26 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 26

ரேவதி மணியன் இந்த வாரம் ஏற்கனவே நடந்து முடிந்த விஷயங்களை அதாவது இறந்த காலத்தில்( भूतकालः) Past Tense எப்படிச் சொல்வது என்று விரிவாகக் காண்போம். இதுவரை நிகழ்காலத்தில் (Present Tense) வினைச்சொற்களை எப்படிச்…

அறிமுகம் உயிர்நிழல், இராகவனின் ‘கலாவல்லி முதலான கதைகள்’

சு. குணேஸ்வரன் இரண்டு அறிமுகம் (1) உயிர்நிழல் 33 வது இதழ் வெளியாகியுள்ளது லஷ்மி. ந. சுசீந்திரன் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகக் கொண்டு பிரான்சிலிருந்து வெளிவரும் புகலிடச் சிற்றிதழாகிய உயிர்நிழலின் ஜனவரி 2011 இதழ் வெளியாகியுள்ளது.…

அம்மாவின் இசை

ரவிஉதயன் இரவில் செவிமடுக்கிறேன். தாழந்த குரலில் முணுமுணுக்கிற வரிகளை அதுஒரு பாடலல்ல, விதிகளுக்கு உட்பட்ட இசையுமல்ல. அது தன் நெடிய மௌனத்தை உடைக்கிற முயற்சி சுமைகளை அகற்றும் ஒரு சாதுர்யம் தற்காலிகமாய் மூச்சு விடுவதற்கான…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -3)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ ஆண் பெண் காதல் உறவு ************************************ “காமத் தாகத்தை எப்படித் தீர்த்துக் கொல்வது ? காம சக்தியே நில்லாமல்…

நினைவுகளின் சுவட்டில் – (62)

வெங்கட் சாமிநாதன் உடையாளூரை விட்டு வேலை தேடி வெளியேறி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும். இரண்டு வருடங்களில் ஏதும் உடையாளூரில் மாற்றங்கள் இல்லை. விடுமுறையில் வந்து மறுபடியும் நிலக்கோட்டை மாமாவை, பாட்டியை எல்லாம் பார்த்ததில்…

ரசிகன் கவிதைகள்

ரசிகன் என் கடவுள் என்பது… — எழுத படிக்க தெரியாத ஒரு வாய்பேச முடியாதவனின் காதல் கவிதை… பொய் பேசாத அன்பை ஊட்டும் தாயின் ஒரு கை நிலாச்சோறு… பேச ஆரம்பிக்காத செல்லம் கொஞ்ச…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு கவிதை -41 பாகம் -1)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “என் வாயில் சிதைந்த பல்லொன்று தொல்லை கொடுத்து வந்தது. பகலில் ஏனோ தொந்தரவு தரவில்லை. ஆனால் இரவின் அமைதியில், பல்…

நாஞ்சில் நாடனுக்கு வாழ்த்துக்கள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

வெங்கட் சாமிநாதன் சாகித்ய அகாடமி தமிழ் இலக்கியத்துக்கான இவ்வருட பரிசை நாஞ்சில் நாடனுக்கு வழங்கப் போவதாக செய்தி வந்துள்ளது.; நாஞ்சில் நாடனுக்கு நம் வாழ்த்துக்கள். அவர் இதற்குத் தகுதி பெற்றவர் தான். ஆனால் அப்படிக்…

சத்தமில்லா பூகம்பம்

ஷம்மி முத்துவேல் மமதையின் மடிப்புகளில் உட்சொருகிய எண்ணங்கள் முன் பின்னிழுத்தன தேக்கியது உரையாடலில் வீரியம் வீழ்ந்த வார்த்தைகளின் கணம் ௯ட்டி பகுதிகளாய் பிரித்து நிறம் சேர்த்துக் கோர்த்தது நஞ்சு தோய்த்துச் சிவப்பாய்ச் சிலவும் அமிலம்…

இந்தியாவின் தேவை சன்னமான கோவை

ரவி நடராஜன் சில ஆண்டுகள் முன்பு விடுமுறையில் இந்தியா சென்றிருந்த பொழுது, கோவை சென்றிருந்தேன். பொழுது போகாமல் சாயிபாபா காலனியில் பழைய புத்தக கடையில் குறிக்கோள் இல்லாமல் எதையோ தேடிக் கொண்டிருந்தேன். கடைக்காரரிடம், “இந்த…

