33 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 33

ரேவதி மணியன்


சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 33

இந்த வாரம் तः …. पर्यन्तम् அதாவது இருந்து ….வரை என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

तः என்பதைப் பற்றி ஏற்கனவே सप्त ‘क’काराः வில் படித்திருக்கிறோம். சற்று நினைவுபடுத்திக்கொள்வோமா?

उदा 1 – एतत् लोकयानं कुतः आगतम् ?

एतत् लोकयानं मैसूरुतः आगतम् !

உதா 1 – இந்த பேருந்து எங்கிருந்து வந்துள்ளது ?

இந்தப் பேருந்து மைசூரிலிருந்து வந்துள்ளது.

उदा 2. – रामः बेङ्गलूरुतः शृङ्गेरी गतवान् !
ராமன் பெங்களூரிலிருந்து சிருங்கேரி சென்றான்.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆரம்பித்து ஒரு குறிப்பிட்ட காலம் வரை அதாவது காலம், எல்லை , மற்றும் அளவு பற்றிக் குறிப்பிடும்போது तः …. पर्यन्तम् (taḥ… paryantam) உபயோகப் படுத்த வேண்டும்.

उदा – 1. १ : ०० तः २ : ०० पर्यन्तं मम विरामः। – कालः
1 : 00 taḥ 2 : 00 paryantaṁ mama virāmaḥ | – kālaḥ
1 : 00 மணி முதல் 2 :00 மணிவரை எனக்கு ஓய்வு நேரம் – காலம்
2. कन्याकुमारीतः हिमालयपर्यन्तं भारतम् ! – विस्तारः
kanyākumārītaḥ himālayaparyantaṁ bhāratam | – vistāraḥ
கன்யாகுமரிமுதல் இமாலயம் வரை பாரதம் உள்ளது – எல்லை

अभ्यासः 1 (abhyāsaḥ 1)

अत्र नारायणस्य दिनचर्या लिखिता अस्ति ! तां दृष्ट्वा वाक्यानि लिखतु !
கீழே நாராயணனுடைய தினசரி வேலைகள் எழுதப்பட்டு இருக்கிறது. அவைகளைப் பார்த்து வாக்கியங்களை அமைக்கவும்.

६ : ०० – ७ : ०० योगासनम्
6 : 00 – 7 : 00 yogāsanam (யோகாசனம்)

७ :१५ – ८ : १५ गृहपाठः
7 : 15 – 8 : 15 gṛhapāṭhaḥ (வீட்டுப்பாடம்)

१० : ०० – ५ :०० विद्यालयः
10 : 00 – 5 : 00 vidyālayaḥ (பள்ளி)

५ : ०० – ६ : ०० क्रीडा
5 : 00 – 6 : 00 krīḍā (விளையாட்டு)

६ : ३० – ७ : ३० अध्ययनम्
6 : 30 – 7 : 30 adhyayanam (படிப்பு)

१० : ०० – ५ : ०० निद्रा
10 : 00 – 5 : 00 nidrā (தூக்கம்)

1. नारायणः ६ : ०० तः ७ : ०० पर्यन्तं योगासनं करोति !
nārāyaṇaḥ 6 : 00 taḥ 7 : 00 paryantaṁ yogasanaṁ karoti |
நாராயணன் 6 : 00 லிருந்து 7 : 00 வரை யோகாசனம் செய்கிறான்.

2. नारायणः ——- ——– ———- ———– गृहपाठं लिखति !
nārāyaṇaḥ ——— ——– ——– ——— gṛhapāṭhaṁ likhati |
நாராயணன் ——– ——- ——— ——— வீட்டுப்பாடம் எழுதுகிறான்.

3. ———- ———— ———- ———— ———- विद्यालये पठति !
———- ———– ———– ———– ———– vidyālaye paṭhati !
——– ———– ———– ———- ——— பள்ளியில் படிக்கிறான்.

4. ———– ——– ———- ———- ———– क्रीडति !
——— ———- ——— ——— ———- krīḍati !
——— ———- ——— ———- ——– விளையாடுகிறான்.

