சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 10

ராமச்சந்திர கோபால்


தற்போது ஒரு உரையாடலை செய்வோம். ஒருவர் ஒரு ஹோட்டலுக்குப் போகிறார்.

वितारकः விதாரகஹ என்றால் விற்பவர்
ग्राहकः கிராஹகஹ என்றால் வாங்குபவர்
भो: – போஹோ என்றால் ஹலோ அல்லது பிளீஸ்

आवश्यकम्- ஆவஷ்யகம் என்றால் அவசியம்

मास्तु மாஸ்து என்றால் வேண்டாம்.

पर्याप्तम्- பர்யாப்தம் என்றால் போதும்

पुनः புனஹ என்றால் மீண்டும்

वितारकः – भो: , किम् आवश्यकम्
ग्राहकः – काफी आवश्यकम्
वितारकः जलम् आवश्यकम् किम्
ग्राहकः – मास्तु काफी आवश्यकम्
वितारकः – स्वीकरोतु
ग्राहकः – किञ्चित् शर्करा…
वितारकः – स्वीकरोतु पुनः आवश्यकम् वा?
ग्राहकः – पर्याप्तम् पुनः मास्तु

இதனை இருவர் பேசி உரையாடிப்பாருங்கள். இவற்றை வாய்விட்டு சொல்லிப் பழகினால்தான் பேச வரும். சமஸ்கிருத வாக்கியங்களை நீங்கள் கேட்கவேண்டும். நீங்கள் பேசும்போது அது உங்களுக்குக் கேட்கவேண்டும். இரண்டு மூன்று முறை இதனை சொல்லிப் பேசி பழகிப்பாருங்கள்.

இதில் ஒரு வார்த்தை स्वीकरोतु என்று வந்தது. ஸ்வீகரோது. எடுத்துகொள்ளுங்கள் என்ற பொருளில்.
எந்த ஒரு வினைச்சொல்லும் து என்று மேற்கண்டவாறு முடியும்போது வேண்டுகோளாக ஆகும்.

உதாரணமாக
गच्छतु – படியுங்கள், படிக்கட்டும்
लिखतु – எழுதுங்கள், எழுதட்டும்
आगच्छतु – ஆகச்சது, வாருங்கள், வரட்டும்
पठतु – படது – படியுங்கள், படிக்கட்டும்
क्रीडतु -க்ரிடது -விளையாடுங்கள், விளையாடட்டும்
पिबतु – பிபது – குடியுங்கள்
खादतु – காதது – சாப்பிடுங்கள்
पश्यतु – பஷ்யது – பாருங்கள்
हसतु – ஹஸது – சிரியுங்கள்
नयतु – நயது – கொண்டுசெல்லுங்கள்

படிக்கட்டும் என்பது போல பொருள் வருவதால்,

सः गच्छतु – அவர் செல்லட்டும் என்ற பொருளிலும் உபயோகிக்கலாம்.

பொதுவாக இங்கே கற்றுக்கொள்ள நாம்
भवान्, भवती ஆகிய சொற்களை இணைத்து மேற்கண்ட வாக்கியங்களை பொருள் உணர்ந்து சொல்லுங்கள்

एकम्
द्वे
त्रीणि
चव्वारि
पञ्च
षड
सप्त
अष्ट
नव
दश

மேற்கண்ட சொற்களை எழுத்துக்கூட்டி படியுங்கள். அடுத்த வாரத்தில் அதிலிருந்து தொடங்குவோம்

Series Navigation

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ராமச்சந்திர கோபால்

ராமச்சந்திர கோபால்