இரண்டு கவிதைகள்

ராஜா விழிமூடாதிருந்தால் நெகிழ்ந்துபோய் நாயகன் நின்றிருந்தான். படியேறி வந்துகொண்டிருந்தது நாயொன்று. நெருங்கி வந்ததும்- நாயின் கண்களில் ஒரு நுண்மாறுதலை கவனித்ததில் வெளிறிவிட்டது நாயகன் முகம். விபரீதம் நிகழப் போகிறது என்ற அனுமானத்தில் விழிகளை இறுக்கி…

வாண்டு பருவமும் வயதான கிழவியும்

கொ.மா.கோ.இளங்கோ ‘சொர்க்கு தவளை நீச்சல் பேக் சார்ட் பூசணிக்காய் பல்டி சப்பை கட்டு முங்குளி பாம்பு ‘ கண்மாய் மூழ்கி குளித்ததில் பொடுசுகள் கண்டெடுத்த பெயர்கள் மூன்று மணி நேர குளியல் உள்ளம் உலகம்…

பொங்கிவரும் பெரு நிலவு – குறுநாவல்

உஷாதீபன் சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள்…

நீதியும் சமூக நீதியும்

சத்யானந்தன் சென்னையில் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி தன் மீது ஆசிரியைகளால் திருட்டுப் பட்டம் சூட்டப்பட்டுப் பின் சக மாணவிகளால் தொடர்ந்து அவமானப் படுத்தப் பட்டு தன் அப்பழுக்கற்ற நிலையை நிறுவ…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன் குறுந்தகவல் தூது.. **************************** உன் அரசவைக்கு மனப்புறாவை தூதாக்கினேன்.. கண்களால் ஏந்திக்கொள். குலவு .. அல்லது அழி.. இன்னொரு அந்தப்புரத்துக்கு தூதாக்காமல்.. —————– இறக்கைப்பயணத்தினூடே.. ******************************************** அல்லாவுதீன் பூதமாய் அடு்த்து அடுத்து…

இரவுக்காதல்

தேனு மெய்யோடு இழைந்துருளும் அவ்விருளுக்கான நிசப்தத்துடன் நடந்தேறும் காதல் களியாட்டம்… . கருங்கம்பளம் பரப்பி வெண்ணிற மலர்கள் இருப்பில் கிடத்தி முன்னிரவிற்கான தூது அனுப்பப்பட்டது நிலவுக்காதலனுக்கு… ஊடல் தேய்ந்து கூடலும் கூடல் தேய்ந்து ஊடலும்…

அலைபேசியும் ஆடை அலங்காரமும்!

சபீர் என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட “அலைபேசி” என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது. பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து…

வளரும் பயிர்…

ஸ்ரீஜா வெங்கடேஷ் மனமும் உடலும் பதறியது உஷாவுக்கு. அவள் அருமை மகன் , ஒரே மகன் திருடி விட்டானாம். சற்று முன் தான் அவள் செல்போனில் தகவல் வந்தது. வந்த தகவல் உண்மையா இல்லை…

ப மதியழகன் கவிதைகள்

ப மதியழகன் விளிம்பில் கன்று ஈனுகிறது பசு சித்திரை வெயில் உடலை வாட்டுகிறது பருவம் தப்பி பெய்கிறது மழை விளைநிலங்களெல்லாம் மனைகளாகிறது கலியுகத்தில் கடவுள் வீதியில் அனாதையாகத் திரிகிறார் வானம் போதுமா என்கிறது பூமி…

சிவன்கோவில் கவியரங்கம்

எஸ். ஷங்கரநாராயணன் (யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று தலைமையேற்று வாசித்தளித்தது.) அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய்…

பிறருக்காக வாழ்பவன்

வருணன் பெரும் ரசனைக்காரனாக தன்னைப் பறைசாற்றிக் கொண்டவன் எரிச்சலுருகிறான் தாமதமாவது பற்றி நாவிதனின் விரல்களுக்கிடையில் நர்த்தனமிடும் கத்தரியின் கிறீச்சொலியை ரசிக்காமல்… தான் பிறருக்காகவே வாழ்பவனென அவன் சொல்லிக் கொள்வதில் ஒரேயொரு உண்மையும் சிலவேறு அர்த்தங்களும்…

