அடங்கிய எழுத்துக்கள்

ஹேமா(சுவிஸ்)


உரத்துக் குரலிட்ட
பேனாக்களை
வானரங்கள் உடைத்து
மையை உறிஞ்ச
மௌனித்த செய்திகள்.

யாருமில்லாப் பொழுதில்
அலைகள்
சப்பித் துப்பிய சிப்பிகள்
கீறிப்போயின
கவிதையின் தொங்கல்கள்.

மிஞ்சிய காகிதத்தில்
தொடக்கங்கள்
தொங்கல்களோடு இணைய
இனி ஒருக்காலும்
வரப்போவதில்லை
அந்தப் பேனாக்கள்
செய்திகளிலும்கூட!!!

Series Navigation<< வேரற்ற மரம்பண்பாட்டு உரையாடல் >>

This entry is part 71 of 43 in the series 20110529_Issue

ஹேமா(சுவிஸ்)

ஹேமா(சுவிஸ்)