34 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 34

ரேவதி மணியன்



சென்ற வாரம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः …. पर्यन्तम् (taḥ… paryantam) உபயோகப் படுத்தவேண்டும் என்று அறிந்துகொண்டோம்.

இந்த வாரம் आरभ्य (ārabhya) ’ஆரம்பித்து’ (முதல்) என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஒரு செயலை ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்து செய்யத் தொடங்கும்போது आरभ्य என்ற சொல்லை உபயோகிக்கவேண்டும்.

उदा –
अद्य आरभ्य (adya ārabhya) இன்று முதல்
श्वः आरभ्य (śvaḥ ārabhya) நாளை முதல்

கீழே கொடுக்கபபட்டுள்ள உரையாலை உரத்துப் படிக்கவும்.

माला – गोपाल ! भवतः परीक्षा समीपम् आगता अस्ति ! अद्य आरभ्य प्रतिदिनं पठतु !
mālā – gopāla | bhavataḥ parīkṣā samīpam āgatā asti |
மாலா – கோபால ! உங்களுடைய தேர்வு நெருங்கிக்கொண்டு இருக்கிறது. இன்று முதல் தினமும் படி .

गोपालः – अद्य अहं मित्रस्य (1) गृहं गच्छामि ! श्वः आरभ्य पठिष्यामि भगिनि !
gopālaḥ – adya ahaṁ mitrasya gṛhaṁ gacchāmi | śvaḥ ārabhya paṭhiṣyāmi bhagini |
கோபால் – இன்று நான் நண்பனுடைய வீட்டிற்குச் செல்கிறேன். அக்கா , நாளை முதல் படிக்கிறேன் .

माला – भवतु ! गोपाल ! विद्यालये योगासनकक्षा (2) कदा आरभ्य भविष्यति ?
mālā – bhavatu | gopāla | vidyālaye yogāsanakakṣyā kadā ārabhya bhaviṣyati ?
மாலா – சரி . கோபால! பள்ளியில் யோகாசன வகுப்பு எப்போது முதல் தொடங்கும்?

गोपालः – परश्वः आरभ्य भविष्यति !
gopālaḥ – paraśvaḥ ārabhya bhaviṣyati |
கோபால் – நாளை மறுநாளிலிருந்து தொடங்கும்.

माला – परश्वः मम अवकाशः न भविष्यति ! प्रपरश्वः आरभ्य अहमपि योगासनकक्ष्याम् (3) आगमिष्यामि !
mālā – paraśvaḥ mama avakāśaḥ na bhaviṣyati | praparaśvaḥ ārabhya ahamapi yogāsanakakṣyām āgamiṣyāmi |
மாலா – நாளை மறுநாள் எனக்கு நேரம் இருக்காது. நாளை மறுநாளுக்கு அடுத்த நாள் முதல் நானும் யோகாசன வகுப்பிற்கு வருவேன்.

गोपालः – भगिनि ! मातुलस्य (4) पत्रम् आगतं वा ?
gopālaḥ – bhagini | mātulasya patram āgataṁ vā ?
கோபால் – சகோதரி ! மாமாவின் கடிதம் வந்ததா?

माला – नैव भोः ! अहं परह्यः आरभ्य तस्य प्रतीक्षां कृतवती ! परन्तु न आगतम् एव !
mālā – naiva bhoḥ | ahaṁ parahyaḥ ārabhya tasya pratīkṣāṁ kṛtavatī | parantu na āgatam eva |
மாலா – இல்லை ! நான் நேற்று முன்தினம் முதல் கடிதத்தை எதிர்நோக்கினேன். ஆனால் வரவில்லை.

एतस्मिन् सम्भाषणे 1,2,3,4 अत्र रमेशस्य, सङ्गीतकक्ष्या, सङ्गीतकक्ष्याम् , पितृव्यस्य – इति परिवर्तनं कृत्वा सम्भाषणं पुनः लिखतु !
etasmim sambhāṣaṇe 1 2 3 4 atra rameśasya saṅgītakakṣyā saṅgītakakṣyām pitṛvyasya iti parivartanaṁ kṛtvā sambhāṣaṇaṁ punaḥ likhatu |
இந்த உரையாடலில் 1, 2, 3, 4 ஆகிய இடங்களில் ரமேஷினுடைய , பாட்டு வகுப்பு , பாட்டு வகுப்பிற்கு , சித்தப்பாவின் – என்று மாற்றி அமைத்து உரையாடலை மீண்டும் எழுதவும்.

माला – ————————————————- !
गोपालः – ———————————————–!
माला – ————————————————-!
गोपालः – ————————————————-!
माला – —————————————————- !
गोपालः – ————————————————– !