தமிழ்க் கணிமைக்கான சு.ரா. விருது: ஒரு கேள்வி

பா. ரெங்கதுரை மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி, தமிழ்க் கணிமையிலும் தகவல் தொழில் நுட்பத்திலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எந்த ஒரு பங்களிப்பையும் செய்ததில்லை. அமெரிக்காவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றிருந்த அவர், வருடத்தில் பாதி நாள்கள்…

‘‘வரலாற்றுப் பேரறிஞர் தி.வை.சதாசிவப் பண்டாரத்தார்’’

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail. Malar.sethu@gmail.com தமிழ்த்தாய்க்குத் தொண்டாற்றிய தலைமக்கள் பலர் தமிழுலகில் காணப்படுகின்றனர். அவர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவர்…

ராக்கெட் முன்னோடிப் பொறிநுணுக்க மேதை ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா மனிதனால் எதைச் சாதிக்க முடியாது என்று தீர்மானம் செய்வது, கடினம்! ஏனெனில் நேற்றைய தினத்தின் நமது கனவு, இன்றைய தினத்தில் நமக்கு நம்பிக்கை யூட்டி, அது…

சகுனம் பற்றி…

ஹேமா(சுவிஸ்) ************************** சந்தோஷமாய் செல்லமொழிச் சத்தம் சகுனமெனத் திட்டு. சும்மா மிரட்டித் துரத்த பாட்டி தலையில் தவறி விழ பூசை பரிகாரம். மௌனமாய் அப்பிய மூலையோடு பகலோ இரவோ ஓடி ஒட்டித் திரிந்த சுவர்…

கத்தியின்றி..ரத்தமின்றி..

T V ராதாகிருஷ்ணன் தன்னுடைய திட்டம் பூமராங்காக தன்னையேத் தாக்கும் என சுந்தரம் நினைக்கவே இல்லை. அவனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. அவனது தாயார் மதுரமும்..மனைவி உமாவும் சென்ற வாரம் வரை ஒரு…

ஆயிரம் நிலவே வா ! (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை)

ருத்ரா (கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கு ஒரு பாராட்டுக்கவிதை) ஆயிரம் பாடல்களே! ஒரு ஆயிரம் நிலவாய் வா! என்று அந்த வானத்தையே தன் ஜிப்பாப் பையில் வைத்துக்கொண்டு ஆணையிட்ட‌ வைரமுத்துக்கவிஞனே உன் பெயரை உச்சரித்த பிறகு…

விடிவெள்ளி

யெஸ்.பாலபாரதி ஆட்டோவின் பின்னிருக்கையில் சாய்ந்து, முன் சீட்டின் மீது கால்களை நீட்டி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த போது, பாக்கெட்டில் மொபைல் போன் அடித்தது. சாய்ந்தபடியே மொபைலை கையிலெடுத்து, யாரெனப் பார்த்தார் குமரேசன். ஏதோவொரு எண்.. அதுவும்…

காகிதச்செடிகள்

ராம்ப்ரசாத் அவர்களுள் யாரும் விதவைகள் இல்லை… வெகுபலர் பச்சை… ஒரு சிலர் வெளிர் மஞ்சள்… மரப்பிசின்களின் கருவறைகளில் பிறந்துவிட்டு தூசிகளுக்கு வாழ்க்கைப்பட்டவர்கள்… ஈக்களின் சாபங்களில் நிறைகிறது அவைகளின் பிச்சைப் பாத்திரங்கள்… காட்சிப்பிழைகளில் ஆயுளை எண்ணிக்கொண்டிருக்கும்…

அயலகத் தமிழ்க் கவிதைகள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழக ஆய்வரங்கு

ஹெச்.ஜி.ரசூல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் ஒருநாள் கவிதை ஆய்வரங்கம் நடைபெற்றது.27 – 01 – 2011 அன்று மொழிப்புல அவையத்தில் நிகழ்வுற்ற இந்த ஆய்வரங்கம் அண்மைக்கால அயலகத்…

கடம்

சின்னப்பயல் “செக்கா தருவீங்களா ? இல்ல கேஷா ?” அதிரடியாக ஆரம்பித்தார் அவர்.ஆனால் முகத்தில் அந்த பாவனை இல்லை.முன்னால் அமர்ந்திருந்த பெரியவரின் முகம் உணர்ச்சியற்று இருந்தது.” இல்ல நான் என்ன சொல்ல வர்றேன்னா ?’…

எது என் பட்டம் ?

