தக திமி தா

ஷம்மி முத்துவேல் ..


பொய்மைகள் திரை கட்டி
உடல் மறைத்த கூடு
சட்டமிட்ட மனமெனும்
பெட்டியினுள் ஓர் உக்கிர நடனம்

ஊழித்தாண்டவம்
தீப்பொறி கிளப்ப
உணர்வுகள் கொண்டு தீட்டிய
கூரிய போர்வாள்

சிறிதும் அயர்வின்றி சுழற்றப்பட
இரத்தக்களரியானது நெஞ்சம் முழுவதும்
காயங்கள் வெளித் தெரியாதிருக்க

உலர்ந்து வறண்ட உதடுகளில்
புன்னகை சாயம்
அதிலும் தெறிக்கும் சிவப்பாய்
குருதி வர்ணம்
அனல்களில் ஆகுதி கொடுக்கப்பட
சாம்பலானது பிண்டமெனும்
மெய்

ஷம்மி முத்துவேல் ..

Series Navigation<< மிச்சம் !இருள் போர்வைகளின் முடிச்சுக்கள் >>

This entry is part 67 of 43 in the series 20110529_Issue

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்