இனி एक वारम् (eka vāram) ஒரு முறை , प्रथमवारम् (prathamavāram) முதல் முறை , द्विवारम् (dvivāram) இருமுறை , त्रिवारम् (trivāram) மூன்று முறை,
वारं वारम् (vāraṁ vāram)திரும்பத் திரும்ப (பலமுறை) ஆகியவற்றின் உபயோகத்தைப் பற்றி அறிந்து கொள்வோம். இவை அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தைகள். எனவே இவற்றை நினைவு வைத்துக்கொண்டு பேச்சு வழக்கில் உபயோகிக்கவும்.

கீழேயுள்ள உரையாடலை கவனிப்போமா ?

रविः – मित्र। अहं पाठं पठितवान् , किन्तु स्मरणं न भवति।
raviḥ – mitra | ahaṁ pāṭhaṁ paṭhitavān kintu smaraṇaṁ na bhavati |
ரவி – நண்ப ! நான் பாடம் படித்தேன். ஆனால் மனப்பாடம் ஆகவில்லை.

कार्तिकेयः – भवान् कतिवारं पठितवान् ?
kārtikeyaḥ – bhavān kativāraṁ paṭhitavān ?
கார்திகேயன் – நீங்கள் எத்தனை முறை படித்தீர்கள் ?

रविः – एकवारं पठितवान्।
raviḥ – ekavāraṁ paṭhitavān |
ரவி – ஒருமுறை படித்தேன்.

कार्तिकेयः – मित्र। एकवारं न पर्याप्तम्। अद्य आरभ्य भवान् द्विवारं त्रिवारं वा पठतु।
kārtikeyaḥ – mitra | ekavāraṁ na paryāptam | adya ārabhya bhavān dvivāraṁ trivāraṁ vā paṭhatu |
கார்த்திகேயன் – நண்ப ! ஒருமுறை படித்தால் போதாது. இன்று முதல் நீங்கள் இருமுறை அல்லது மூன்றுமுறை படிக்கவும்.

सन्तोषः – ( प्रविश्य ) हरिः ओम्। कार्तिकेयः अस्ति किम् ?
santoṣaḥ – (praviśya) hariḥ om | kārtikeyaḥ asti kim ?
சந்தோஷ் – (வீட்டில் நுழைந்து) வணக்கம் . கார்த்திகேயன் இருக்கிறாரா ?

कार्तिकेयः – अहो। सन्तोषः। स्वागतम्।
kārtikeyaḥ – aho| santoṣaḥ | svāgatam |
கார்த்திகேயன் – வணக்கம் சந்தோஷ் . வருக.

सन्तोषः – किं भोः। प्रातःकालात् आरभ्य बहुवारं भवते दूरभाषाम् अकरवं किन्तु कोऽपि न स्वीकरोति।
santoṣaḥ – kiṁ bhoḥ | prātaḥkālāt ārabhya bahuvāraṁ bhavate dūrabhāṣām akaravaṁ kintu ko’pi na svīkaroti |
சந்தோஷ் – காலை முதல் பலமுறை உங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன், ஆனால் ஒருவரும் பேசவில்லை.

कार्तिकेयः – ह्यः आरभ्य एव दूरभाषा सम्यक् नास्ति। पञ्चवारं षड्वारं वा दूरभाषाकेन्द्राय सूचनां दत्तवान् अस्मि।
kārtikeyaḥ – hyaḥ ārabhya eva dūrabhāṣā samyak nāsti | pañcavāraṁ ṣaḍvāraṁ vā dūrabhāṣākendrāya sūcanāṁ dattavān asmi |
கார்த்திகேயன் – நேற்று முதல் தொலைபேசி வேலை செய்யவில்லை. நான்கு அல்லது ஐந்து முறை தொலைபேசி நிலையத்திற்கு புகார் செய்துள்ளேன்.

रविः – अस्तु अहं गच्छामि। श्वः आरभ्य परीक्षा भविष्यति।
raviḥ – astu ahaṁ gacchāmi | śvaḥ ārabhya parīkṣā bhaviṣyati |
ரவி – சரி , நான் செல்கிறேன். நாளை முதல் தேர்வு தொடங்கும்.

कार्तिकेयः – चायं स्वीकरोतु भोः। भ्वान् प्रथमवारं मम गृहम् आगतवान् अस्ति।
kārtikeyaḥ – cāyaṁ svīkarotu bhoḥ | bhvān prathamavāraṁ mama gṛham āgatavān asti |
கார்த்திகேயன் – தேநீர் அருந்துங்கள் . நீங்கள் முதல்முறையாக என்னுடைய வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள்.

रविः – मास्तु भोः। सप्ताहे एकवारं मङ्गलवासरे व्रतम् आचरामि। अतः इदानीं मन्दिरं गच्छामि।
raviḥ – māstu bhoḥ | saptāhe ekavāraṁ maṅgalavāsare vratam ācarāmi | ataḥ idānīṁ mandiraṁ gacchāmi |
ரவி – வேண்டாம் . வாரத்தில் ஒருமுறை செவ்வாய்கிழமையில் நோன்பு அனுசரிக்கிறேன். அதனால் இப்போது கோவிலுக்குச் செல்கிறேன்.

