21 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 21

ரேவதி மணியன்


சென்ற வாரம் படித்த ’இரண்டாம் வேற்றுமை’(द्विथीया विभक्तिः -Accusative case) விதிகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா ?

செய்வினை வாக்கியத்தில் வினைச்சொல்லுடன் “என்ன? (What?) எதை?/ யாரை? (Whom?) என்ற வினாச் சொற்களுக்குக் கிடைக்கும் பதிலே “செயப்படுபொருள்” ( Object ) ஆகும். செய்வினை வாக்கியத்தில் (Active voice) செயப்படுபொருள் எப்போதும் இரண்டாம் வேற்றுமையில் அமையும். கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தை உரத்துப் படிக்கவும்.

बालकः फलं खादति ! (bālakaḥ phalaṁ khādati)
சிறுவன் பழம் சாப்பிடுகிறான். (The boy eats the fruit.)

बालकः किं खादति? (bālakaḥ kiṁ likhati ?)
சிறுவன் என்ன/எதை சாப்பிடுகிறான் ? (What does the boy eat?)

फलं – (phalaṁ)
பழம் (fruit)

கீழேயுள்ள உரையாடலை படித்து அடைப்புக்குறியில்(brackets) கொடுக்கப்பட்டுள்ள சொற்களின் இரண்டாம் வேற்றுமையை கோடிட்ட இடங்களில் பூர்த்தி செய்யவும்.

पिता – पुत्र ! (पाठः) ————- पठतु !
pitā – putra ! (pāṭhaḥ) ———–paṭhatu !
அப்பா – மகனே ! (பாடம்) ——படி !

पुत्रः – अहं (पाठः) ————-पठितुं न शक्नोमि !
putraḥ – ahaṁ (pāṭhaḥ) ——paṭhituṁ na śaknomi !
மகன் – நான் (பாடம்) —— படிக்க முடியாது.

पिता – किमर्थम् ?
pitā – kimartham ?
அப்பா – ஏன்?

पुत्रः – अहम् (विद्यालयः) ————– न गतवान् !
putraḥ – ahaṁ (vidyālayaḥ) ——–na gatavān !

पिता – भवतु , अहं (भवान्) ————पाठयामि !
pitā – bhavatu , ahaṁ (bhavān) ——– pāṭhayāmi !
அப்பா – சரி , நான் (நீர்/நீங்கள்) ——- கற்பிக்கிறேன்.

पुत्रः – सत्यं, भवान् (अहं) ———–पाठायति ?
putraḥ – satyaṁ , bhavān (ahaṁ) ——— pāṭhayati ?
மகன் – உண்மையா , நீங்கள் (நான்) ——- கற்பிக்கிறீர்களா?

पिता – आम् , पाठयामि !
pitā – ām pāṭhayāmi !
அப்பா – ஆம் , கற்பிக்கிறேன்.

पुत्री – तात, (अहम्) ———-अपि पाठयतु !
putrī – tāta , (aham) ——— api pāṭhayatu !
மகள் – அப்பா, (நான்) ——-கூட கற்பியுங்கள்.

पिता – अस्तु , (भवती) ———-अपि पाठयामि !
pitā – astu , (bhavatī) ——- api pāṭhayāmi !
அப்பா – சரி ,(நீர்) —— கூட கற்பிக்கிறேன்..

पुत्रः – कदा पाठयति ?
putraḥ – kadā pāṭhayati ?
மகன் – எப்போது கற்பிக்கிறீர்கள் ?

पिता – इदानीं (भवान्) ———पाठयामि !
pitā – idānīṁ (bhavān) ——– pāṭhayāmi !
அப்பா – இப்பொழுது (நீர்) ——— கற்பிக்கிறேன்.

पुत्रः – (अनुजा) ————कदा पाठयाति?
putraḥ – (anujā )——— kadā pāṭhayati ?
மகன் – (சகோதரி) ——– எப்போது கற்பிக்கிறீர்கள்?

पिता – (सा) सायङ्काले पाठयामि !
वदतु , (कः पाठः) ————- पाठयामि ?
pitā – (sā) ——- sāyaṅkāle pāṭhayāmi !
vadatu (kaḥ pāṭhaḥ) ——paṭhayāmi ?

அப்பா – (அவள்) ——– மாலையில் கற்பிக்கிறேன்.
சொல், (எந்த பாடம்) ——- கற்பிக்க வேண்டும் ?

पुत्रः – (एषः पाठः) ————-पाठयतु !
putraḥ – (eṣaḥ pāṭhaḥ) ——— pāṭhayatu !
மகன் – (இந்த பாடம்) ——– கற்பியுங்கள்.

पिता – (सर्वे पाठाः) ———– पाठयामि !
pitā – (sarve pāṭhāḥ) ——– pāṭhayāmi !
அப்பா – (எல்லா பாடங்கள்) ——— கற்பிக்கிறேன்.

விடைகளைச் சரி பார்த்துக் கொள்ளவும்.

पाठः – पाठम्
विद्याकयः – विद्यालयम्
भवान् – भवन्तम्
अहम् – माम्
भवती – भवतीम्
अनुजा – अनुजाम्
सा – ताम्
कः पाठः – कम् पाठम्
एषः पाठः – एतम् पाठम्
सर्वे पाठाः – सर्वान् पाठान्

அடுத்த வாரம் முன்னால், பின்னால், மேலே , கீழே , வலப்பக்கம் , இடப்பக்கம் போன்றவைகளை சமஸ்கிருதத்தில் எப்படிக் சொல்லவேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Series Navigation<< ராகுல் காந்திக்கு சில கேள்விகள் – நன்நெறியும் அதிகாரம் தரும் வலிமையும்<< தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் நூல் வெளியீடு<< பணம் காய்க்கும் இளஞ்செடிகள்<< அகிலவியல் ஈர்ப்பு சக்தியைக் கண்டுபிடித்த ஆங்கில மாமேதை ஐஸக் நியூட்டன் (1642-1727)<< வரலாற்றின் சாட்சியமாய் ஈழத்திரைப்படங்கள்<< இவர்களது எழுத்துமுறை – 21 நீல.பத்மநாபன்<< பல்வலி என்பது யாதெனில்…!<< திருமதி ரேவதி சங்கரன் மிக அழகாக சமஸ்க்ருதம் சொல்லிக் கொடுக்கிறார்<< மக்கள் கலை இலக்கிய விழா<< கோநா கவிதைகள்<< சிலை பேசினால்<< மௌனம்<< முதிர் இளைஞா…<< ரசிப்பு<< தொலைவின் தூரம்<< ஆங் சான் சூ கீ<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) என்னருகில் வராதே கவிதை -26 பாகம் -4<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -3)<< பந்தயங்கள்<< எஸ்தரும் கருப்பண்ணசாமியும்<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -9<< பூவா…தலையா…<< முள்பாதை 60<< பரிமளவல்லி 25. திருத்தங்கள்<< இளவரசி டயானாவின் மரணமும் கட்டுடைக்கவியலாத நம்பிக்கைகளும்<< ஆ.மாதவனுக்கு விஷ்ணுபுரம் விருது.<< பேச மறந்த குறிப்புகள்<< தேனீர் விடுதியின் காலி இருக்கைகள்..<< மீண்டுமொரு மழைக்காலம்<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< இன்னுமொரு முறை<< சத்யானந்தன் கவிதைகள்<< மூன்றாம் எண் மதுக்கடையிலிருந்து!<< அருவி

This entry is part 1 of 35 in the series 20101219_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்