22 சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 22

ரேவதி மணியன்


சென்ற வாரம் இரண்டாம் வேற்றுமை (द्वितीया विभक्तिः ) எடுத்துக்காட்டில் बालः फलम् खादति (சிறுவன் பழம் சாப்பிடுகிறான்)என்ற வாக்கியத்தில் எதை/என்ன ? (किम्) என்ற வினாவை எழுப்பும்போது बालः किम खादति? என்று எழுதிவிட்டு Transliteration ல் (bālaḥ kiṁ khādati என்பதற்கு பதிலாக bālaḥ kiṁ likhati ?) என்று தவறாக அச்சிட்டுவிட்டேன் . மன்னிக்கவும். likhati என்றால் ’எழுதுகிறான்/எழுதுகிறாள்’ என்று பொருள்.

இனி வலப்பக்கம் , இடப்பக்கம் , முன்பக்கம் (முன்னால்) , பின்பக்கம் (பின்னால்), மேலே ,கீழே, உள்ளே மற்றும் வெளியே ஆகியவற்றை சமஸ்கிருதத்தில் எப்படிச்சொல்லவேண்டும் என்று அறிந்து கொள்வோமா?




सः केशवः ! (saḥ keśavaḥ)
அவன் கேசவன். (He is Keshav).

केशवस्य पुरतः शकटः अस्ति ! (keśavasya purataḥ śakaṭaḥ asti)
கேசவனது முன்னால் (முன்புறம்) வண்டி இருக்கிறது.
In front of Keshav there is a cart.

तस्य पृष्ठतः आपणम अस्ति ! (tasya pṛṣṭhataḥ āpaṇam asti !)
அவனது பின்னால் (பின்புறம்) கடை இருக்கிறது.
Behind him there is a shop.

तस्य दक्षिणतः देवालयः अस्ति ! (tasya dakṣiṇataḥ devālayaḥ asti !)
அவனது வலப்பக்கம் (வலப்புறம்) கோவில் இருக்கிறது.
His right side there is a temple.

तस्य वामतः वृक्षः अस्ति ! (tasya vāmataḥ vṛkṣaḥ asti !)
அவனது இடப்பக்கம் (இடப்புறம்) மரம் இருக்கிறது.
His left side there is a tree.

देवालयस्य उपरि कलशः अस्ति ! (devālayasya upari kalaśaḥ asti !)
கோவிலினது (கோவிலின்)மேலே கலசம் இருக்கிறது.
There is a kalasham at the top of the temple.

शकटस्य अधः शुनकः अस्ति ! (śakaṭakya adhaḥ śunakaḥ asti !)
வண்டியினுடைய (வண்டியின்) கீழே நாய் இருக்கிறது.
There is a dog under the cart.



पुरतः – purataḥ – முன்னால் (முன்புறம்) -in front of

पृष्ठतः – pṛṣṭhataḥ – பின்னால் (பின்புறம்) – behind

वामतः – vāmataḥ – இடப்பக்கம் (இடப்புறம்) – left side

दक्षिणतः – dakṣiṇataḥ – வலப்பக்கம் (வலப்புறம்) – right side

उपरि – upari – மேலே – top

अध: – adhaḥ – கீழே – under

மேலே உள்ள வாக்கியங்களை உரத்துப் படிக்கவும். முன்னால்,பின்னால், வலப்பக்கம்,இடப்பக்கம்,மேலே, கீழே ஆகிய சொற்களை உபயோகிக்கும்போது எழுவாய் ஆறாம் வேற்றுமையில் (Genitive Case ) இருப்பதை கவனிக்கவும்.

ஆறாம் வேற்றுமையை (Genitive Case ) சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா ?

एकवचनम् बहुवचनम्

अकारान्त: पुंलिङ्गे (राम:) रामस्य रामाणाम (rāmasya rāmāṇām)

अकारान्त: नपुंसकलिङगे (वनम्) वनस्य वनानाम् (vanasya vanānām)

आकारान्तः स्त्रीलिङ्गे (रमा) रमायाः रमाणाम् (ramāyāḥ ramāṇām)

ईकारान्तः स्त्रीलिङ्गे (नदी) नद्याः नदीनाम् (nadyā nadīnām)

‘तद् शब्दः’ पुंलिङ्गे (सः) तस्य तेषाम् (tasya teṣām)

‘तद् शब्दः’ स्त्रीलिङ्गे (सा) तस्याः तासाम (tasyāḥ tāsām)

‘तद् शब्दः’ नपुंसकलिङगे (तत्) तस्य तेषाम (tasya teṣām)

‘एतद् शब्दः’ पुंलिङ्गे (एषः) एतस्य एतेषाम् (etasya eteṣām)

‘एतद् शब्दः’ स्त्रीलिङ्गे (एषा) एतस्याः एतासाम (etasyāḥ etāsām)

‘एतद् शब्दः’ नपुंसकलिङगे (एतत्) एतस्य एतेषाम (etasya eteṣām)

‘किम् शब्दः’ पुंलिङ्गे कस्य केषाम् (kasya keṣām)

‘किम् शब्दः’ स्त्रीलिङ्गे कस्याः कासाम् (kasyāḥ kāsām)

‘किम् शब्दः’ नपुंसकलिङगे कस्य केषाम् (kasya keṣām)

‘अस्मद् शब्दः’ त्रिलिङ्गकः (अहम्) मम अस्माकम् (mama asmākam)

‘युष्मद् शब्दः’ त्रिलिङ्गकः (त्वम्) तव युष्माकम् (tava yuṣmākam)

एतत चित्रँ पश्यतु ! अनन्तरम एतानि वाक्यानि शुध्दानि अशुध्दानि वा इति लिखतु !
(etat citraṁ paśyatu| anantaram एतानि vākyāni śudhdāni aśudhdāni vā iti likhatu|)
இந்த படத்தைப் பாருங்கள். பின்பு கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்கள் சரியா அல்லது தவறா என்று எழுதவும்.

