இருள் போர்வைகளின் முடிச்சுக்கள்

ஷம்மி முத்துவேல்இருள் போர்வைகளின் முடிச்சுக்களிறுகி
சிக்கலாகுகையில்
சுவாசமோர் விசையில்
மென்காற்றாகவோ புயல்மழையாகவோ
ஏன் பெருமூச்சாகவும்
இருத்தல் கூடும் .

ஒரு கயிற்றின் வழியில்
இரு முனைகளாக வழிந்தோடுமவை
வெவ்வேறு கோணங்கள் தீண்டி
ஒரு மையப்புள்ளியில் ஒன்றுபட
இரு எல்லைகளில் உருட்டப்பட்ட புள்ளிகளாக
மீளவும் சிக்கல்கள்
பிரிக்கப்படாமல்
அவள்
மற்றும்
அவன் ….

-ஷம்மி முத்துவேல்

Series Navigation<< தக திமி தாவட்டத்தில் புள்ளி >>

This entry is part 68 of 43 in the series 20110529_Issue

Comments are closed, but trackbacks and pingbacks are open.