கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -7)

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


************************************
ஆண்மையின் குறைபாடு !
************************************

(சென்ற வாரத் தொடர்ச்சி)

+++++++++++

சினமுற்றுச் சீறுவான் காலி•ப் !
முணுமுணுக் கும் பெண் குரல்
வைக்கோல்
பாயின் கீழ் எழுமோர்
பாம்பென நினைப்பான் வேந்தன் !
ஆண்குறி தயங்கி
வணங்கு வதை நகையாடி
வக்கணை அடிப்பாள்
அணங்கு !
பொக்கெனச் சிரிப்பாள்
பொங்கும் அலைகள் போல் !
முன்பொரு நாள் காலி•ப்
சிங்கத்தைக் கொல்லும் போது
அங்கம் நிமிர்ந்தை
சிந்தித்துப் பார்த்தாள் !
சிரிப்பொலிகள் வெடித்துச்
சிதறும்
பெண்ணின் வாயில் !

++++++++++++++

செவ்விளங் கன்னியவள்
சிரிக்கச் சிரிக்க
சினம் மிகுந்திடும் வேந்தனுக்கு
மருந்து தின்னத் தின்ன
மதி சுழல்வது போல !
மங்கையின் நகைப்புக் கிடமாகும் !
ஒவ்வோர் உணர்ச்சிக்கும்
ஓர் ஊற்றுள்ளது
மூல வேராய் !
திறவு கோலும் உள்ளது
மூடியைத் திறக்க !
கடுஞ்சின முற்றான் காலி•ப் !
கத்தியை உருவினான் :
“என்ன சிரிப்புனக்கு இதிலே ?
என்னிடம் சொல்
நினைப் பதை எல்லாம் !
ஒளிமறை வின்றிச் சொல் !
உணர்ச்சி வசப்பட வில்லை நான் !
எச்சரிக்கை இது :
பொய் சொன்னால்
போய்விடும் உன் தலை !
உண்மை கூறினால்
உனக்கு விடுதலை கிடைக்கும் !

(தொடரும்)

***************
தகவல் :

1. Holy Fire – Nine Visionary Poets & the Quest of Enlightment Edited By : Daniel Halpern (1994)

Jelaluddin Rumi’s Poem Translated By : Robert Bly.

2. The Essential Rumi – Tranlation By : Coleman Marks with John Moyne, A.J. Arberry & Rennold Nicholson (1996)

3. Life of Rumi in Wikipedia

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] (February 28, 2011)

Series Navigation<< நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -1

This entry is part 5 of 37 in the series 20110306_Issue

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா