32 சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32

ரேவதி மணியன்


சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் பகுதி 32

இந்த வாரம் च, एव, इति மற்றும் अपि ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.

கீழே உள்ள உரையாடலை கவனிப்போமா ?

वरुणः – ” भोः मित्र ! कुत्र गच्छति भवान ?” (“bhoḥ mitra kutra gacchati bhavān ?” )
வருண் – “ ஓ நண்ப ! நீங்கள் எங்கே செல்கிறீர் ?”

कुमारः – “प्रवासार्थं गच्छामि !” (” pravāsārthaṁ gacchāmi |”)
குமார் – “ பயணம் செல்கிறேன் “

वरुणः – ” के के गच्छन्ति ?” (” ke ke gacchanti ?”)
வருண் – “யார் யார் செல்கிறார்கள் ?”

कुमारः – “अहं , श्रीनिधिः , भास्करः , विमला च गच्छामः ! मेखला अपि आगच्छामि इति उक्तवती ! सा आगच्छति वा न वा इति न जानामि !”
(” ahaṁ śrīnidhiḥ bhāskaraḥ vimalā ca gacchāmaḥ | mekhalā api āgacchāmi iti uktavatī | sā āgacchati vā na vā iti na jānāmi |”)

குமார் – “ நான், ஸ்ரீநிதி, பாஸ்கர் மற்றும் விமலா செல்கிறோம். மேகலா கூட வருகிறேன் என்று சொன்னாள். அவள் வருகிறாளா வரவில்லையா என்று எனக்குத் தெரியாது.”

वरुणः – ” सा न आगच्छति एव ! ” (“sā na āgacchati eva |”)
வருண் – “அவள் வரமாட்டாள்”

कुमारः – ” भवान् कथं जानाति ?” (” bhavān kathaṁ jānāti ?”)
குமார் – “ உங்களுக்கு எப்படித் தெரியும் ?”

वरुणः – ” तस्याः गृहे कोऽपि कार्यक्रमः अस्ति ! अतः सा प्रवासार्थम् आगन्तुं न शक्नोति !”
(” tasyāḥ gṛhe ko’pi kāryakramaḥ asti | ataḥ sā pravāsārthaṁ āgantuṁ na śaknoti |”)

வருண் – “ அவளுடைய வீட்டில் ஏதோ விஷேசம் இருக்கிறது. அதனால் அவள் பயணத்திற்கு வர முடியாது. “

कुमारः – “एवं वा ? कः कार्यक्रमः ? (” evaṁ vā kaḥ kāryakramaḥ ? “)
குமார் – “ அப்படியா ? என்ன விஷேசம் ?”

वरुणः – ” तस्याः भ्रातुः जन्मदिनम् ! ” (” tasyāḥ bhrātuḥ janmadinam |” )
வருண் – “அவளுடைய சகோதரனின் பிறந்தநாள். “

कुमारः – “तर्हि सा न आगच्छति एव ! वयं गच्छामः !” (” tarhi sā na āgacchati eva | vayaṁ gacchāmaḥ |” )
குமார் – “ அப்படியானால் அவள் வரமாட்டாள். நாம் செல்வோம்.”

च (ca ) மற்றும்

1. रामः कृष्णः गोविन्दः च गच्छन्ति ! (rāmaḥ kṛṣṇaḥ govindaḥ ca gacchanti |)
ராமன், கிருஷ்ணன் மற்றும் கோவிந்தன் செல்கிறார்கள்.
2. बालकः संस्कृतं गणितं विज्ञानं च पठति ! (bālakaḥ saṁskṛtaṁ gaṇitaṁ vijñānaṁ ca paṭhati |)
சிறுவன் சமஸ்கிருதம், கணிதம் மற்றும் விஞ்ஞானம் படிக்கிறான்.

च (ca ) அதாவது ’மற்றும்’ என்பது முதல் வாக்கியத்தில் எழுவாயின் இறுதியிலும் , இரண்டாவது வாக்கியத்தில் செயப்படுபொருள்களின் இறுதியில் இருப்பதையும் காணலாம். ‘रामः कृष्णः च गोविन्दः गच्छन्ति ! ’ என்பது தவறான வாக்கியம். தமிழ் ,கன்னட, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் ’மற்றும்’ என்பது வாக்கியத்தின் மத்தியில் வருவதை கவனிக்கவும்

एव (eva) மட்டும்
1. रामः अन्नम् एव खादति ! (rāmaḥ annam eva khādati |) ( फलं रोटिकां वा रामः न खादति इत्यर्थः !)
ராமன் சாதம் மட்டும் சாப்பிடுகிறான். (ராமன் பழமோ ரொட்டியோ சாப்பிடவில்லை என்று பொருள்.)

2. रामः एव फलं खादति ! (rāmaḥ eva phalam khādati |) ( कृष्णः गोविन्दः वा फलं न खादति इत्यर्थः ! )
ராமன் மட்டும் பழம் சாப்பிடுகிறான். (கிருஷ்ணனோ, கோவிந்தனோ பழம் சாப்பிடவில்லை என்று பொருள். )

3. रामः फलं खादति एव ! (rāmaḥ phalam khādati eva |) ( रामः न पश्यति, न ददाति , अपि तु खादति एव इति अर्थः !)
ராமன் பழத்தை உண்ணும் செயல் மட்டும் தான் செய்கிறான். (ராமன் பார்க்கவில்லை, கொடுக்கவில்லை ஆனால் சாப்பிடுகிறான்தான் என்று பொருள்)

மேலே உள்ள உதாரணங்களில் இருந்து ‘एव’ (eva) என்பதை வாக்கியத்தில் எங்கு சேர்க்கிறோமோ அதற்குத் தகுந்தாற்போல் வாக்கியத்தின் அர்த்தம் மாறுவதை கவனிக்கவும்.

इति (iti )என்று

1. ‘ सत्यं वद ! धर्मं चर ! ‘ इति तैत्तिरियोपनिषत् वदति ! (‘ satyaṁ vada | dharmaṁ cara |’ iti taittiriyopaṇiṣat vadati |)
“உண்மை பேசு ! தர்மத்தை பின்பற்று !’ என்று தைத்திரிய உபநிடதம் சொல்கிறது.

2. ‘उत्तिष्ठत जाग्रत’ इति स्वामी विवेकानन्दः वदति ! (‘ uttiṣṭhata jāgrata ‘ iti svāmī vivekānandaḥ vadati |)
“எழுமின் , விழிமின்” என்று சுவாமி விவேகானந்தர் சொல்கிறார்.

अपि (api) கூட

1. रामः अपि फलं खादति ! (rāmaḥ api phalaṁ khādati |)
ராமன் கூட பழம் சாப்பிடுகிறான்.

2. रामः फलं अपि खादति ! (rāmaḥ phalam api khādati |)
ராமன் பழம் கூட சாப்பிடுகிறான்.

3. रामः फलं खादति अपि ! (rāmaḥ phalaṁ khādati api |)
(रामः फलं पश्यति, ददाति, सङ्गृह्णाति ! तथैव खादति अपि इत्यर्थः)
(rāmaḥ phalaṁ paśyati dadāti aṅgṛhṇāti | tathaiva khādati ityarthaḥ)
(ராமன் பழத்தை பார்க்கிறான், கொடுக்கிறான், சேகரிக்கிறான். அதுபோல சாப்பிடுகிறான். )
ராமன் பழம் சாப்பிடுகிறான் கூட .

4. कृष्णः फलं खादति ! रामः अपि फलं खादति ! (kṛṣṇaḥ phalaṁ khādati | rāmaḥ api phalaṁ khādati |)
கிருஷ்ணன் பழம் சாப்பிடுகிறான் . ராமன் கூட பழம் சாப்பிடுகிறான்.

5. सः कथां पठति ! सः कविताम् अपि पठति ! (saḥ kathāṁ paṭhati | saḥ kavitām api paṭhati |)
அவன் கதை படிக்கிறான். அவன் காவியம் கூட படிக்கிறான்.

अभ्यासः 1 (abhyāsaḥ 1) பயிற்சி 1

अधः लघुवाक्यानि सन्ति ! ‘च’कारं प्रयुज्य तानि एकवाक्यत्वेन लिखन्तु ! (adhaḥ laghuvākyāni santi | ca kāraṁ prayujya tāni ekavākyatvena likhantu |)
கீழே சுலபமான வாக்கியங்கள் இருக்கின்றன. ‘மற்றும்’ என்பதை உபயோகித்து ஒரே வாக்கியமாக எழுதுங்கள்.

उदा – विष्णुः गच्छति ! श्रीधरः गच्छति ! श्रीशः गच्छति ! (viṣṇuḥ gacchati | śrīdharaḥ gacchati | śrīśaḥ gacchati |)
विष्णुः श्रीधरः श्रीशः च गच्छन्ति ! (viṣṇuḥ śrīdharaḥ śrīśaḥ ca gacchanti |)

உதா – விஷ்ணு செல்கிறான் . ஸ்ரீதர் செல்கிறான். ஸ்ரீஷ் செல்கிறான்.
விஷ்ணு ஸ்ரீதர் மற்றும் ஸ்ரீஷ் செல்கிறார்கள்.

1. सीता पठति ! गीता पठति ! लता पठति ! (sītā paṭhati | gītā paṭhati | latā paṭhati |)
சீதா படிக்கிறாள். கீதா படிக்கிறாள். லதா படிக்கிறாள்.

2. अहं फलं खादामि ! मधुरं खादामि ! रोटिकां खादामि ! (ahaṁ phalaṁ khādāmi | madhuraṁ khādāmi | roṭikāṁ khādāmi |)
நான் பழம் சாப்பிடுகிறேன். இனிப்பு சாப்பிடுகிறேன். ரொட்டி சாப்பிடுகிறேன்.

3. बालकाः क्रीडन्ति ! बालिकाः क्रीडन्ति ! तरुणाः क्रीडन्ति ! (bālakāḥ krīḍanti | bālikāḥ kriḍanti | taruṇāḥ krīḍanti |
சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.சிறுமிகள் விளையாடுகிறார்கள். இளவயதினர்கள் விளையாடுகிறார்கள்.
4. बान्धवाः मैसूरुतः आगताः ! मद्रास्तः आगताः ! देहलीतः आगताः ! ( bāndhavāḥ maisūrutaḥ āgatāḥ | madrāstaḥ āgatāḥ | dehalītaḥ āgatāḥ )
சொந்தக்காரர்கள் மைசூரிலிருந்து வந்திருக்கிறார்கள். மதராஸிலிருந்து வந்திருக்கிறார்கள். டெல்லியிலிருந்து வந்திருக்கிறார்கள்.

5. भवान तस्य कार्यं करोतु, मम कार्यं करोतु, एतस्य कार्यं करोतु ! (bhavān tasya kāryaṁ karotu, mama kāryaṁ karotu , etasya kāryaṁ karotu !)
நீங்கள் அவனுடைய வேலையை செய்யுங்கள், என்னுடைய வேலையை செய்யுங்கள், இவனுடைய வேலையை செய்யுங்கள்.

अभ्यासः 2 (abhyāsaḥ 2) பயிற்சி 2

उदारणानुसारं वाक्यानि रचयन्तु ! (udāraṇānusāraṁ vākyāni racayantu |)
உதாரணத்தைப் பார்த்து வாக்கியங்களை அமைக்கவும்.

उदा – रामः गच्छति ! कृष्णः गच्छति ! (rāmaḥ gacchati | kṛṣṇaḥ gacchati |)
रामः गच्छति ! कृष्णः अपि गच्छति ! (rāmaḥ gacchati kṛṣṇaḥ api gacchati |)

உதா – ராமன் செல்கிறான். கிருஷ்ணன் செல்கிறான்.
ராமன் செல்கிறான். கிருஷ்ணன் கூட செல்கிறான்.

1. बालिकाः क्रीडन्ति ! बालकाः क्रीडन्ति ! (bālikāḥ krīḍanti | bālakāḥ krīḍanti |)
சிறுமிகள் விளையாடுகிறார்கள். சிறுவர்கள் விளையாடுகிறார்கள்.

2. अहम् इतिहासं पठामि ! विज्ञानं पठामि ! (aham itihāsaṁ paṭhāmi | vijñānaṁ paṭhāmi |)
நான் இதிகாசம் படிக்கிறேன். விஞ்ஞானம் படிக்கிறேன்.

3. सः द्विचक्रिकया गच्छति ! कार्यानेन गच्छति ! (saḥ dvicakrikayā gacchati | kāryānena gacchati |)
அவன் சைக்கிளில் செல்கிறான். காரில் செல்கிறான்.

4. कुटुम्बस्य पोषणं करोतु ! समाजस्य पोषणं करोतु ! (kuṭumbasya poṣaṇaṁ karotu | samājasya poṣaṇaṁ karotu |)
குடும்பத்தை பேணி வளர். சமூகத்தைப் பேணி வளர்.
5. सः पठनं जानाति ! सम्भाषणं जानाति ! (saḥ paṭhanaṁ jānāti | sambhāṣaṇaṁ jānāti |)
அவனுக்குப் படிக்கத் தெரியும். பேசவும் தெரியும்.

कथा (kathā)
गणेशः (gaṇeśaḥ)
गणेशः गुहः च परमेश्वरस्य पार्वत्याः च पुत्रद्वयम् ! एकदा नारदः कैलासपर्वतम् आगतवान् ! सः एकम् उत्तमं फलं परमेश्वराय दत्तवान् ! ‘फलं एकम् एव! मम तु पुत्रद्वयम् ! किं करोमि ?’ इति शिवः चिन्तितवान् ! अन्ते सः ‘एकां परीक्षां करोमि ‘ इति निश्चितवान् ! पुत्रद्वयम् आहूय – ‘ यः एतस्य लोकस्य प्रदक्षिणं प्रथमं करोति , तस्मै एव फलं ददामि ‘ इति उक्तवान् !
सुब्रह्मण्यः मयूरम् आरूह्य लोकस्य प्रदक्षिणं कर्तुम् उद्युक्तः अभवत् !
विघ्नेश्वरः तथा कर्तुं न शक्तः , यतः तस्य शरीरं स्थूलम् आसीत् , तस्य वाहनं तु मन्दं गच्छति ! क्षणं चिन्तयित्वा सः जनकं पृष्टवान् , “हे जनक! एतस्मात् लोकात श्रेष्ठतरः कः ?” इति ! शिवः उत्तरं दत्तवान् – “पिता माता इति द्वयम् एव लोकात् श्रेष्ठतरम् ” इति ! ‘मातापितृप्रदक्षिणं करोमि चेत् , तत् कार्यं लोकप्रदक्षिणस्य समम् एव ‘ इति चिन्तयित्वा गणेशः तथा कृतवान् ! सन्तुष्टः शिवः तस्मै एव फलं दत्तवान् !

gaṇeśaḥ guhaḥ ca parameśvarasya pārvatyāḥ ca putradvayam| ekadā nāradaḥ kailāsaparvatam āgatavān | saḥ ekam uttamaṁ phalaṁ parameśvarāya dattavān | phalaṁ ekam eva | mama tu putradvayam| kiṁ karomi iti śivaḥ cintitavān| ante saḥ ekāḥ parīkṣāṁ karomi iti niścitavān | putradvayam āhūya – ‘ yaḥ etasya lokasya pradakṣiṇaṁ prathamaṁ karoti tasmai eva phalaṁ dadāmi’ iti uktavān|

subrahmaṇyaḥ mayūram ārūhya lokasya pradakṣiṇaṁ kartum udyuktaḥ abhavat |

vighneśvaraḥ tathā kartuṁ na śaktaḥ yataḥ tasya śarīraṁ sthūlam āsīt tasya vāhanaṁ tu mandaṁ gacchati | kṣaṇaṁ cintayitvā saḥ janakaṁ pṛṣṭavān ”he janka| etasmāt lokāt śreṣṭhataraḥ kaḥ” iti | śivaḥ uttaraṁ dattavān ”pitā mātā iti dvayam ev lokāt śreṣṭhataram” iti |”matāpitṛpradakṣiṇaṁ karomi cet tat kāryaṁ lokapradakṣiṇasya samam eva” iti cintayitvā gaṇeśaḥ tathā kṛtavān | santuṣṭaḥ śivaḥ tasmai eva palaṁ dattavān |

கணேசன் மற்றும் குகன் பார்வதி பரமேஸ்வரனுடைய இரு குழந்தைகள். ஒருமுறை நாரதர் கைலாசம் வந்தார். அவர் ஒரு நல்ல பழம் பரமேஸ்வரனுக்குக் கொடுத்தார். ‘பழம் ஒன்று மட்டுமே உள்ளது. எனக்கு இரு புத்திரர்கள் இருக்கிறார்கள் , என்ன செய்வேன் ?” என்று சிவன் யோசித்தார். இறுதியில் அவர், “ஒரு தேர்வு செய்கிறேன் ‘ என்று நிச்சயம் செய்தார். புதல்வர்கள் இருவரையும் அழைத்து ,’ யார் இந்த உலகத்தை முதலில் வலம் வருகிறீர்களோ அவர்களுக்குத்தான் பழம் கிடைக்கும்’ என்று கூறினார்.

சுப்பிரமணியன் மயில் மேல் அமர்ந்து உலகத்தை சுற்றிவர ஆயத்தமானார்.

விக்னேஷ்வரர் அப்படிச் செய்ய முடியாது ஏனெனில் அவருடைய சரீரம் பெரியதாக இருந்தது , அவருடைய வாஹமோ மெதுவாக செல்லக்கூடியது. ஒரு கணம் சிந்தித்துவிட்டு அவர் அப்பாவிடம் , ”அப்பா ! இந்த உலகத்தைவிட மேன்மை உடையவர்கள் யார் ?” என்று கேட்டார். சிவன் , ”அப்பா அம்மா இருவர்தான் உலகத்தைவிட மேன்மை உடையவர்கள்” என்று பதில் அளித்தார். தாய்தந்தையரை வலம் வந்தால் அந்த காரியம் உலகத்தை வலம் வந்ததற்குச் சமம் “ என்று நினைத்து கணேசன் அதுபோலவே செய்தார். மகிழ்ச்சியடைந்த சிவன் அவருக்கு பழத்தைக் கொடுத்தார்.

Series Navigation<< விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு<< பேய்த்தேர் வீதி<< சாரல்களின் மெல்லிசை<< திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்<< தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்<< இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா<< ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5<< மாயை….<< இசை நடனம்<< மிஸ்டர்.நான்!<< முகம்<< பறவை , பட்டம் மற்றும் மழை<< வாசல் நிழல்..<< நாகரிகம்<< சுயம்<< ‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்<< பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்<< தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்<< இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…<< தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)<< இரவு நெடுக..<< சொர்க்கத்தின் குழந்தைகள்<< தக்காளிக் கனவுகள்<< ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து<< ப.மதியழகன் கவிதைகள்<< கொஞ்சம் கிறுக்கல்<< ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்<< இரங்கலுக்கு வருந்துகிறோம்<< உன்னுடையது எது.<< நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)<< கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு<< மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..<< தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்<< வழிவிடுங்கள்….கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1) >>

This entry is part 1 of 39 in the series 20110410_Issue

ரேவதி மணியன்

ரேவதி மணியன்