5. ———- ———– ——— ———- ——— अध्ययनं करोति !
———- ——– ———- ———- ——— adhyananaṁ karoti !
———- ———- ——— ——– ——— படிக்கிறான்.

6. ——— ——— ——— ——— ———– निद्रां करोति !
——— ——— ———- ——– ——— nidrāṁ karoti |
——— ——— ——— ———– ——— தூங்குகிறான்.

கீழேயுள்ள உரையாடலை கவனிப்போமா?

पतिः – अद्य प्रातः कालतः वृष्टिः। रात्रिपर्यन्तम् अपि एवम् एव इति भाति।
adya prātaḥ kālataḥ vṛṣṭiḥ | rātriparyantam api evam eva iti bhāti|
கணவன் – இன்று அதிகாலையிலிருந்து மழை. இரவுவரை கூட இப்படித்தான் இருக்கும் போல் தெரிகிறது.

पत्नि – आम्। मद्याह्ने गोपालः आगतवान् आसीत्।
patni – ām | madyāhne gopālaḥ āgatavān āsīt |
மனைவி – ஆம் ! மதியம் கோபாலன் வந்து இருந்தார்.
पतिः – किम् उक्तवान् सः ?
patiḥ – kim uktavān saḥ
கணவன் – அவன் என்ன சொன்னான் ?

पत्नी – ’सायं षड्वादननन्तरम् आगमिष्यामि ’ इति उक्त्वा गतवान्। सः द्विवादने भवतः कार्यालयं प्रति दूरवाणीं कृतवान् आसीत्।
patnī – sāyaṁ ṣaḍvādananantaram āgamiṣyāmi iti uktvā gatavān | saḥ dvivādane bhavataḥ kāryālayaṁ prati dūravāṇīṁ kṛtavān āsīt |
மனைவி – ’ மாலை ஆறு மணிக்குப்பிறகு வருகிறேன்’ என்று கூறிவிட்டுச் சென்றார். அவர் இரண்டு மணிக்கு உங்களுடைய அலுவலகத்திற்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகக் கூறினார்.

पतिः – सार्धेकवादनतः सार्धद्विवादनपर्यन्तम् अस्माकं भोजनविरामः।
patiḥ – sārdhekavādanataḥ sārdhadvivādanaparyantam asmākaṁ bhojanavirāmaḥ |
கணவன் – ஒன்றரை மணிமுதல் இரண்டரை மணிவரை எங்களுக்கு சாப்பாட்டு நேரம்.

पत्नी – पादोनचतुर्वादने भवान् कुत्र गतवान् आसीत् ?
patnī – pādonacaturvādane bhavān kutra gatavān āsīt ?
மனைவி – ஐந்து மணிக்கு நீங்கள் எங்கே போயிருந்தீர்கள் ?

पतिः – सार्धत्रिवादनतः चतुर्वादनपर्यन्तम् अहम् अधिकारिणः प्रकोष्ठे आसम्। किमर्थं प्रुष्टवती भवती ?
patiḥ – sārdhatrivādanataḥ caturvādanaparyantam aham adhikāriṇaḥ prakoṣṭhe āsam | kimarthaṁ pruṣṭavatī bhavatī ?
கணவன் – மூன்றரை மணியிலிருந்து நான்கு மணிவரை நான் மேலதிகாரியின் அறையில் இருந்தேன். எதற்காக கேட்டாய் ?

पत्नी – गोपालः उक्तवान् – ‘पादोनचतुर्वादने अपि दूरवाणिं कृतवान् आसम् ‘ इति। सः एकं शीतकं क्रेतुम् इच्छाति इति भाति।
patnī – gopālaḥ uktavān – pādonacaturvādane api dūravāṇiṁ kṛtavān āsam iti | saḥ ekaṁ śītakaṁ kretum icchati iti bhāti |
மனைவி – கோபாலன் சொன்னார் , ’’ ஐந்து மணிக்குக்கூட தொலைபேசியில் கூப்பிட்டிருந்தேன் ‘ என்று. அவன் ஒரு குளிர்சாதனப்பெட்டி வாங்க விரும்புகிறார் என்று எண்ணுகிறேன்.

पतिः – तर्हि सः ऋणरूपेण धनम् इच्छति इति भाति। कियत् धनम् आवश्यकम् इति किमपि उक्तवान् वा सः ?
patiḥ – tarhi saḥ ṛṇarūpeṇa dhanam icchati iti bhāti | kiyat dhanam āvaśyakam iti kimapi uktavān vā saḥ ?
கணவன் – அப்படியானால் அவர் கடனாக பணத்தைப் பெற விரும்பிகிறார் என்று நினைக்கிறேன். எத்தனை பணம் தேவை என்று அவர் கூறினாரா ?

पत्नी – न। ‘सायं मेलिष्यमि ‘ इति उक्रवान् सः। ‘अस्तु ‘इति अहम् उक्तवती।
patnī – na| ‘sāyaṁ meliṣyami’ iti ukravān saḥ | ‘astu’ iti aham uktavatī|
மனைவி – இல்லை . ‘மாலையில் சந்திப்பேன் ‘ என்று கூறினார். ‘சரி’ என்று நான் கூறினேன்.

एतां विनोदकथां पठन्तु :- (etāṁ vinodakathāṁ paṭhantu )
இந்த சிறுகதையை படிக்கவும்.

कश्चन ग्रामीणः नगरदर्शनार्थं महानगरं गतवान्। यदा बुभुक्षा आसीत् तदा सः एकं भोजनालयं गत्वा पृष्टवान् – ”अत्र भोजनस्य अल्पाहारस्य च समयः कः ?” इति।
तदा भोजनालयस्वामी उक्तवान् – ” प्रातः सप्तवादनतः एकादशवादनपर्यन्तम् अल्पाहारः। मध्याह्ने द्वादशवादनतः त्रिवादनपर्यन्तं भोजनम् , सायं पञ्चवादनतः रात्रौ दशवादनपर्यन्तं
रात्रिभोजनम् “ इति।
एतस्य श्रवणानन्तरं सः ग्रामीणः पृष्टवान् – ” महाशय। यदि एतावान् कालः अल्पाहारार्थं मध्याह्ने भोजनार्थं रात्रिभोजनार्थं च भवति तर्हि मम नगरदर्शनं कदा भविष्यति “ इति।

kaścana grāmīṇaḥ nagaradarśanārthaṁ mahānagaraṁ gatavān | yadā bubhukṣā āsīt tadā saḥ ekaṁ bhojanālayaṁ gatvā pṛṣṭavān – atra bhojanasya alpāhārasya ca samayaḥ kaḥ iti |

tadā bhojanālayasvāmī uktavān – prātaḥ saptavādanataḥ ekādaśavādanaparyantam alpāhāraḥ | madhyāhne dvādaśavādanataḥ trivādanaparyantaṁ bhojanam sāyaṁ pañcavādanataḥ rātrau daśavādanaparyantaṁ rātribhojanam iti |

etasya śravaṇānantaraṁ saḥ grāmīṇaḥ pṛṣṭavān -mahāśaya | yadi etāvān kālaḥ alpāhārārthaṁ madhyāhne bhojanārthaṁ rātribhojanārthaṁ ca bhavati tarhi mama nagaradarśanaṁ kadā bhaviṣyati iti|

ஒரு கிராமத்துக்காரர் நகரத்தைப் பார்ப்பதாக பெரிய நகரத்திற்குச் சென்றார். எப்போது பசி எடுத்ததோ அப்போது உணவு விடுதிக்குச் சென்று ,
” இங்கு சாப்பாடு மற்றும் சிற்றுண்டி எந்த சமயத்தில் கிடைக்கும் ? ” என்று கேட்டார்.

அப்போது உணவுவிடுதியாளர் , “ காலையில் ஏழுமணியிலிருந்து பதினோரு மணிவரை சிற்றுண்டி கிடைக்கும். மதியம் பனிரெண்டு மணி முதல் மூன்று மணி வரை மதிய உணவு , மாலை ஐந்து மணியிலிருந்து இரவு பத்து மணிவரை இரவுச் சாப்பாடு “ என்று கூறினார்.