कार्तिकेयः -अस्तु धन्यवादः रवे। पुनः मिलामः।
kārtikeyaḥ -astu dhanyavādaḥ rave | punaḥ milāmaḥ |
கார்த்திகேயன் – சரி. நன்றி ரவி. மீண்டும் சந்திப்போம்.

अभ्यासः (abhyāsaḥ) பயிற்சி
एतेषु उचितशभ्देन रिक्तस्थानानि पूरयन्तु।
eteṣu ucitaśabhdena riktasthānāni pūrayantu |
சரியான வார்த்தைகளை உபயோகித்து கோடிட்ட இடங்களை நிரப்பவும்.

(एकवारम् , बहुवारम् , कदा आरभ्य , एकवारम् , वारं वारम् , अद्य आरभ्य )
( ekavāram , bahuvāram , kadā ārabhya , ekavāram , vāraṁ vāram , adya ārabhya )
(ஒருமுறை, பலமுறை , எப்போது முதல் , ஒருமுறை, பலமுறை (திரும்பத் திரும்ப) , இன்று முதல்)
उदा – दीपावली वर्षे एकवारं भवति।
udā – dīpāvalī varṣe ekavāraṁ bhavati |
உதா – தீபாவளி வருடத்தில் ஒருமுறை வருகிறது.

१. गुरुः छात्रान् ———— पाठयति।
guruḥ chātrān ———— pāṭhayati |
குரு மாணவர்களுக்கு ———– கற்பிக்கிறார்.

२ भवान् ——— पठिष्यति।
bhavān ——— paṭhiṣyati |
நீங்கள் ———- படிக்கிறீர்கள்.

३ वर्षे ——- वयं नवरात्रोत्सवम् आचरामः।
varṣe ——- vayaṁ navarātrotsavam ācarāmaḥ |
வருடத்தில் ———– நாம் நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.

४. शिशुः दिने ——– दुग्धं पिबति।
śiśuḥ dine ——– dugdhaṁ pibati |
குழந்தை ஒருநாளில் ————– பால் குடிக்கிறது.

५ अहम् ——- सत्यं वदामि।
aham ——- satyaṁ vadāmi |
நான் ———– உண்மையைச் சொல்கிறேன்.

இன்று கற்றுக்கொண்ட புதிய வார்த்தைகளை வீட்டிலும் மற்றும் நண்பர்களுடன் பேசும்போதும் உபயோகிக்கவும் .

Series Navigation<< நியூ ஜெர்ஸி சமஸ்கிருதம் கேம்ப் சிறுவ..சிறுமியருக்கு<< இல்லாத ஒன்றுக்கு…<< பச்சோந்தி வாழ்க்கை<< வலிகளின் வரைவிலக்கணமானவள்…<< நீரைப்போல நாமும் இருந்தால்<< மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிபாட கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு வாய்ப்பு.<< வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில்<< மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா 2011<< வாலி வதம் – சில கேள்விகள்.<< முணுமுணுப்பு .. கயிலை மு.வேடியப்பனின் சிறுகதைத்தொகுப்பு… எனது பார்வையில்.<< துரோணா – கவிதைகள்<< புதிய ஏற்பாடு<< பிரபஞ்சத்தின் இயக்கம்<< குறிப்புகள்<< நேற்றையும் நாளையும்<< பொற்றாமரைக்குழந்தை<< ஒரு கைப்பிடி இரவு!<< பிந்திய செய்திகள்.<< காற்று உடைக்கும் விசும்பல் மூச்சு..<< புலன்<< செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்<< ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -8<< ஜனநாயகமும் இஸ்லாமும் – ஒரு ஒப்பீடு பகுதி – மூன்று (3)<< மீண்டும் முளைவிடக் கூடிய யுத்தம்<< பெண்ணியம் பேணிய தமிழ் சான்றோர்களில் – பாரதி<< (67) – நினைவுகளின் சுவட்டில்<< கே.பாலசந்தர் ::::: தாதா சாகிப் பால்கே விருது<< அமெரிக்க ஆசிய, மத்திய கிழக்கு ஆசிய கொள்கைகள் குறித்து – இந்திய நோக்கில்<< ஹெச்.ஜி.ரசூலின் புதிய நூல் தலித் முஸ்லிம் பின்காலனிய உரையாடல்<< விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தேழு<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -9<< நிஜத்தின் நிறங்கள்..!<< இருப்பினைப் பருகும் மொழி<< ரகசிய இருப்பிடங்களின் உற்பத்தி..<< இவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்<< விக்கிப்பீடியா<< வனவாசம்<< சன்னமாய் ஒரு குரல்..<< கருவனக் குழி<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< உருண்டோடும்<< முயன்றால் வெல்லலாம்..!!!<< ராஜத்தின் மனோரதம்.கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) *பிஸ்மில்லா ! (கவிதை -33) >>

This entry is part 1 of 47 in the series 20110430_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்