1. गृहस्य पुरतः वृक्षः अस्ति ! (gṛhasya purataḥ vṛkṣaḥ asti|)
வீட்டினது முன்புறம் மரம் இருக்கிறது.

2. गृहस्य दक्षिणतः उद्यानम् अस्ति ! (gṛhasya dakṣiṇataḥ udyānam asti |)
வீட்டினது வலப்புறம் விளையாடும் இடம் இருக்கிறது.

3. वृक्षस्य उपरि खगः अस्ति ! (vṛkṣasya upari khagaḥ asti |)
மரத்தின் மேலே பறவை இருக்கிறது.

4. गृहस्य पृष्ठतः मार्गः अस्ति ! (gṛhasya pṛṣṭhataḥ mārgaḥ asti |)
வீட்டினது பின்புறம் பாதை இருக்கிறது.

5. वृक्षस्य अधः कार्यानम् अस्ति ! (vṛkṣasya adhaḥ kāryānam asti |)
மரத்தின் கீழே கார் இருக்கிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தைப் பார்த்து வாக்கியங்களை அமைக்கவும்.

उदा – रमेशस्य पृष्ठतः भावचित्रम अस्ति ! (rameśasya pṛṣṭhataḥ bhāvacitram asti | )

உதாரணம் – ரமேஷின் (ரமேஷினது) பின்புறம் படம் (photo) இருக்கிறது.

இதேபோல் மற்ற வாக்கியங்களை அமைத்து உரத்துப் படிக்கவும்.

भावचित्रम (bhāavacitram) – படம் (photo)

अवकरिका (avakarikā) – குப்பைத்தொட்டி (dustbin)
व्यजनम (vyajanam) – மின்விசிறி (fan)

அடுத்து अन्तः ( antaḥ) உள்ளே, बहिः ( bahiḥ) வெளியே என்ற வார்த்தைகளின் உபயோகத்தைப் பற்றிப் பார்ப்போம்.


मार्जालः कुत्र अस्ति ? (mārjālaḥ kutra asti ?)
பூனை எங்கே இருக்கிறது ?

मार्जालः (गृहस्य) अन्तः अस्ति ! (mārjālaḥ (gṛhasya) antaḥ asti |)
பூனை (வீட்டின்) உள்ளே இருக்கிறது.

शुनकः कुत्र अस्ति ? (śunakaḥ kutra asti ?)
நாய் எங்கே இருக்கிறது ?

शुनकः (गृहात्) बहिः अस्ति ! (śunakaḥ (gṛhāt) bahiḥ asti)
நாய் (வீட்டிற்கு) வெளியே இருக்கிறது.

இதுபோன்ற வாக்கியங்களை அமைத்து வீட்டிலும் , நண்பர்களுடனும் பேசிப்பழகவும்.

Series Navigation<< பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)<< முள்பாதை 61 (இறுதி அத்யாயம்)<< இந்தியன்<< மகரந்தங்களில் தேனுண்ணும் வ‌ண்டுக‌ள்<< சிறிய சிறகு<< விபரீத கரணி<< இனம் இனத்தோடு…!<< மீனாள் பப்ளிஷிங் ஹவுஸ் நூற்கள் வெளியீடு<< நேர்காணல் மூன்றாம் இதழ் பற்றிய அறிவிப்பு<< அமீரகத் தமிழ் மன்றம் தனது 11-வது ஆண்டு விழா<< இலக்கிய வட்டம், ஹாங்காங் கூட்ட எண்: 30- கருத்தரங்கம்<< தேநீர் விரல்கள்<< வளையல் துண்டுகளின் காட்சி<< விட்டுச் செல்லாதீர்<< விலகாத உறவு…<< பனிப்பிரதேச பேரழகி!<< இவையெல்லாம் அழகுதான்<< தொடர்பில் இருப்போம்<< என்னில் நிறைய<< ஆழிப்பேரலை<< இரு மிருகங்கள், ஒரு சமன்புள்ளி<< ஊறுக்காய் குறிப்பு!<< உயிர் நீர்<< தமிழ்ப் பேரறிஞர் ஈழத்துப்பூராடனார் கனடாவில் மறைவு<< எங்கள் தெரு புளியமரம்!<< இவர்களது எழுத்துமுறை – 20 பாலகுமாரன்<< எதிர்காலம்<< அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 9 Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர<< விளக்கு விருது திலீப் குமாருக்கு வழங்கப் படுகிறது : நடுவர்கள் குறிப்பு<< ராகுல் காந்திக்கு திறந்த ஒரு கடிதம்<< கவனமுடன் படிக்க வேண்டிய நூல்…- விடுதலை -இஸ்லாமியப் பெண்ணியம் நூல்<< வெவ்வேறு சிறகுகள்…<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -10<< நீங்க போட்ட எட்டு<< வன்முறை 11<< கண் திறக்கும் தருணம்..<< M.ராஜா கவிதைகள்<< தமிழின் செம்மொழித் தகுதிகள்<< அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (1906 – 2005)<< கணினி மேகம் (cloud computing) பகுதி 1<< கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) வாழ்க்கையைப் பற்றி (கவிதை -38 பாகம் -4)<< கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கூடான வெள்ளைப் பூடு கவிதை -27<< தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்<< திகட்டும் இசை<< எனதாக நீயானாய்<< சமத்து<< சாதாரண ஒரு சராசரி ஈயின் கதை

This entry is part 1 of 48 in the series 20101227_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்