணியாகிறது – சிறுவன் எழுகிறான்

4. सिंहः आगच्छति – मृगः धावति।
siṁhaḥ āgacchati – mṛgaḥ dhāvati |
சிங்கம் வருகிறது – மிருகம் ஓடுகிறது

5. मम जन्मदिनम् अस्ति – अन्नदानं करोमि।
mama janmadinam asti – annadānaṁ karomi |
என்னுடைய பிறந்தநாளாக இருக்கிறது – அன்னதானம் செய்கிறேன்

Series Navigation<< பிரச்சாரம்<< பறவையின் தடங்கள் மலாய் மொழிக்கவிதைகள்<< ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி – 9<< அலை மோதும் நினைவுகள்<< நிறைய அமுதம். ஒரு துளி விஷம். வைரஸின் கவிதைகள் எனது பார்வையில்.<< புலம்பெயர்தலும் , புலம்பெயர் இலக்கியமும் தமிழரும்!<< செம்மொழித் தமிழின் பொதுமை<< 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3 (ஜூலை 17, 2007)<< பூர்வீக நிலம் அபகரிக்கப்பட்ட உலகின் வரலாற்றை புரட்டிய ஆதிமனிதன்<< தமிழுக்கு ஒளி தந்த தமிழொளி<< இலக்கு<< அப்படியாகிலும் இப்படியாகிலும் …<< அதனதன் தனிமைகள்<< அறை இருள்<< கவலை<< என் மூன்றாம் உலகம்!<< சுயபரிசோதனை<< சிலர் வணங்கும் கடல்<< தேடும் உள்ளங்கள்…!<< நெய்தல் போர்<< கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,அவர்தம் குடும்பத்தின்மீதான தக்கலை அபீமுஅ ஜமாத்தின் ஊர்விலக்கு நடவடிக்கை சட்டவிரோதமானது<< யுத்தத்தில் வெளிவராதவை இன்னும் அதிக காலத்திற்கு இருக்கும்<< ஊட்டவுட்டுத் தொரத்தோணும்<< விஸ்வரூபம் சில வாரங்களுக்கு பிறகு மீண்டும் தொடரும்<< யார் கொலையாளி? – துப்பறியும் சிறுக‌தை<< மனசு<< இவர்களது எழுத்துமுறை – 37 ஹெப்சிபா ஜேசுதாசன்<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் – 10<< வந்தே மாதரம் – தோற்றமும் இன்றைய பின்னடைவும்<< கணையாழியும் கஸ்தூரிரங்கனும்<< ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு கடைசி பகுதி – நான்கு (4)<< மரணத்தின் தூதுவன்<< களங்கமில்லாமல்..<< அதுவரை பயணம்.<< என் மண்!<< குதிரைகள் இறங்கும் குளம்<< இரட்டை ரோஜா இரவு<< அஞ்சலி: கி. கஸ்தூரி ரங்கன் 1933-2011)<< பெருங்கிழவனின் மரணம்கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பழக்கத் தொடர்பை விட்டுவிடு ! (Wean Yourself) (கவிதை -34) >>

This entry is part 1 of 42 in the series 20110508_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்