கோமதி நடராஜன் விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல் சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது? வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து ஓவியமாய் மின்னும் பட்டமா? என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் , வரவில்லை அந்த பட்டம்.…

சாதிகள் உண்டடி பாப்பா

பிச்சுமணி வே நீ வளர வளர தெரியும் பாப்பாபத்தாவதில் கேட்பாங்க பாப்பா நிறத்தை வைத்து சாதியை கொள்வார் பாப்பா ரகசிய விசாரணை கொள்வார் பாப்பா சாதி பார்த்து பழகும் கூட்டம் உண்டு பாப்பா சாதி…

கரு

எஸ். ஜெயலட்சுமி டாக்டரிடம் போய் விட்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த நிர்மலாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் ஒரு புறம் களைப்பாகவும் இருந்தது. அன்று நர்சிங் ஹோமில் நல்ல கூட்டம். ஒவ்வொருவராகப் போய் விட்டு…

நட்சத்திரங்களோடு பேசாதீர்கள்…

இளங்கோ * விசும்புங்கள் விசும்புங்கள் உங்கள் விசும்பல் ஒலி பரப்ப கோரிக்கையோடு ஆண்ட்டெனாவாக முளைக்க நேரும் உங்கள் இரவில் நட்சத்திரங்களோடு பேசாதீர்கள் சிகப்பாய் மின்னுமது உங்களுக்கானதல்ல தாழப் பறக்க நேரிடும் ஒரு விமானத்துக்கான சமிக்ஞை…

இரு பிரம்மப் படிமங்கள்

கலாசுரன் * அவர்களுக்கான வானத்தின் ஓரங்களில் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொங்கவிட்டான் உள்ளிருந்து ஒளிரும் விளக்குகளை ஏற்ற அனைத்தும் நிறைவேறிற்று அவனது விருப்பப்படி சில விண்மீன்களை மாலையாகக் கோர்த்து கண்சிமிட்டிக்கொண்டிரு.. என்றான் அதுவும் அப்படியே ஆயிற்று…

இவர்களது எழுத்துமுறை – 25 அனுத்தமா

வே.சபாநாயகம். 1. எழுதுவதற்கென்று ஒரு நேரம் என்றெல்லாம் எனக்குக் கிடையாது. காகிதத்தில் பேனாவை வைத்தால், கதை (அ) சிந்தனை முற்றும்வரை எழுதிக்கொண்டே இருப்பேன். 2. எழுதியதை முழுமையாகப் படித்துப் பார்த்து சரி செய்வேன். கதையின்…

சிறுமியிடம் மாட்டிக்கொண்ட வறுமையும், மனிதாபிமானமும்

கோநா தட்டைத் தட்டியெழுப்பிய தாயின் தாளத்துக்கு இடுப்பசைத்து மெலிதாய் ஆடியபடி கழுத்தை நெரித்துத் தொங்கிய கம்பி வளையத்தை தோள்களைக் ஒடுக்கி, நெஞ்சைக் குறுக்கி, வயிற்றைச் சுருக்கி, கால்வழியேயெடுத்து கக்கத்தில் வைத்துக்கொண்டு சில்லறைத் தட்டை தாயிடம்…

சமையல் யாகத்தின் பலியாடு , ஸ்ரீஜா கதை பற்றி

ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸன் சமையல் யாகத்தின் பலியாடு , கதை ஆசிரியர் நன்றாக ஊசியை சூட்டில் காய்ச்சி பழத்தில் ஏற்றியுள்ளார். மீரா நாயரின் ( WATER) திரை படம் பார்த்து போல் இருந்து..ஒன்ணரை மணி நேரம்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -16

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856–1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “நான் குடி வெறியன் அல்லன். எனக்குக் குடிப்பது ஒரு மனப்போக்கு ! குடித்து விட்டுக் கனவு…