அவருடைய பேச்சைக் கேட்டபின் அந்த கிராமத்துக்காரர் ,” மதிப்பிற்குறியவரே ! இப்படி எல்லா நேரமும் சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் இரவு உணவு இருக்கும் என்றால் நகரத்தை நான் எப்போது சுற்றிப் பார்ப்பேன் ? “ என்று கேட்டார்.

अभ्यासः 2 (abhyāsaḥ 2)
अत्र प्रधानमन्त्रिणः कार्यक्रमस्य विवरणम् अस्ति। तत् दृष्ट्वा सः कदा कुत्र तिष्ठति इति लिखन्तु !
atra pradhānamantriṇaḥ kāryakramasya vivaraṇam asti | tat dṛṣṭvā saḥ kadā kutra tiṣṭhati iti likhantu !

இங்கு முதலமைச்சரின் காரியத்திட்டம் உள்ளது. அதைப் பார்த்து அவர் எப்போது , எங்கே இருக்கிறார் என்று எழுதுங்கள்.

जनवरी १(1) ७ (7) मुम्बयी (mumbayī )
janavarī
८ ( 8) १३ (13) चेन्नै (cennai)
१४ (15) १७ (17) कोल्कत्ता (kolkattā)
१८ (18) २० (20) देहली (dehalī)

उदा –
1. जनवरी १ तः ७ पर्यन्तं प्राधानमन्त्री मुम्बयीनगरे तिष्ठति।
janavarī 1 taḥ 7 paryantaṁ prādhānamantrī mumbayīnagare tiṣṭhati |
ஜனவரி 1 முதல் 7 வரை முதலமைச்சர் மும்பையில் இருக்கிறார்.

2. —————————————————————– !

3. ——————————————————————- !

4. —————————————————————– !

5. —————————————————————— !

Series Navigation<< ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -7<< புத்தகம் பேசுது‍ மாத இதழ்<< நியூஜெர்ஸி சிறுவ சிறுமியர்களுக்கு சமஸ்கிருத கேம்ப் பாணினி<< தாகூர் இலக்கிய விருது பெறும் எஸ் ராமகிருஷ்ணன்<< விஸ்வசேது இலக்கிய பாலம் வெளியிட இருக்கும் நூல்களின் விவரங்கள்<< மலர்மன்னன் எதிர்வினைக்கு நன்றியுடன்<< சூர்ப்பனகை என்றும் தவறானவள் தானா ?<< மதுரை அருகே மூத்த குடிமக்கள் நல்வாழ்வு மையம்; சோக்கோ அறக்கட்டளை துவங்கியது<< 57ஆவது சிறப்பு பட்டிமன்றம்<< திருவள்ளுவர் கல்வி அறக்கட்டளை வேண்டுகோள்<< போதுமானது<< சுழற்புதிர்<< 4 குறுங்கவிதைகள்..<< விருட்சம்<< தமிழ்ப் புதினங்களில் சுற்றுச் சூழல் பதிவுகள் – சில அறிமுகக் குறிப்புகள்<< ‘இவர்களது எழுத்துமுறை’ – 35 எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ)<< டைரியின் கடைசிப்பக்கம்<< விஸ்வரூபம் – அத்தியாயம் எழுபத்தாறு 76<< மகாகவி பாரதி விரும்பிய பாரதம்<< ஜனநாயகமும் இஸ்லாமும்-ஒரு ஒப்பீடு பகுதி இரண்டு (2)<< அந்த வார்த்தை ……….<< பகடை<< மழை விரும்பும் மழலை<< விபத்துநேர தீர்மாணங்கள்!<< காதல்<< மிருக தேவதை<< பாதிக்கப்பட்டவன்!<< கதைக்கும் சுவர்ப்பூச்சுகள்<< 2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1 (ஜூலை 16, 2007)நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -8 >>

This entry is part 1 of 33 in the series 20110424_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்